அன்னை அன்னை அன்னை
அன்னை
அம்பிகைக்கு மங்களம்
ஆதிசக்தி அம்பிகைக்கு
அனந்தகோடி மங்களம்
என்னுளே விளங்கும்
ஈஸ்வரிக்கு மங்களம்
இச்சையாவும் முற்றுவிக்கும்
கிற்திவைக்கு மங்களம்
தாழ்விலாத தன்மையும்
தளர்ச்சியற்ற வன்மையும்
வாழ்வினால் பயன்களும்
என் வாக்கிலே வரங்களும்
பக்தியிற் கசிந்தமைந்து
பாடுகின்ற பான்மையும்
பாடுவோர்க் கனேத
போக பாக்கியங்கள் மேன்மையும்
என்றும் ஓங்க
என் கரத்தியற்கையான சித்தியைத்
தந்து ஞான மூர்த்தியாய்
தனித்து வைத்த சக்தியாம்
நாமகீர்த்தனம்
பரந்து நாடெல்லாம் செழிக்கவும்
வேறிடாத இன்பம்
பொங்கி வீடெல்லாம் விளங்கவும்
ஞானதீபமேற்றி
யென்றும் நாமகீதம் பாடுவோம்
தர்ம சக்தி வாழ்கவென்று
சந்நதம் கொண்டாடுவோம்
ஓம் திரயம்பகம்
யஜாமஹே
சுகந்திம் புஸ்டி
வர்தனம்
உர்வாருக மிவபந்தனாத்
ம்ருத்யோர் முக்சீய
மாம்ருதாத்
ஓம் சாந்தி! சாந்தி!
சாந்தி!
No comments:
Post a Comment