Thursday, November 10, 2022
அஷ்டாங்கயோகம் - சிவன் கதையில் இருந்து
1. இயமம்: செய்யும் வேலையை உணர்ந்து செய்தல். மன ஒருமைப்பாடு. செயல்களில் ஏற்படும் தூய்மை -> எண்ணங்களில் தூய்மையை கொடுக்கும் (உணர்ந்து குளித்தல்)
1. அகிம்சை: செயலிலோ அல்லது நினைப்பிலோ பிறருக்கு ஊறு விளைவிக்காத செயல். (கொல்லாமை) - (பாம்பை கொல்லாமல் கை கூப்பி வணங்கி செல்ல அனுமதித்தல்)
3. கள்ளாமை: திருடல் இன்மை
4. காமமின்மை: பாலியல் உணர்வைத் தவிர்த்து சக்தியைத் தேக்கி வைத்தல்
5. பேராசையின்மை
2. நியமம்: ஒழுக்க விதிமுறைகளை வழுவாது கடைப்பிடித்தல். உள்ளத்தைத் தூய்மையாக வைத்திருத்தல், தவம், பெற்றது கொண்டு மகிழ்தல், தெய்வம் வழிபடல், தான் பசித்தும் பிற உயிருக்கு உணவளித்து மகிழ்தல் போன்றன நியமத்துள் அடங்குகின்றன.
3. ஆசனம்: இறையை எண்ணி தீப ஒளியை பார்த்து சுக துக்கம் மறந்து தியானம் செய்தல். குரு தீட்சை, காலை நீட்டி அமர்ந்து கைகளால் காலை தொடுதல், மரம் ஒன்றின் முன் நின்று, மனதை மரத்தில் வைத்துக் கொண்டு கையை கூப்பியபடி ஒற்றைக் காலில் நிற்றல், பத்மாசனத்தில் அமர்ந்து கைகளை மேலே கூப்பி மலை போல் ஆகுதல்
4. பிரணாயாமம்: மூச்சுப் பயிற்சி. தொடர்ந்து செய்ய வேண்டும். சக்தியை தாங்க உடம்புக்கு வலிமை தேவை. ஆன்மிக சக்தி ஒருங்கிணைப்பு.
5. பிரத்தியாகாரம்: மகா முத்திரை. ஓம். சாம்பவ முத்திரை. மூன்றாம் கண்ணை உணர்ந்து தியானித்தல். ஆத்ம சக்தியை செயற்படுத்த தொடங்குதல்.
6. தாரணை: ஒரு பொருளின் குணநலன்கள் மீது ஒருமைப்பாடு கொள்வதால் அந்த பொருளின் குணநலன்கள் கிடைக்கும். தாமரையை பார்த்துக் கொண்டு அதன் குணநலன்கள் மீது கவனம் பதித்து, ஓம் என்று கூறிக் கொண்டு மூச்சு செல்லும் வழியை கவனித்தல் (மூச்சு, உடலின் எந்தப் பகுதியில் எங்கு சென்று சேர்கிறது)
7. தியானம்: தனக்குள் இறையை உணர்தல்
8. சமாதி: சுயநலம், உணர்ச்சி, எண்ணங்கள் இருக்க கூடாது
Monday, July 23, 2018
கடவுளைக் காண்பது எப்படி?
கடவுளைப் பார்க்கணும் என்று ஒரு பண்டிதர் முயற்சி செய்திட்டிருக்கார்.. கடுமையான விரதங்கள் இருக்கிறார்.. புலாலை விடுறார்.. காமத்தைக் கூட்டும் உணவுகளை விடுறார்.. கோயிலையே சுத்தி சுத்தி வாறார்.. புண்ணிய நதிகளில் நீராடுறார்.. புறத்தூய்மை பேணுறார்.. யாத்திரை போறார்.. எதுவுமே பலன் தரலை.. அவர்ட கனவில் கடவுள் வந்து சொல்லுறார்.. 'கோயில் பின் வீதியில நான் நிற்கிறன் வந்து பார்' எண்டு.. பண்டிதர் ஓடி வாறார்.. பின்வீதியில கசாப்புக் கடைக்காரன் இறைச்சியை வெட்டிட்டிருக்கான்.. அருவருப்பா உணருறார்.. 'இறைச்சி.. அதுவும் கோயிலுக்கு பின்னால வெட்டுறான்.. இவன் விற்குறதால தான் சனம் வாங்கி சாப்பிட்டுக் கெட்டுப் போகுதுகள்.. பாவி.. மற்றவங்களையும் பாவம் செய்யத் தூண்டுறான்' எண்டு முகம் சுளிக்கிறார்.. பண்டிதருக்கு வேற யாரையும் தெரியலை.. நான் ஒரே கடவுள் பற்றி நினைச்சிட்டிருக்கன்.. அதால தான் அப்பிடி கனவு வருது எண்டு திரும்பி போயிடுறார்.. மறுபடியும் போய் படுக்கிறார்.. கனவில கடவுள் வந்து 'என்னடா... என்னைப் பாத்து முகம் சுளிச்சிட்டுப் போறாய்.. ' எண்டுறார்.. பண்டிதருக்கு மண்டை விறைச்சிடுது..
அடுத்தநாள் யாரெண்டே தெரியாத ஒரு ஞானி வாறார் இவரைத் தேடி.. என்னப்பா.. கடவுளைக் கண்டாயாம் எண்டு.. இவர் நடந்ததை சொல்லுறார்.. ஞானி சிரிக்கிறார்.. 'கடவுளை எல்லா இடமும் காணலாம்.. உன்ரை பார்வையை மாத்து' எண்டுறார். கிடைக்காத இடங்களில் அன்பைத் தேடி சலிப்படைந்த ஒருத்தன் எதிர்பாராத ஒருவர் காரணமில்லாம வெள்ளமாக அன்பு செலுத்தும் போது கண்ணீர் சிந்தி பேச்சற்றுப் போறமாதிரி கடவுளை காண எங்கெங்கோ திரிந்து என்னென்னவோ செய்தவர் விக்கிச்சு நிற்குறார்.. 'அப்பிடியே பார்.. கடவுள் உன்ரை ரொட்டியைத் தூக்கிட்டு ஓடுறார்..' எண்டுறார் ஞானி.. திரும்பிப் பார்த்தார் பண்டிதர்.. நாய் ஒண்டு ரொட்டியைக் கவ்விட்டு ஓடுது.. இவர் நெய்யைத் தூக்கிட்டே பின்னாலயே ஓடுறார் 'இரு பரம்பொருளே.. வெறும் ரொட்டி திண்டா விக்கும்.. ' எண்டு கத்திக் கொண்டு.. முறுவலித்துக் கொண்டே காற்றில் கரைந்து போறார் ஞானி..
மூலக்கதை ஆறேழு வயசில வாசிச்சது.. திடீரெண்டு ஞாபகம் வரேக்க நமட்டு சிரிப்பு வந்தது.. நாம சரியான வழியில் போறதா நினைச்சிட்டு மற்றவங்களைத் திருத்த முன்னாடி நம்ம சரியா எண்டு உறுதிப்படுத்தணும்.. மூலக்கதையை நான் மனனம் பண்ணலை.. அதுட கருத்து மட்டும்தான் மனசில இருந்திச்சு.. அதனால எக்ஸ்ரா வார்த்தைகளுக்கு மன்னிக்க வேண்டுகிறேன்..
துன்பம் தாங்குவது எப்படி
பண்டிதர் ஒருவர் வாதம் ஒன்றில் கலந்து கொள்ள வேண்டி இருக்கிறது. அவருக்கு கடுமையான வயிற்று வலி. வயிற்றைப் பிடித்துக் கொண்டு போய் அமருகிறார். வாதம் தொடங்க முதல் பக்கத்தில் இருந்த செடி ஒன்றின் அரும்பை கிள்ளி போடுறார். பண்டிதரின் வயிற்று வலி பறந்து போகுது. கிள்ளி போட்ட அரும்பு துடிக்க ஆரம்பிக்குது. வாதத்தில் வெற்றி பெற்றுவிட்டு மறுபடி அந்த அரும்பை கையில் தூக்குறார். இப்ப பண்டிதரின் வயிறு பழைய பல்லவியை ஆரம்பிக்குது. அரும்பின் துடிப்பு அடங்கி விடுகிறது.
ஒருத்தன் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறான். பண்டிதரிட்ட கேட்கிறான். "ஏன்யா.. மறுபடியும் வயிற்றுவலியை வாங்கிக் கொண்டாய்.. அதை அரும்பிட்டையே விட்டுட்டு போயிருக்கலாமே" என்று. பண்டிதர் சொல்கின்றார்.. "இதை பாருப்பா.. இந்த பிறப்பில எனக்கு இந்த மாதிரி வலியை மாத்தி விட தெரிஞ்சிருக்கு.. இப்ப என்னோட வசதிக்கு மாத்தி விட்டிடலாம்.. ஆனா, இந்த வினையை அனுபவிக்க மறுபடியும் பிறந்து வர வேண்டி ஆகிடும். அதனால இப்பவே இதை வைச்சுக்குறன்"
துன்பங்கள் நேரும் போது, வினைப்பயன்.. இப்போதே என் பாவங்கள் அழிகின்றன என்று அதை ஏற்றுக் கொள்வாய் மனமே
நிம்மதிக்கு வழி
ஒரு அரசன் மிகவும் வேலைப்பளுவை உணர்ந்தான்.. அதனால் அவனால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை.. அவனை தேடி ஒரு ஞானி வந்தார்.. அவரிடம் பிரச்சனையை சொல்லி தீர்வு கேட்டான்.. அவர் "இந்த நாட்டை எனக்கு தந்து விடு.. உனக்கு கவலை தீரும்" என்றார்.. அவன் சம்மதித்தான்.. "இதை தந்து விட்டு.. எங்கு போவாய்.. வேறு என்ன வேலை தெரியும்.. எனக்காக இந்த நாட்டை ஆட்சி செய்.. நான் வேறு இடங்களுக்கு போய் விட்டு வருகிறேன்.. எனக்கு நீ என்னென்ன செய்தாய் என்று கணக்கு காட்டு போதும்" என்றார்..
சிறிது காலத்துக்கு பின்னர் திரும்பி வந்தார்.. அரசன் மகிழ்வுடன் வரவேற்றான்.. கணக்குகளை காட்டினான்.. தற்போது கவலையின்றி இருப்பதாக சொன்னான்.. ஞானி புன்னகைத்தார்.. "நீ முன்பு செய்த வேலைக்கும் இப்போது செய்வதற்கும் ஏதும் சம்மந்தம் உள்ளதா" என்று கேட்டார்.. "ஏதும் இல்லை.. " என்றான்.. "நீ வேலைகளை உன் தலையில் கட்டிக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருந்த காரணத்தால் பளுவாக உணர்ந்தாய்.. இப்போது எனக்கு வேலை செய்வதாக நினைத்தாய்.. நிம்மதி பெற்றாய்.. அது போலவே நான் செய்ய வேண்டும் என்று செய்யாமல் கடவுளுக்கு செய்யும் கடமையாக செய்ய வேண்டும்.. செயல்களின் விளைவுகள் நன்மையோ தீமையோ அது கடவுளுக்கு என்று எண்ண வேண்டும்.. அதாவது நான் ஒரு கருவியே.. வேலைக்காரன்.. தந்த வேலையை செய்கிறேன்.. அதன் விளைவு கடவுளை தான் பாதிக்கும்.. அவன் தான் எஜமானன் என்று எண்ண வேண்டும்.. அதுவே நிம்மதிக்கு வழி" என்றார்..
Tuesday, June 19, 2018
கடவுளுக்கு செய்த கர்மா
பாஞ்சாலிட சேலையை உருவுறாங்க.. பாஞ்சாலி கதறுறா.. யாரும் உதவல.. ஒரு கையை பிடிச்சுக் கொண்டு கிருஷ்ணா எண்டு கத்துறா.. கிருஷ்ணன் வரலை.. ரெண்டு கையையும் விட்டுட்டு கிருஷ்ணா எண்டு கைகூப்புறா.. கிருஷ்ணன் சக்கரத்தில இருந்து சேலையை அனுப்பிட்டே இருக்கிறார்.. அதுகூட முன்னர் கிருஷ்ணனுக்கு பாஞ்சாலி ஆடை கொடுத்து உதவிய கடனைத் தான் திருப்பிக் கொடுக்கிறார்..
அது என்ன கதையெண்டா கிருஷ்ணர் குட்டியா இருந்தபோது குளிக்க போற பொண்ணுங்க கரையில வைச்சிட்டுப் போற எல்லா உடுப்பையும் எடுத்து ஒளிச்சு வைச்சிடுவார்.. ஒருநாள் கிருஷ்ணரைப் பழிவாங்க கோபிகைகள் சேர்ந்து அவர் குளிக்கிற நேரம் பாத்து அவரின்ர உடுப்பு எல்லாத்தையும் ஒளிச்சு வைச்சிடுறாங்க.. பொண்ணுங்களாச்சும் அரைகுறை உடுப்போட குளிப்பாங்க.. கிருஷ்ணர் பையன் தானே.. உல்லாசமா சுதந்திரமா குளிச்சிட்டு பாத்தா உடுப்பைக் காணலை.. கோபிகைகள் கைகொட்டி சிரிக்கிறாங்க.. அவருக்கு ஒரே வெக்கமாப் போச்சு.. உனக்கு ஒருநாள் இப்பிடியே விட்டாத்தான் புத்திவரும் எண்டுட்டு எல்லாரும் தங்கட வேலையைப் பாக்கப் போயிடுறாங்க.. பாஞ்சாலி மட்டும் அவருக்கு களவா உடுப்பு கொண்டு வந்து கொடுக்கிறா.. அதுக்கு பிரதியுபகாரமா உனக்கு உடுப்பு தேவைப்படேக்க உடுப்பு கொடுப்பன் எண்டு வாக்குக் குடுக்கிறார்..
அதுசரி.. குடுத்த கடனுக்கு உடுப்பு குடுத்தார் தேவைப்படேக்க.. அது கர்மா.. அதென்ன ரெண்டு கையையும் விட்டாப் பிறகு குடுக்கிறது.. அது தான்யா கடவுளுக்கு உதவி செய்தா வாற கர்மா.. நீ என்னதான் குடு.. அந்த ஆளைத் தவிர உனக்கு யாருமில்லை எண்டு நீ யோசிக்குற வரைக்கும் அந்தாள் வராது.. அவங்களுக்கு வேற உதவி இருக்கு போல.. நம்ம தேவையில்லை.. அதுதான் அவளே ஒற்றைக்கையால பிடிச்சிருக்காளே.. நான் எதுக்கு.. எண்டு யோசிச்சிட்டு பேசாம இருந்திடும்..
சும்மா இரு
நாம் வெவ்வேறு நோக்கத்திற்காக படைக்கப் பட்டிருக்கிறோம்.. மற்றவர்களைப் பின்பற்ற முன்னர் அவர்கள் போகும் வழியும் நாம் படைக்கப்பட்ட நோக்கமும் ஒன்றா எனக் கண்டறிவது நலம்.. கண்டறிந்தாலும் அவர்கள் போகும் வழி எங்களுக்கு ஏற்றதா என ஆராய்வது நலம்.. நாங்கள் எதற்காக படைக்கப்பட்டோமோ அதை செய்வதற்கான தயார்படுத்தலை பிரபஞ்சம் மேற்கொள்ளும்... எது அந்தக் கடமையை செய்ய நமக்குத் தேவையோ அது நம்மைத் தேடிவரும்.. அதற்கான ஆர்வம் இயல்பாகவே அமைந்திருக்கும்.. கல்வி கற்றல், வேலை செய்தல் போன்றவற்றைத் தாண்டி இறைவனை அடையும் பாதை அந்த கடமையைச் செய்வதேயாகும்.. உனக்கு பிரியமானதை செய்யாமல், அது இதுவா அதுவா எது என அலைந்து திரியாமல் 'சும்மா இரு'ப்பாயாக..
எங்கே கொடுத்து எங்கே வாங்குகிறான்
அம்புகள் தைத்தும் மரணம் தீண்டாமல் இருக்கும் கர்ணனை பார்க்க கிருஷ்ணர் வருகிறார் வயதான அந்தணர் வேடம் பூண்டு. அவன் செய்த தருமம் அனைத்தையும் தானமாக வாங்கி விட மரணம் அவனை தழுவிக் கொள்கிறது. மகாவிஷ்ணுவை மரணிக்கும் சமயம் தரிசித்து முக்தி பெற்று அவரோடு ஐக்கியம் ஆகி விடுகிறான் கர்ணன். அவன் பாவங்கள் அவன் அப்பிறவியில் பட்ட பாட்டிலையே தீர்ந்து விட்டது. எஞ்சி இருந்தவை புண்ணியங்கள்.. அதனை கிருஷ்ணர் தானமாக பெறாவிடின் அவன் மறுபிறவியில் புண்ணிய பலனாய் உயர்வான வாழ்வை பெற்றிருப்பான்.. துன்பமற்ற வாழ்வில் அவன் புதிதாக பாவங்களையும் புண்ணியங்களையும் சேர்த்துக் கொண்டிருக்க கூடும்.. பாவங்கள் துன்பத்தையும் புண்ணியங்கள் இன்பத்தையும் தான் வழங்க முடியும். இன்பதுன்பமற்ற பெருவாழ்வை பெற வேண்டுமெனில் இரண்டையும் வைத்திருக்கலாகாது. அதனாலேயே மாயவன் புண்ணியங்களை வாங்கி பெற்றார்..
அப்படியான புண்ணியத்தில் இருந்து தான் அசுவத்தாமன் கொன்ற உத்தரையின் மகனுக்கு உயிர் கொடுத்தார்.. ஜீவன் முத்தி வேண்டுபவர்கள் தங்கள் பாவங்களை அனுபவித்து கரைத்த பின்னர் தங்கள் புண்ணியங்களை கடவுளுக்கே ஒப்புக் கொடுக்கிறார்கள்.. புண்ணியங்களை வைத்து அவர் என்ன செய்வது..? இப்படி ஏதும் நல்ல காரியம் செய்ய வேண்டியது தான்..
Thursday, June 30, 2016
மாமிசம் வேணாம்கிறீங்க... கண்ணப்பர் படைக்காத மாமிசமா?
“ஏன் மிஸ் கண்ணப்பர் கூட கடவுளுக்கு மாமிசம் தானே படைச்சார்? அப்புறம் நாங்க மட்டும் ஏன் மச்சம் சாப்பிடக்கூடாது” எண்டு..
மிஸ் சொன்னா...
“கண்ணப்பர் தன்ர கண்ணை இடந்து வைச்சார்... உம்மாலயும் இடந்து வைக்க முடியும் எண்டா சாப்பிடலாம்...”
என்னால அதை ஏத்துக்கொள்ள ஏலலை...
அப்புறம் சொன்னா...
“கண்ணப்பரின் பக்தி - அன்பு எண்டுறது அவர் படைச்ச மாமிசத்தில இல்லை... கடவுளுக்கு கண்ணால ரத்தம் வந்தப்போ தன்ர கண்ணை இடந்து வைக்கத் துணிஞ்சதில தான் இருக்கு... கடவுள் எங்களிட்ட எதிர்பார்க்குறது அந்த அன்பைத் தான்”...
என் தங்கச்சிட்ட அதை சொன்னன்... அது கேட்குது.... கண்ணப்பர் அந்தக் காலத்திலயே கண்மாற்று சத்திரசிகிச்சை தெரிஞ்சு வைச்சிருக்காரு.. ஹீ இஸ் கிரேட் எண்டுட்டுது....
கடவுளை எவ்வளவு நேசிக்கணும்?
சரியை கடவுளை ஆண்டானாகவும் தன்னை அடிமையாகவும் பாவிக்கிறது... என் கடன் பணி செய்து கிடப்பதே! எண்ட மாதிரி! உரிமை குறைந்த உறவு..
கிரியை எண்டுறது கடவுளை தந்தையாகவும் தன்னை மகனாகவும் பாவிக்கிறது.... உரிமை அதிகம் மகனுக்கு... ஆனா அப்பா சைட்டால கண்டிப்பும் கிடைக்கும்....
யோகம் தோழமை உறவு... என் ஃபிரண்டைப் போல யாரு மச்சான்... உரிமை ரொம்ப அதிகம்.. கண்டிப்பு இல்லை... ஃபிரண்டின்ர பிளேட்டில இருக்குற சாப்பாட்டை ஆட்டயப் போடலாம்.... ஆனாலும் ரெண்டு பேரும் வேற வேற தான்...
ஞானம் இறைவனைத் தலைவனாகவும் தன்னை தலைவியாகவும் நினைப்பது... வேறாயினும் வேறு இல்லை.... உலகத்திலயே உயர்ந்த அன்பாகக் கருதப்படுவது அதைத் தான்... ஒரு பெண் தன் தலைவனுக்காக பலவற்றைத் தியாகம் செய்கிறாள்... காரணம் ஒன்று தான்.. அவன் மீதுகொண்ட அன்பு... அவ்வளவு சிறந்ததா கடவுளை நேசிக்கணும்....
தியானம் வரலையா? - மக்கட்சேவை செய்
“கதவை மூடிட்டு கண்ணை மூடிட்டிருந்தன்... என் மனம் அலைபாயுது... ஒருமுகப் படுத்த முடியலை ” எண்டு...
“மனம் தெளிவு இல்லைன்னா எப்பிடி கொன்சன்றேசன் வரும்... கதவைத் திறந்து வெளிய வா... மக்கட்சேவை செய்... மன அடக்கம் தன்பாட்டில வரும் எண்டுட்டார் விவேகானந்தர்..
இந்தமுறை தப்பலாம்- அடுத்த முறை என்ன செய்வன்?
ஒரு துரும்பைக் கிள்ளிப் பக்கத்தில போட்டுட்டு வாதம் செய்ய உட்காருறார்.... துரும்பு துடிக்குது... பண்டிதருக்கு வலி இல்லை... வாதம் முடிய துரும்பிட்ட இருந்து வலியைத் தான் வாங்கிட்டு வயித்தப் பிடிச்சுட்டுப் போறார் பண்டிதர்....
”எதுக்கு மறுபடி வயித்தப் பிடிச்சுட்டு வறீங்க? அந்தத் துரும்பிட்டையே அதை விட்டுட்டு வந்திருக்கலாமே” எண்டு கேட்கிறாங்க...
அதுக்கு அவர் ”இந்தப் பிறப்பில நான் இதை செய்யலாம்... ஆனா அந்தப் பாவத்தை அனுபவிக்கலைன்னா அதை அனுபவிக்க மறுபடி பிறக்கணுமே.... அதுக்கு இதே பரவால்ல...” எண்டுறார்...
உன்னைத் தெய்வமெனக் கொள்
உண்மை அது அல்லவே... தெய்வ சன்னிதியில் தெய்வத்தினை திட்டுகிறார்கள்.. போற்றுகிறார்கள்... பிஸினஸ் டீல் பேசிக் கொள்கிறார்கள்.. கேள்வி கேட்கிறார்கள்... தெய்வம் தண்டிக்கும் என்று வேறு சொல்கிறார்கள்... தெய்வம் எதையும் கண்டு கொள்வதில்லை.. ஜாலியாக இருக்கிறது.. பால் ஊத்துறவன், அர்ச்சனை ரிக்கற் வாங்கினவன், பிக்பாக்கட் அடிக்குறவன், நகை திருடிகள் எல்லாரும் வாறாங்க போறாங்க.. தெய்வம் அவர்களைப் பாத்து தனக்குள் சிரித்துக் கொள்கிறது.. எல்லாருக்கும் வேற வேற இடத்தில விதிக்கணக்கு இருக்கு... கொம்பிளெக்ஸ் கணக்கு.. அதையெல்லாம் விட்டிட்டு இங்க வந்து அலம்புறாங்க எண்டு நினைக்குறது...
கதைக்க விருப்பம் இல்லாத கொன்ராக்ற் ஐ ப்ளாக் பண்ணிட்டு உல்லாசமா இருப்பவர்கள் இருக்குறார்கள்.. கேட்டும் கேளாத மாதிரி கண்டுக்காம சிலர் இருக்கிறார்கள்... இரண்டாவது சரியான கஸ்டம்... மிக உயர்ந்த ஞானம் தேவை.. எல்லா இடத்தையும் அப்பிடி இருக்க ஏலாது... தெய்வம் எல்லாத்தையும் கேட்டுக் கொண்டும் எல்லாவற்றிற்கும் பதில் தெரிந்தும் பேசாமல் இருக்குறது..
மனிதன் சொல்வதை இன்னொரு மனிதன் ஏற்றுக் கொள்வதில்லை.. மேலதிக விளக்கங்கள்... கேள்விகள்... சில இடங்களில் பதில் பேசாமல் இருப்பது புத்திசாலித்தனம்.. கடவுள் மட்டும் பேசினால் விட்டு வைப்பார்களா? மாட்டார்கள்... எத்தனை கோடி கேள்விகள் வரும்? காலில் முள் தைத்ததற்கும் காரணம் கேட்பார்கள்? அது இருநூறு வருசப் பழைய கணக்காக இருக்கும்... அதற்கு விளக்கம் சொன்னால் அதற்கு மேலும் கேட்பார்கள்... தெய்வம் பேசாமல் இருக்கிறது..
நான் காலமல்ல... ஆனால் நான் தான் காலத்தை சுழற்றுகிறேன்.. ஆனால் என் இஸ்டப்படி நான் காலத்தை சுற்றவில்லை... அவ்வாறு செய்ய நான் மனிதன் அல்ல.. நான் விருப்பு-வெறுப்பு இன்ப-துன்பம் இம்மை-மறுமை புகழ்ச்சி-தூற்றல் அனைத்துக்கும் அப்பாற்பட்டவன்... என்னைப் போல் நீயும் இரு.. என்று சொல்லிச் சிரிக்கிறது..
இப்ப சொல்லுங்க... கஸ்டம் தானே...?
கடவுளை எப்ப காணலாம்?
கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் விட்டுறார்... கேட்கிறார்...
”நான் தண்ணிக்க உன்னை அமத்தி வைச்சிட்டிருந்தப்போ நீ என்ன நினைச்சாய்” எண்டு...
”எப்ப என்னை வெளிய விடுவீங்க எண்டு நினைச்சன்” எண்டு...
”எவ்வளவு துடிப்போட முனைப்பா எப்ப விடுவேன்னு ஊன்றி நினைச்சியோ அதேயளவு கடவுளைக் காணணும் எண்டு எப்ப நினைக்குறியோ அப்ப கடவுளைக் காண்பாய்” என்று புன்முறுவல் பூக்கிறார் குரு...