Thursday, June 30, 2016

கடவுளை எப்ப காணலாம்?

ஒரு சீடனுக்கு சந்தேகம் வந்திச்சு... கடவுளை எப்ப காணலாம் அப்பிடின்னு.. ஆத்துக்க நிண்டு சூரிய நமஸ்காரம் செய்ஞ்சுட்டிருந்த குருவிட்டப் போய்க் கேட்குறாரு... உடனே அவர் சீடனின்ர தலையை தண்ணிக்க போட்டு அமத்துறார்... மூச்சுத் திணறுறான் சீடன்....

கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் விட்டுறார்... கேட்கிறார்...

”நான் தண்ணிக்க உன்னை அமத்தி வைச்சிட்டிருந்தப்போ நீ என்ன நினைச்சாய்” எண்டு...

”எப்ப என்னை வெளிய விடுவீங்க எண்டு நினைச்சன்” எண்டு...

”எவ்வளவு துடிப்போட முனைப்பா எப்ப விடுவேன்னு ஊன்றி நினைச்சியோ அதேயளவு கடவுளைக் காணணும் எண்டு எப்ப நினைக்குறியோ அப்ப கடவுளைக் காண்பாய்” என்று புன்முறுவல் பூக்கிறார் குரு...

No comments:

Post a Comment