எங்க மிஸ்ஸிட்ட ஒரு நாள் நான் கேட்டன்...
“ஏன் மிஸ் கண்ணப்பர் கூட கடவுளுக்கு மாமிசம் தானே படைச்சார்? அப்புறம் நாங்க மட்டும் ஏன் மச்சம் சாப்பிடக்கூடாது” எண்டு..
மிஸ் சொன்னா...
“கண்ணப்பர் தன்ர கண்ணை இடந்து வைச்சார்... உம்மாலயும் இடந்து வைக்க முடியும் எண்டா சாப்பிடலாம்...”
என்னால அதை ஏத்துக்கொள்ள ஏலலை...
அப்புறம் சொன்னா...
“கண்ணப்பரின்
பக்தி - அன்பு எண்டுறது அவர் படைச்ச மாமிசத்தில இல்லை... கடவுளுக்கு
கண்ணால ரத்தம் வந்தப்போ தன்ர கண்ணை இடந்து வைக்கத் துணிஞ்சதில தான்
இருக்கு... கடவுள் எங்களிட்ட எதிர்பார்க்குறது அந்த அன்பைத் தான்”...
என்
தங்கச்சிட்ட அதை சொன்னன்... அது கேட்குது.... கண்ணப்பர் அந்தக் காலத்திலயே
கண்மாற்று சத்திரசிகிச்சை தெரிஞ்சு வைச்சிருக்காரு.. ஹீ இஸ் கிரேட்
எண்டுட்டுது....
No comments:
Post a Comment