எந்த
விசயமெண்டாலும் அதின்ர உச்சத்தை அடைந்து அதில் திருப்தி கொண்டவன் அதை
விட்டுட்டுப் போயிடுவான்... எவரெஸ்ற் உச்சியைத் தொட்டு அதில் திருப்தி
கொண்டவன் திரும்பத் திரும்ப ஏறுவானா? அதனால தான் எல்லாருக்கும் உச்சம்
கிடைப்பதில்லை... உச்சம் கிடைக்கவில்லை என்று திருப்தி இன்றி அதைத்
தேடுவதிலேயே வாழ்க்கையின் ருசி இருக்கிறது... அதைப் பெற்றவன் வாழ்க்கையின்
மீதுள்ள பற்றை இழந்து பற்றற்ற நிலையை அடைகிறான்... வெற்றியால்
ஏற்படும் விரக்தியே பற்றற்ற நிலை தரவல்லது... தோல்விகளால் ஏற்படும்
விரக்தியால் அது முடியாது... அவ்வாறு தோன்றினால் கூட பொறுத்திருந்தாலோ
போராடினாலோ வெல்வோமோ என்ற எண்ணத்தை இடையில் அது தோற்றுவிக்கும்.... பெறும்
சிறுவெற்றி பற்றினைத் தோற்றுவித்துவிடும்.... அது ஞானம் அல்ல...
தோல்விகளின் விரக்தி ஒருவனை அன்பு அதிகம் உள்ளவனாக்கலாம்.... அன்பு என்பது
தியாகமும் நம்பிக்கையுமே.... வேறெதுவும் அல்ல....
No comments:
Post a Comment