Monday, December 29, 2014

இன்பமான வலி

29/12/2014

நேற்று யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு வந்தபோது ஒரு இளம் அம்மா, அவரின் நான்கு தவ்வல்களோட எனக்கு பக்கத்து இருக்கையில் வந்து அமர்ந்தார்... திடீரென்று புறப்பட்டதாகவும் வந்த மூன்றுசக்கரவண்டி விபத்தானதாகவும் பஸ்ஸில் இருக்கை போதவில்லை என்றாலும் பரவாயில்லை என்றும் சொன்னார்... மூன்று இருக்கைகள்... ஒன்றில் நான்.. (ஒரு இருக்கை எனக்கு ரொம்ப அதிகம் என்பது வேறுகதை...) மற்றைய இரண்டிலும் அந்த அம்மாவோடு சேர்த்து ஐந்து பேர் இருந்தாக வேண்டும்....  அம்மாவின் மடியில் ஒரு குழந்தை... மூன்று - நான்கு வயது இருக்கலாம்... பக்கத்தில் ஒரு பிள்ளை... மூத்த பிள்ளையாக இருக்க வேண்டும்.... எட்டு- ஒன்பது வயது மதிக்கலாம்... அவன் மடியில் ஒரு குழந்தை...  மூத்த பிள்ளையின் பொறுப்புணர்ச்சி... எனக்கும் அவனுக்கும் இடையில் என் இருக்கையில் நான் இருந்த இடம் போக எஞ்சிய இடம் இருந்தது...  அது இடையில் இருந்த ஆறு-ஏழு வயது மதிக்கக்கூடிய சிறுவன் இருக்கப் போதாது... அவன் நின்றுகொண்டிருந்தான்....

மடியில் இருந்த பையைத் தூக்கி காலிற்குள் போட்டு விட்டு அவனை மடியில் இருத்தலாம் என்று கூப்பிட்டேன்... எங்கள் வீட்டிலும் நாங்கள் ஐந்து சகோதரர்கள்... எங்கு போனாலும் அனைவரையும் இழுத்து திரிய வேண்டிய வயதுகளில் ஓரிரு வருட இடைவெளிகளில் நாங்கள் இருந்தோம்... எங்களை யாரை நம்பியும் விட்டுப் போக முடியாது... அம்மா வேண்டுமென்றால் நாங்கள் கற்காத வித்தையையும் இறக்குவோம்.... அப்போதெல்லாம் அக்காமாரின் மடிகளில் இருந்து தான் சவாரியாக இருக்கும்...

பையன் வெட்கப்பட்டுக் கொண்டே ஏ எண்டு மாட்டேன் என்பதைக் கூறுமுகமாய் தலையசைத்தான்...வளர்ந்திட்டாராம்... எங்களைப் போல மடி சவாரி கேட்ட பையன் அல்ல.. காட்டூன் பார்த்து வளர்ந்திருப்பான்... அந்த இருக்கையைக் கொடுத்து விட்டு நான் பின்னால் போய் உட்காரவும் முடியாது.. பஸ்களில் சொறிவதற்கென்றே ஒரு கும்பல் வந்திருக்கும்...  இன்னும் என்னை ஒடுக்கிக் கொண்டு உட்கார்ந்தேன்...

“இதில வந்து இருமன்...”

பயல் வந்து உட்கார்ந்தார்....

”இவவும் அவரும் ருவின்ற்ஸ்...” அம்மா தன் மடியில் இருக்கும் குழந்தையையும் மூத்தவன் மடியில் இருந்தவனையும் காட்டி சொன்னார்...

”உங்களுக்கும் கஸ்டம் தான்...  திடீரெண்டு வெளிக்கிட்டது...” அம்மாவுக்கு முப்பத்தைந்து வயதுக்கு மேல் இருக்காது.. சின்னப்பிள்ளையள்... இடம் விடும் எண்டு ராங்கியாகச் சொல்லக் கூடிய தலைமுறையில் அவர் இல்லை... மற்றவைக்கு தொல்லை எண்டு நினைக்கக் கூடிய வயது... சங்கடத்தில் நெளிந்தார்...

“பரவால்ல... எனக்கு ரெண்டு தம்பியும் ரெண்டு தங்கச்சியும் இருக்கினம்..”

நிறையப் பிள்ளையள் எண்டு அவர் வெட்கப்பட்டதை மாற்றுவதற்காக சொன்னேன்... (நாளைக்கு நம்மளைப் பார்த்து பள்ளிக்கூடம் நடத்துற அளவு பிள்ளையள்னு யாரும் சொல்லும் போது இப்பிடி நமக்கும் யாராவது வக்காளத்து வாங்கணும் கடவுளே.... தர்மம் தலை காக்கும்.. அவ்வ்வ்வ்)

இப்போது வெட்கப்பட்ட பயபுள்ளை நித்திரையில் முன் பக்கம் சாயத் தொடங்கியிருந்தார்... அவரை மெதுவாக பின்பக்கம் சரித்து விழ விடாது என் கையால் தாங்கினேன்... உடனே என்னவோ பஸ்ஸில் வேண்டும் என்று இடித்ததும் இரண்டு இருக்கைகள் முன்னுக்கு நடந்து போகும் யுவதி போல அவர் எழுந்து அம்மாவுக்கு முன்னால் போய் நின்று கொண்டார்... ம்ஹூம்... (டேய்.. உன் கையைப் பிடிச்சா இழுத்தன்... நான் பொண்ணுடா.... அதோட அக்கா... ) எனக்கு ஒரே அவமானமாப் போயிட்டுது... நின்று பார்க்கட்டும்... அப்ப தெரியும் கால்வலி...

மூத்தவனுக்கு கால் வலித்திருக்க வேண்டும்.. அதோடு வெட்கப்பட்ட தம்பியின் இடம் இப்போது காலியாக இருந்ததும் அதில் தான் மடியில் வைத்திருந்த தம்பியை இருத்தினான்...

“இது ரெயில்வே ஸ்டேசன்...”

அம்மா மூத்தவனுக்கு இடங்களை சுற்றுலா வழிகாட்டி போல சொல்லிக் கொண்டிருந்தார்....

குழந்தைக்கு தூக்கக் கலகம்... என் மடியில் இடம் இருந்தது.... குழந்தை அதில் சாய்ந்து கொண்டான்... காலை அவனின் அண்ணனின் மடியில் போட்டுக் கொண்டான்... (அடடே என்ன ஒரு வில்லத்தனம்... சுட்டிப் பயலே...)  என் மடியில் இன்னும் இடம் மீதம் இருந்தது...  பிடிவாதம் கரைந்து நின்று கால் வலித்திருக்க வேண்டும்... எழுந்து சென்ற பிள்ளை என்னைப் பரிதாபமாகப் பார்ப்பது கண்ணின் பக்கப் பார்வையில் விழுந்தது...

“வந்து இருமன்...”

“வேண்டாம்... அவன் என்ரை காலடியில இருக்கட்டும்... “

எனக்கு ஏன் வீண்சிரமம் என்று அவனின் அம்மா குரல் கொடுத்தார்....

“இல்லை... இடம் இருக்கு தானே... இருக்கட்டும்...”

“நீங்க பாவம் தானே....”

(என்னைப் பார்த்து பாவம் எண்டு சொன்ன முதல் ஆள் நீங்கதான்...)

பயலும் மாட்டன் எண்டு வீம்பு பண்ணி அம்மாவின் காலடியில் உட்கார்ந்து விட்டான்... சரியான அம்மாப் பிள்ளை.... க்கும்...

மடியில் கிடந்த குழந்தை காலை ஆட்டியது... பஸ்ஸின் குலுக்கல் தூக்கத்தைக் கலைத்திருக்க வேண்டும்...  ஒரு கையில் பஸ் தலையில் இடிக்காமல் தலையைத் தாங்கிக் கொண்டு மற்றக் கையை எடுத்து முன்புறம் விழுந்து விடாமல் பிடித்தேன்...  ஏஸி இல்லாமலேயே மழை குளிரை அள்ளி இறைத்துக் கொண்டிருந்தது.. குழந்தை என் கையை இறுகப் பிடித்துக் கொண்டான்... ஒரு பக்கம் நான் பிடித்திருந்ததால் பஸ்ஸின் முன்னோக்கிய வேகத்தால் நியூட்டனின் விதி அவன் கால்களில் மட்டும் செயற்பட முன்னோக்கி இயங்க முனைந்த கால்களை சரி செய்ய வைத்த என்னுடைய கை தளிர்க்கரங்களில் நன்றாக மாட்டிக் கொண்டது... குனிந்தும் குனியாமலும் இருந்த நான் அப்பிடியே இருக்க வேண்டியதாயிற்று...  நிமிர்ந்தால் கை விடுபட்டு விடும்.... தூக்கம் கலைந்து விடும்....

காலை வேளைகளில் என்னை எழுப்பினாலே நான் பத்திரகாளியாகி விடுவேன்...  சின்னப் பிள்ளையின் நித்திரை கலைந்தால் கேட்கவே வேண்டாம்...  சிணுங்கிக் கொண்டே இருக்கும்.... என்ன சொன்னாலும் கேட்காது... அப்படியே தூங்கினாலும் திரும்பத் திரும்ப முழித்து அழும்....  அந்த இரவு பிறகு சிவராத்திரியாகி விடும்.... குழந்தைக்கென்ன? தூக்கம் அதுக்கு முழு நேர வேலை மாதிரி.. பகலில் தூங்கி சரி பண்ணிக் கொள்ளும்.. நமக்கு முடியுமா? (ஆமா நீ எத்தனை பிள்ளை வளர்த்தாய்... இவ்வளவு டீற்றெயிலா சொல்லுறாய் எண்டு நீங்க கேக்குறது புரியுது பாருங்கோ... எல்லாம் எங்கட தம்பி தங்கச்சியாக்கள் பண்ணின அளப்பரைகள் தான்...)

குழந்தை தூங்கி விட்டதால் இப்போது மடியில் கனம் அதிகரித்து விட்டது... தூங்கி விட்டால் ஏன் எடை கூடுவது போல இருக்கிறது என்று எனக்குத் தெரியாது... ஆனால் அதை நிறைய சந்தர்ப்பங்களில் நான் உணர்ந்திருக்கிறேன்..  அடம்பிடித்து அழுது விட்டு சாப்பிடாமல் அழுத இடத்திலேயே தூங்கிப் போகும் தங்கையைத் தூக்கி சரியான இடத்தில் படுக்க வைக்கும் போது அவளின் எடை இரண்டு மடங்கானது போன்று தோன்றும்...

இப்போது குனிந்திருப்பதால் குழந்தையின் வாசனையை என்னால் உணரமுடிந்தது... அது பேபி செரமி வாசனையோ சென்ற் வாசனையோ அல்ல..  எல்லா உடலுக்கும் ஒரு வாசனை உண்டு.. (ஆமாமா அதால தான் அதை மறைக்க சென்ற் அடிக்குறம்... அதில்லப்பா...) வியர்வை வாசனையை விட்டாக் கூட எல்லாருக்கும் ஒரு வித வாசனை இருக்கு.... அதுவும் ஒருவகையில யுனிக் தான்...  மீன் முட்டை இட்டுப் போன இடத்தில நிறைய மீன் முட்டை இட்டிருக்கும்....  எப்பிடி தன் குஞ்சைக் கண்டுபிடிக்கிறது...? வாசனை... அது மாதிரி மனிதருக்கும் இருக்கிறது... ஜென்ம ஜென்மம் தாண்டி அதே வாசனை இருக்கும்...  அப்பிடின்னா அது ஆன்மாவின் வாசனையாக இருக்கலாம்.. என்ன ஆணியோ... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வாசம் இருக்கிறது...  குழந்தைகளின் வாசனை ஒரு தனிரகம்... (கலாரசிகா... அவ்வ்வ்) அது ஒரு வித மகிழ்ச்சியை ஏற்படுத்தும்... குழந்தைகளைக் காணும் போது இதயத்தில் அன்பு நிரம்புவதற்குக் காரணம் அதுவாக இருக்கலாம்...

என் கருவறை மெதுவாக விரிவதாய்ப் பிரமை... மூன்று இருக்கையில் ஒண்டியாய் உட்கார்ந்திருந்தேன்...  என் தொலைபேசி கூட சிணுங்கவில்லை... அதற்காக அது சைலன்ற்றில் போட்டதாய் அர்த்தமில்லை... அதுவரையில் வெறுமையாய் இருந்த என் உலகத்தில் ஒரு வெள்ளைரோஜாப்பூ மலர்ந்திருக்கிறது....  என் மடியில் களங்கமில்லா பூரணசந்திரன் ஒன்று சயனித்திருக்கிறது...  பேரூந்தினுள் வெளிச்சம் இல்லாவிடினும் அது தூங்கும் அழகை என்னால் ரசிக்க முடிகிறது...  வெளிச்சம் இல்லாததால் அதன் அழகு இன்னும் இரட்டிப்பாய் தெரிகிறது... பாதிக் கண்கள் மூடிப் பாதிக் கண்கள் திறந்து.... பூனைக்குட்டி... பூனைக்குட்டி அழகு... இருட்டான இடத்தில் அது இருக்கும் போது இன்னும் அழகாகத் தெரியும்.. மழை நேரத்தில் கால் சூடு தேடி வந்து முகத்தால் வருடிக் கொண்டே பாதிக்கண்ணால் தூங்கும் கொள்ளை அழகு...

உதடுகள்... நமக்கெல்லாம் உதடு என்ன நிறம் என்றால் ராக்கிங் நேரம் ”பீடி அடிக்கிறனியோ?” என்றும் ”தண்ணி அடிக்கிறனியோடி?” என்றும் கேட்கும் அளவு நிறம்...  இது.....ஆரஞ்சு நிறம்... இயற்கை வர்ணம்.... சற்றே திறந்து கிடந்தன... உயிர் வெண்டிக்காய் விதைகள் போன்ற பற்கள் இரண்டு வெளியே தெரிந்தன... அவை காந்தமாகி என் உதடுகளை இழுக்கவில்லை... மாறாக என் உதட்டில் புன்னகைப் பூவைப் பூக்கச் செய்தன... என் கைவிரல்கள் அவற்றில் காதல் கொண்டு, இந்த அழகுப்பற்கள் வெளியே தெரிந்தால் பெற்றோலுக்கூடாக நெருப்பைக் கடத்த வல்ல பஸ்ஸில் பிக்பொக்கட் அடிப்பவர்கள் நான் விழித்திருந்தாலும் கொள்ளையிட்டுவிடுவார்கள் என்று காக்க எண்ணி ஓடி வந்தன... திறந்திருந்த அழகிய ரோஜாக் கதவுகளை மூட விழைந்தன... ம்கும்.. பூத்திருந்த இதழ்கள் மூடிக் கொள்ளாமல் எவ்வளவு சொல்லியும் கேளாமல் மானம் ரோசம் இல்லாமல் அவனைக் கண்டதும் திறந்து கொள்ளும் என் மனக் கதவுகள் போல் மறுபடியும் திறந்துகொண்டன...

வழக்கமான என் தனிமைப் பயணங்களில் நான் வெளிப்புறம் பார்த்தவண்ணம் இருப்பேன்...  அதற்காக நான் இயற்கை அழகை ரசிக்கிறேன் என்று அர்த்தமில்லை... வெறுமனே வெறித்துப் பார்த்திருப்பேனே ஒழிய வெளியில் நடப்பவை என்னை ஈர்ப்பதில்லை...  இந்த முறை அழகு முகத்தைத் தவிர வேறெங்கிலும் கண்கள் போகவில்லை....  அழகு என்பது ஆண்டவனாகும்... அது குழந்தையாகும் என்றெல்லாம் என் உள்ளம் பேசவில்லை... வழமையாக கண்கள் வேலையில்லாமல் வெறித்தபடி இருக்க உள்ளம் ஏதேதோ எண்ணிக் கலங்கும்.... இம்முறை கண்கள் அழகை ரசித்தபடி இருக்க உள்ளம் சிலையாகி ஊமையாகிப் போய்விட்டிருந்தது....தெய்வீக அழகு என்பது குழந்தையேயாகும்.... அன்பு... பக்திப் பரவசம்.... உள்ளம் மூர்ச்சையாகியிருந்தது....  என் கைகள் குழந்தையின் தலையைத் தடவியபடியிருந்தன...உதடுகள் குழந்தையின் நெற்றியை முத்தமிட வேண்டி அடம்பிடித்தன....

“பேசாமல் இரு... நீ பார்க்கும் பார்வைக்கு இவ்வாறு கண் வைப்பதாய் அந்த அம்மா எண்ணுவார்... இதற்குள் எச்சிலில் வேறு குளிப்பாட்டப் போகிறாயா?”

என் வாய் என்னும் குகைக்குள் ஒளித்து வைத்திருந்த கூரான ஆயுதமான என் பற்களை வெளியே எடுத்து உதட்டைக் கடித்து என்னை அடக்கிக் கொண்டேன்... பக்கத்தில் இருந்த பிள்ளை இப்போது நித்திரை அசதியில் என் தோள் மேல் சாய்ந்திருந்தது... என் தோள் சிறிதாக இருப்பது குறித்து இப்போது தான் எனக்குக் கவலை ஏற்பட்டது... பெரிய தோளாக இருந்திருந்தால் குழந்தை செளகரியமாக சாய்ந்திருக்கும்... சே...!

தூங்கவில்லை நான்... ஆயினும் இரவு சீக்கிரமே கரைந்தது...

“நீங்கள் வந்த படியால் தான் நான் நிம்மதியா வந்து சேர்ந்தன்... தாங்ஸ் தங்கச்சி... இறங்கப் போறம்...”

மெதுவாக அசைத்து சிவப்பு வஸ்திரம் அணிந்திருந்த தங்க விக்கிரகமான குட்டிக்கந்தனின் தூக்கம் கலைத்தேன்... “எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே...” என்று உள்ளம் கூறியது...

அவன் அன்னை காணாமல் திருஸ்டி நெட்டி முறித்தேன்...  பின்னே இவ்வளவு நேரம் பார்த்தால் கண்படாதா என்ன? அதற்காக தாய் பார்க்கும் போது செய்ய முடியுமா? என்ன நினைப்பார் என்னைப் பற்றி...?

“நாங்க வாறம்... நீங்க எந்த ஹோல்ட்?”

“அடுத்த ஹோல்ட் தான்...”

என் மனதில் இருந்த உற்சாகம் போய்விட்டது...  மடியில் இருந்த அழகான கனமும் துயில் நீங்கி அன்னை பின்னால் போய்விட்டது... மீண்டும் தனிமை என்னை ஆட்கொண்டது... நீயாவது நான் உன்னை விட்டு விலகினாலும் என்னை விட்டு விலகாது ஓடிவந்து சேர்ந்தாயே என்று அதனுடன் ஐக்கியமானேன்... வெள்ளவத்தையின் குளிர்காற்று தோலைத் துளைக்க கைகளைக் குறுக்காகக் கட்டிக்கொண்டு பஸ்ஸில் இருந்து இறங்கி நடக்கலானேன்... ஒடுங்கி உட்கார்ந்திருந்ததால் உண்டான வலி துன்பத்தை ஏற்படுத்தவில்லை... மாறாக புன்னகையையே ஏற்படுத்தியது... என் கருவறை மீண்டும் சுருங்கத் தொடங்கியது...  ஆனாலும் என் மூளைக்கு கர்ப்பம் அனுப்பப்பட்டு அது விரல் வழி பிரசவிக்கக் காத்திருந்தது.... சற்று நேரத்திற்கு முதல் என் மடியில் ஒட்டியிருந்த பிஞ்சுக் குழந்தையின் வாசம் கொஞ்சம் கொஞ்சமாய் காற்றோடு கரையத் தொடங்கியிருந்தாலும் நெஞ்சோடு ஒட்டிக் கொண்டு கதை பேசிக் கொண்டிருந்தது....

Tuesday, August 5, 2014

பதிவுகளுக்கான பதிவு

ஒரு பதிவின் வெற்றி அதை வாசிப்பவர்களிலேயே தங்கியிருக்கும்...  ப்ளாக் எழுதுவதால் நான் புத்தகத்திற்கு ஆக்கம் கொடுக்க முடியும் என்றில்லை... காரணம்.. ப்ளாக் வாசிப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட டொமெயினில் இருப்பவர்கள்... புத்தகம் வாசிப்பவர்கள் பலதரப்பட்டவர்கள்...எல்லாருக்கும் எல்லாம் புரியாது.. வாசிப்பவனுக்கு பிடித்திருந்தால் தான் பதிவு வெற்றி பெறும்... இல்லையென்றால் அது தரமானதானால் கூட பயனற்றது... அதற்காக வாசகர் மையப் படுத்தி எழுத முடியாது...Jeyakumaran அண்ணா சொன்னது போல ஒரு விசயத்தின் கருவானது முதலில் மனதை அரிக்க வேண்டும்.. அது கிழமைக்கணக்கா மனதில் கிடந்து முழு உருவம் பெற்று பிரசவிக்கப்பட வேண்டும்....  அது தான் உயிர் உள்ள பதிவு... ஏனையவை சதைப் பிண்டங்களாகும்...  எழுதுவது வாசகர்களுக்காகத்தானே? எழுதுவது உயிர் உள்ளதாக எழுதணும்... பிரசுரிக்கும் இடத்தை அதற்கு ஏற்றாற் போல் தெரிவு செய்யணும்... இல்லையென்றால் உயிரோடு பிறந்தாலும் யாருக்கும் பயனற்ற வாழ்க்கை போல அது வீணாகி விடும்....

Thursday, June 19, 2014

புத்தர் பிரிந்து சென்றபின் யசோதரா...

யசோதரா பேரழகி...

வயதில் மிகவும் சிறியவள்...

சித்தார்த்தன் துறவு பூண்டுவிடுவான் என்று அவன் ஜாதகத்தை ஆராய்ந்த ஜோதிடர்கள் கூறியமையால் அஞ்சிய மன்னன் சுத்தோதனன் பிணி, மூப்பு, சாக்காடு என்னும் மூன்றையும் சித்தார்த்தனின் கண்ணில் இருந்து மறைத்து அவரை வெளியே செல்ல விடாமல் அரண்மனை என்னும் கெளரவமான சிறையில் அடைத்து வைத்திருந்தான்...  வாழ்க்கையின் பேரின்பத்தை அடையவிடாமல் அவரை சிற்றின்ப மயக்கத்தில் தொடர்ந்து பேண வேண்டியும் சரி மகன் துறவு போனாலும் பேரனாவது தனக்குப் பின் ஆட்சி செய்வான் என்று கருதியும் பதினாறு வயதிலேயே அவரிற்கு யசோதரையினை மணம் முடித்து வைத்ததோடு அந்தப்புரத்தில் துள்ளிக்குதிக்கும் கன்னிப்பெண்கள் கூட்டத்தையும் அள்ளிக் குவித்து வைத்திருந்தான் மன்னன்...

சித்தார்த்தனின் பிற்காலத்துறவு பற்றிய எந்த எதிர்வுகூறலையும் யசோதரை அறிய மாட்டாள்.. சித்தார்த்தர் துறவு செல்வார் என்று அறிந்தும் மன்னனின் சுயநலத்திற்காக யசோதரை பலியிடப்பட்டாள்.... சித்தார்த்தன் வெளியே செல்ல அனுமதி இல்லை... அவருக்கு மட்டும் அரண்மனைக்கதவுகள் அடைக்கப் பட்டு இருந்தன...  தோழனையும் யசோதரையையும் பெற்றோரையுமே உலகமென வாழ்ந்தார் சித்தார்த்தன்....  அன்பு, ஜீவகாருண்யம் என்பன அவரின் சிறுவயதிலேயே அவருக்கு இயல்பாக அமைந்திருந்தன....

பிற்காலத்தில் புத்தராகி உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் நேசித்து பலியிடலைத் தடுக்கப் பிறந்த சித்தார்த்தன் தான் பிறப்பிலேயே கொண்டு வந்த அவ்வளவு அன்பையும் யசோதரை மீது காட்டாமல் வேறு யார் மீது காட்டுவார்...  கணவரின் அன்பைப் பூரணமாகப் பெற்ற யசோதரை மகிழ்ச்சியில் திளைத்திருந்தாள்... அவர்களுக்கு ராகுலன் என்னும் மகன் பிறந்தான்...

விதி விடவில்லை...

சித்தார்த்தன் புத்தராகும் காலம் வந்தது....

பலியிடப்படவென்றே வளர்க்கப்பட்ட ஜீவன்களுக்கு நல்லகாலம் பிறந்தது... அவற்றிற்கெல்லாம் சேர்த்து தான் ஒருத்தியே பலியிடப்போவது அறியாமல் பஞ்சணையில் ஆனந்தமாக சயனித்திருந்தாள் யசோதரை...

எறியப்பட்ட கல்லினால் பாசியானது விலகி அதன் கீழுள்ள தெளிந்த நீர் வெளி வருவது போலவும் அடியில் நீரோட்டம் உள்ள பாறையானது அகற்றப்பட்ட பின்னர் நன்னீரானது பீச்சியடிப்பது போலவும் பலூனில் அடைத்து வைக்கப்பட்ட காற்றானது பலூன் குத்திக் கிழிக்கப் பட்ட பின்னர் வெளியே வீசியடிப்பது போலவும் கோட்டைக்கதவுகளைத் திறந்து கொண்டு சித்தார்த்தர் வெளியே கிளம்பி விட்டார்...

அரண்மனைக் காவலாளிகள் அன்றென்று பார்த்து அயர்ந்து போனார்கள்...  கதவு அன்றைக்கென்று திறந்தே இருந்தது.. சிறையில் உதித்த உலகம் முழுவதும் போற்றத் தக்க கிருஸ்ணனை கோகுலத்திற்கு எடுத்து செல்ல விளைந்த போது அரக்கர்கள் அழிந்து தர்மம் தழைக்க வேண்டி திறந்து கொண்ட கதவுகள் போல உலகின் அகந்தை இருள் நீங்கி அன்பு செழிக்க வைக்கப் போகும் சித்தார்த்தர் வெளியேறவென்றே கதவுகள் திறந்திருந்தன...

போனார்..  பிணி - மூப்பு - சாக்காட்டினை முதன் முறையாகக் கண்டார்...  மழலை போல கேள்வி மேல் கேள்வி கேட்டார்...  பதிலை அறிந்த பின் சிந்தித்தார்...

’எல்லாம் பொய்யா? மாயை தானா? எல்லாருக்கும் நோய் வருமா? அரண்மனையில் அன்புப் புன்னகை பூக்கும் யசோதரை மூப்படைவாளா? நோய்வாய்ப்படுவாளா? கடைசியில் இறந்து போவாளா? பச்சிளம் பாலகனான என் மகன் ராகுலன், என் அன்புத்தந்தை எல்லோருக்கும் இதே கதிதானா? எல்லாம் சொப்பனந்தானா?’

எண்ணிலடங்கா கேள்விகள் மனதில் உதித்தன...  விடை தேட வேண்டும்... தனிமை வேண்டும்... மூடனாக வாழ்ந்து விட்டேன் இது வரை.. வாழ்வின் உண்மைத் தத்துவம் அறியாமல் போனேன்... போதும் பார்த்தவை... அரண்மனை திரும்பினார்...

யசோதரை இன்னும் எழுந்திருக்கவில்லை... அவள் முகத்தைக் கூடப் பார்க்கவில்லை... அரண்மனை வாழ்வைத் துறந்து விட்டு போய்விட்டார் காட்டுக்கு...

அவர் போன செய்தியை அவள் பின்னரே அறிந்து கொண்டாள்....

கோபம் பொத்துக் கொண்டு வந்தது...

திட்டினாள்... சத்தமிட்டாள்...  ரெண்டாவது சம்சாரத்திடம் சென்று விட்ட கணவனை தூற்றும் பெண் போல ஆக்ரோஸமாக ஏசினாள்.. வாழத் தெரியாமல் கோழை போல் துறவியாகி விட்டார் என்று அரற்றினாள்...

ஆதங்கம், கோபம், விரக்தி, ஆத்திரம், எரிச்சல், அழுகை என அவள் மனநிலை கடைசி நிலையை அடைந்து விட்டது...  பொங்கிவரும் அலைகள் தாக்க ஆளில்லாமல் கரையை அடித்து விட்டு மறுபடியும் கடலில் சங்கமமாவது போல அவள் கொண்ட கோபம் காட்டுவதற்கு அங்கு புத்தர் இல்லாமையால் அவளையே தாக்கியது...  வரும் போது பொங்கி வரும் அலைகள் மோதி விட்டு மீளும் போது வேகம் குறைவது போல வெடித்த விசும்பல் அழுகையாக மாறத் தொடங்கியது...

பாவம்... அபலைப் பெண் அவள்...

அன்பு என்பது மகிழ்வைத் தருகிறது என்று எல்லோரும் சொல்கிறார்களே.... அன்பு கிடைக்காத ஒருவன் கூட மகிழ்வாக இருந்துவிட முடியும்.. அதைப் பெற்று விட்டு இழந்தவர்களால் அது முடியாது.. கிடைக்கும் போது சுவர்க்கமாகவும் இழந்த பின்பு நரகமாகவும் மாறி விடும் என்றெல்லாம் எண்ணிக் கொண்டாள்.... அழுகை மட்டும் நிற்கவில்லை... பெருகிவரும் கங்கையோடு அடித்து செல்லப்படும் காற்றினால் சாய்ந்து தூக்கி வீசப்பட்ட மரத்தைப் போல அவள் மனம் உணர்ச்சியற்றுப் போனது...  எண்ணங்கள் மட்டும் அம்மரம் வெள்ளத்தினால் இழுத்து அடித்து பாடுபடுவதைப் போல ஓடிக்கொண்டே இருந்தன...

அரிச்சந்திரபுராணத்தில் சந்திரமதி நெல்லுக்குத்துவது கண்டு தேவர்கள் வருந்திச் சோர்வதாக சொல்லியிருப்பார்கள்...  நெல்லுக் குத்துவது ஒன்றும் அவ்வளவு துன்பம் இல்லை.... கிராமப்புறத்தில் பெண்கள் சாதாரணமாக செய்யும் காரியம்தான் அது.. அதற்கு ஏன் இவ்வளவு பில்ட் அப் என்று கேட்டால் சாமானியப் பெண்கள் செய்வது புதிதல்ல... அது அவர்களுக்குப் பழக்கமான ஒன்று.....  அவர்களின் கைகள் உலக்கை பிடித்தே காய்த்துப் போய் இருக்கும்.... உலக்கையை லாவகமாக கைகளை மாற்றி மாற்றிப் போடுவதும் பிடிப்பதும் அவர்களுக்கு கைவந்தகலை.... அவர்கள் கல்லிலும் முள்ளிலும் காலணி இல்லாமல் நடந்து பழகியவர்கள்...  காலில் முள் தைத்தாலும் தெரியாது.. இரத்தம் வந்து காற்றுப் பட்டு அதனால் குளிர்மை உண்டாகும் போதே காலைப் பார்த்து அட முள் தைத்து விட்டதென்று ஆச்சரியம் கொண்டு முள்ளை இன்னொரு முள்ளால் தோண்டி அகற்றிவிட்டு வெட்டொட்டி பிழிந்து சாறிட்டுக் கொள்வர்... அதுவும் அருகில் கிடைத்தால்தான் உண்டு... இல்லையென்றால் கழுதைப் புண்ணுக்கு புழுதி மருந்து தானே! (இங்கு சாமானியப் பெண்களைக் குறை கூறவில்லை.. அவர்கள் உடலாலும் உள்ளத்தாலும் வலியவர்கள் என்பதையே சொல்ல வந்தேன்...) ஆனால் சந்திரமதி அப்படியா? மகாராணி அல்லவா? அவளால் முடியுமா?

அது போலவே சாமானியப் பெண்கள் கணவனைப் பிரிந்தாலும் வருந்துவர்தான்... அவர்களின் கணவன் வேலைக்காக வெகுதூரம் சென்றிருப்பான்...  வீட்டு வேலை செய்ய வேண்டும்... ....  விளையாடுவது போல விளையாடி விட்டு ஒரு வேலை செய்துவிட்டு திரும்புவதற்கிடையில் அடிபட்டு விட்டு அழும் ஒன்று...  சொல்லச் சொல்லக் கேளாமல் அடுப்புக்கு அருகில் சென்று விளையாடும் ஒன்று... துவைக்கவென்று கிணற்றடிக்குப் போனால் ஆகிப் போயிட்டு கையில் அழைந்துவிட்டு சிணுங்கும் ஒன்று..  அதைப் பார்க்கப் போயிட்டு வாற காப்பில திறந்து கிடந்த கதவுக்கால போய் வெட்டி வைச்ச மீனை ஆட்டயப் போயிட்டுப் போயிடும் காகம்... கணவனுக்காக அவர்கள் செலவிட்ட நேரம் மிகக் குறைவாகவே இருக்கும்....

எனக்கு அப்பிடியா? அரண்மனையில் குளிப்பாட்டிவிடக்கூட ஆட்கள் இருக்கும் போது எந்நேரமும் என்னை நீங்காது நின்ற என் கணவருக்கு இப்போது மட்டும் என்ன ஆகிவிட்டது.... என்றெல்லாம் எண்ணமிட்டாள் யசோதரை....

நீ ஒன்று தந்தால் நான் ஒன்று தருவேன் என்று கணக்கு வைத்துக் கொடுத்த முத்தங்களின் கணக்கு இன்னும் பாக்கி இருக்கிறது... கன்னத்தில் கொடுத்தவற்றின் ஈரம் இப்பொழுது அழுத கண்ணீரால் அழிக்கப் படலாம்...  அதன் நினைவுகள் மறக்குமா எனக்கு? அவருக்கு மட்டும் எப்படி மறந்தது? என்றெல்லாம் குழம்பித் தவித்தாள்...

என் அழகு, இளமை இன்னும் கெட்டுவிடவில்லையே என்று கண்ணாடியைப் பார்த்துக் கொண்டாள்... எந்நேரமும் பிரியாதிருந்ததால்தான் சீக்கிரம் சலித்துவிட்டதோ என்று தனக்குத் தானே ஆயிரம் முறை கேட்டாள்.... 

என் இளமை தான் தீர்ந்துவிடவில்லையே.... ஆசை என்னும் தீயால் தன் இளமை எரியப் போகிறதோ.... சித்தார்த்தர் மீதிருந்த ஆசை இன்னும் அற்று விடவில்லை.... அதன் கொடுமையால் அற்பசுகத்திற்காக அஞ்சி தன் கற்பை இன்னொருவனுக்கு விற்றுவிடுவேனோ என்றெண்ணி அச்சமும் கொண்டாள்... சித்தார்த்தன் மீது கொண்ட ஆசை அவளை அச்சமடையச் செய்தது...

புத்தர் போதிமரத்திற்கு கீழ் அமர்ந்து ஞானம் பெற்றார்... ஊர் ஊராக சென்று அன்பு குறித்து உபதேசம் செய்து கொண்டிருந்தார்...   அவர் அனைவருக்கும் அன்பு போதிக்க வேண்டி அவருடைய பயணம் என்னும் வேள்வியில் அவரையே உலகம் என வாழ்ந்த அன்பின் திருவுருவம் ஆகுதியாகிக் கொண்டிருந்தது...

என்னுடன் என் மகன் ராகுலன் இருக்கிறான்.. என்று நிம்மதி பிறந்தது... அவர் நினைவுடன் அரண்மனையில் வாழலாம் என்று முதலில் எண்ணமிட்டாள்...

மறுகணமே எப்படி முடியும்..?

ஒளிந்து விளையாடிய அந்தப்புரத்தூண்கள் என்னவரை எனக்கு நினைவூட்டாதா?...  இனி இது மஞ்சமே அல்ல.. என் நெஞ்சை எரிக்கப் போகும் தீ.. மலர் தூவப்பட்ட முள்படுக்கை...  இரவாகிவிட்டால் இருட்டின் அச்சம் நெஞ்சைக் கொல்லப்போகிறது... அணைத்துக் கிடந்த ராத்திரிகளினால் மீண்டும் ஆசை எட்டிப்பார்க்காதா? அச்சம் ஒருபுறம் ஆசை ஒரு புறம் நான் தினமும் ஆசை எனும் யாகத்தில் என் தேகத்தை எரிய வைக்கப் போகிறேனா?

அறை முழுவதும் அவர் சிரிப்பொலிகள் கேட்கும்... பேசிய பேச்சுகள்...  மீண்டும் ஏன் அவை... வேண்டாம்...

அத்தனை ரணகளத்திலும் இரண்டு சந்தோசங்கள் அவளுக்கு...  ஒன்று அவர் என்னோடு இல்லாவிட்டாலும் என்றென்றும் என்னவரே ஆவார்.... இன்னொரு மனைவி தேடிப் போகவில்லையே அவர்.... என்னை மட்டுமா துறந்தார்? எல்லா இன்பங்களையும் அரசபோகத்தையும் அல்லவா துறந்தார் அவர்?

அடுத்தது இந்த உலகில் உள்ள உயிர்கள் அனைத்திலும் அன்பு செலுத்துகிறாரே.. அவ்வளவு அன்புக்கும் ஒரு காலத்தில் பாத்திரமாக இருந்தவள் நான் அல்லவா? அன்பு அந்த இடத்தில் ஆனந்தம் அளித்தது.... மனதில் ஒரு சந்தோசம்... நீண்ட பெருமூச்சு விட்டாள்... 

சரி நான் அரண்மனையில் சுகமாக வாழ்வேன்... அவர் என் செய்வார்... கல்லிலும் முள்ளிலும் நடந்து வேகாத வெயிலில் வெந்து அத்தனை வருடங்கள் வெயில் படாத மேனி... அரண்மனைக்குள்ளேயே பாதணி அணிந்து பழக்கப் பட்ட பாதங்கள்... நினைக்கவே கண்ணீர் முட்டியது...

அவர் வாழாத அரச போகம் எனக்கெதற்கு? அரண்மனை வேண்டாம்....

இந்தாருங்கள்... இது அவர் மகன்... இந்த நாட்டின் அடுத்த வாரிசு... அவனை மன்னனாக்குங்கள்... நான் போகிறேன்....

முடியை மழித்துக் கொண்டாள்... அவர் ரசிக்காத அழகு எதற்கு? அலங்காரம் எதற்கு?  அரண்மனையை விட்டு வெளியேறி ஊருக்கு ஒதுக்குப் புறம் சென்று வாழ்ந்தாள்... பெளத்தமதத்தைத் தழுவிக் கொண்டாள்...

எவ்வளவு காலம் தான் தானே அரசபோகம் ஆள...
சுத்தோதனன் சித்தார்த்தனை வரவழைக்க எண்ணம் கொண்டார்... அரச ஆட்சியே வேண்டாம் என்று துறந்து சென்ற சித்தார்த்தர் மீண்டும் வந்து நாட்டு நிலமை கண்டு அரசாட்சியை ஏற்பார் என்று நப்பாசை கொண்டார் அவர்... நடக்குமா அது?

புத்தர் வந்தார்... யசோதரை அவரைப் பார்க்க வரவில்லை... அவரே வந்து பார்க்கட்டும் என்று பிடிவாதம் கொண்டாள்....

இன்னும் தன் மீது அன்பிருந்தால் வந்து பார்ப்பார் என்று அவரின் அன்புக்கு அவள் வைத்த சோதனை அது? பேரன்பு கொண்ட புத்தர் அவளை வந்து பார்த்தார்...

கதறியழுதாள் அவள்...

புத்தர் முகத்தில் சலனமில்லை...

உலகமும் உறவும் நம்மைப் பிரிக்கவில்லை... உறவு இருந்தது ஒருகாலத்தில்... வெளிவேசம் போட்டு பிக்குனியாய் வாழ்ந்தாலும் நான் பெண்ணல்லவா? நீங்கள் இன்னமும் என் மனதில் எண்ணமாய் வாழ்கிறீர்கள் என்று எவ்வாறு சொல்ல முடியும்... அது நாம் இருவரும் கொண்ட விரதத்திற்குப் பங்கமல்லவா? இந்த நிமிடத்தில் தண்டவாளம் போல் அருகில் நிற்கிறோம்... தொட்டுக்கொள்ள உறவில்லை....நாம் தொட்டுக்கொண்ட காலங்கள் முடிவிலியில் தொடும் தண்டவாளங்கள் போலவும் கடலும் வானும் தொடுவது போலவும் தூரத்தில் தெரிகின்றன.... அவை போலவே இதுவும் பிரமை தானோ? நிஜத்திலே நீங்களும் உலகத்துக்காக நானும் அதை இல்லை என்பதாய் நடந்து கொள்ள வேண்டும்... நீங்கள் மட்டும் நிஸ்களங்கமாய் நின்றுகொண்டிருக்கிறீர்கள்... உங்களுக்காய் அழுது என் துறவினை நான் களங்கப்படுத்திக்கொண்டிருக்கிறேன்.. எனக்கு மட்டும் ஏன் ஞானம் கிடைக்காமல் போய்விட்டது...? நீங்கள் பெற்ற ஞானத்தில் எனக்கும் பங்கு தாருங்கள்...

என்றெல்லாம் நினைத்து நினைத்து அழுதாள்...

ராகுலனைக் கூட்டி வந்து காட்டினார்கள் உங்கள் மகன் என்று...

அவனை புத்தசங்கத்தில் சேருங்கள்.... தந்தை என்ற ஸ்தானத்தில் இருந்து அவனுக்கு நான் கொடுக்கும் உயர்ந்த சிறப்பு அதுவேயாகும் என்றார் புத்தர்....

யசோதரைக்கென்ன வந்தது? ம்ம்ம்.. உங்கள் மகன்... நான் துறவி.. அவனை என்னவாச்சும் செய்யுங்கள் என்ற ரீதியில் விட்டுவிட்டாள்..

சுத்தோதனன் தான் பாவம்... மகனும் துறவு... பேரன் ஆள்வான் என்றால் அவனும் துறவு...

பிக்குனியாகவே கடைசி வரை வாழ்ந்து முடித்தாள் யசோதரை...

புத்தர் ஞானம் பெற்றது சுத்தோதனனுக்கும் பிரச்சினை தான்.... நாட்டை ஆள வாரிசு இல்லாமல் போய்விட்டது.... தாய் கொஞ்சக் காலம் அழுதிருப்பாள்... மகன் அவருடனேயே பிக்குவாகப் போய்விட்டான்... தோழன் இன்னொருவனைத் தோழனாக்கியிருப்பான்... இல்லை மனைவியோடு மகிழ்வாய் இருந்திருப்பான்...

யசோதரை மட்டும் தனியாகவே வாழ்ந்தாள்...  காத்திருப்பு இல்லை... கனவுகளும் இல்லை... இனி யாரும் தேவையில்லை... வந்த பாதை நினைவில் இல்லை... போகும் பாதை மட்டும் தெளிவாகத் தெரிந்தது...  அரண்மனையில் துள்ளிக் குதித்து தரையில் ஒழுங்காகப் படியாத அவள் பாதங்களின் சுவடுகள் தெளிவாக மணலில் பதிந்தன அவள் மனதில் இருந்த வைராக்கியம் போலவே....

Saturday, June 7, 2014

How to handle people?

Man:

Best judge when others do bad things
Best lawyer when he does bad things

Judge others as what would you do as if you are in their situation with their thoughts.

Before blame others, just think "Have I done like this ever? Why did I do that? So they might have same reasons..."

Before laugh on somebody, just think that "I may face situations like this..." Leave from there...

This is the only way to handle people easily and wisely...

PS: If you follow all of the above you will end up with problems.... 100% guarantee....

Thursday, May 22, 2014

களுத்துறைக் கலாட்டாக்கள் - 7- மயங்கி விழுந்தா எப்பிடி இருக்கும்?

ஒரு முறை லெக்சர்ஸ் டைம் கறண்ட் நிண்டு போச்சு...  ஃபான் சுத்தலை...  நிறைய ஆக்கள் வேறை... யன்னல் எல்லாம் பூட்டியா... நான் மயங்கி விழுந்துட்டன்...

நீங்க எப்பவாச்சும் மயங்கி விழுந்திருக்கீங்களா? அது ஒரு தனி உணர்வு... அனுபவிக்காதவனுக்கு சொல்லிப் புரிய வைக்க முடியாது... காத்தில பறக்குற மாதிரி ஜாலியான ஃபீலிங் ஏற்படும்... வீட்டில இருக்குற மாதிரி உள்ளுக்க தோணும்...


எனக்குத் தெரிஞ்சு அது மூண்டாவது தரம் நான் மயங்கி விழுந்தது....



ஃபெஸ்ஸ் ரைம் நாலு வயசு இருக்கும் போது தம்பியோட கடலைக்கு அடிபட்டு அப்பா அடிச்சு மயங்கினது... அப்புறம் ஒன்பது வயசில ஸ்கூலில ஊசி போட்டு மேசையில படுத்திருந்து மயங்கி விழுந்தன்...  அப்ப விழப் போறன் எண்டுறதே தெரியா... திடீர்னு பாத்தா என் கை கால் எல்லாம் ஏதோ இடைஞ்சலில இருக்குறது தெரிஞ்சுது.... பாத்தா மிஸ் ஓடி வாறா... மீரா என்னாச்சு எண்டு கொண்டு....


அப்புறம் பத்தொன்பது வயசில களுத்துறைல ட்ரெயினிங் எண்ட பேரில லெக்சர்ஸ் எடுத்தே என்னை சாகடிக்கப் பாத்திருக்காங்க.... அங்ங்ங்ங்ங்..


என்னையத் தூக்கிட்டுப் போறாங்க துஸாரி அக்காவும் மிஸஸ் வியகொட உம்...தண்ணி மூஞ்சிக்கு அடிச்சு நான் முழிச்சிட்டன்.... பட்.. பொலிஸ் ட்ரக் இல ஏத்திட்டு மிஸஸ் வியகொட இன்ர மடியில நான் தலை வைச்சுப் படுத்திருக்கன்...


ட்ரக் களுத்துறை ஹொஸ்பிட்டல் போச்சுது... ரொம்பத்தூரம்... ட்ரக் நிண்டுது... டிக்கெட் எல்லாம் எடுத்து என்னைய ட்ரொலியில இருத்தி தள்ளிட்டுப் போறாங்க...


‘எருமை மாடுகளே எனக்கு ஒண்டும் இல்ல...’


ஒரு கதை இருக்கு... டொக்டர் ஒரு பேசன்ற் செத்திட்டான்னு போஸ்மாட்டத்துக்காக அனுப்பிட்டார்... அவனை வைச்சுத் தள்ளிட்டுப் போகும்போது அவன் எழும்பி என்னை எதுக்காக கூட்டிப் போறீங்க எண்டு கேட்க போஸ்மாட்டத்துக்கு எண்டு சொல்ல நான் இன்னும் சாகல எண்டு பேசன்ற் கத்த “இவ்வளவு படிச்ச டாக்டர் சொல்லிட்டார்... நீ செத்திட்டாய் எண்டு... நீ என்ன கதையா விடுறாய் ” எண்டு அமத்தின கதை மாதிரித் தான் ஆகும்...


நான் பேசாம இருந்தன்...


லேடி டொக்டர் வந்தா... என்னையப் போட்டு அமத்துறா...


வலிக்கலை... பட் கண்ட இடத்தில அமத்துறாளே... இதுக்கு முகமாலை பொடி செக்கிங் தேவலாம்னு இருந்திச்சு...


‘அடி கிராதகி விடு.. எனக்கு ஒண்டும் இல்லை’



அப்பிடின்னு கத்தணும் போலவே இருக்கு...


வலிக்குதான்னு இங்கிலீஸில கேட்டா... இல்லை எண்டன்..


அப்புறம், இப்பிடி அடிக்கடி வாறதா? வலிப்பு இருக்கா? அது இருக்கா? இது இருக்கா எண்டு வதைக்குறாங்க... ஐயோ ... நான் என்ன வியாதிக் கூடா? மயங்கி விழுந்ததெல்லாம் ஒரு தப்பா?


விடுங்க என்னைய எண்டு இந்தியன் படத்தில ஒட்டகத்திட்ட கடி வாங்கி ஹொஸ்பிட்டல கிடந்து கவுண்டமணி சொல்லுற மாதிரி எனக்கு சொல்ல வருது...


கையில குத்தி ரத்தம் எடுத்தாங்க.. பிளட் செக் பண்ணணும்... டெங்கோ தெரியாது... இப்ப எனக்கு லைற்றா கிண் எண்டிச்சு.... எல்லாக் கடவுளையும் வேண்டத் தொடங்கினன்...



ஹொஸ்பிட்டலிலை நிற்க முடியுமா? நான் தனிய நிற்கத் தேவலை... மிஸஸ் வியகொடஅல்லது துஸாரி அக்கா நிற்பினம்.... பொலிஸுக்கு தெரியும்.. எனக்கு ஏதாச்சும் ஒண்டு எண்டா அவை தான் பதில் சொல்லணும் எண்டு...  கூட ஒருத்தங்க நிற்குறாங்க எண்டுறதுக்காக ஹொஸ்பிட்டலில என்னால நிற்க முடியாது...


காலமை பத்துமணி அப்பிடி மயங்கி விழுந்திருப்பன்... லேற் ஆகும்.. இரவு ஹொஸ்பிட்டலிலை வாட்டில மறிச்சிடுவாங்க எண்ட மாதிரி அந்த லேடி டொக்டர் சொன்னாப் போல துஸாரி அக்கா என்ர உடுப்புகளையும் சாப்பாட்டையும் எடுக்கப் போயிட்டா டோமிற்கு....

‘அக்கா சொன்னாக் கேளுங்க.... உடுப்பு எல்லாம் தோய்ச்சுப் போட்டுக் கொடில கிடக்கு... எது எது என்ர உடுப்பு எண்டு ரெண்டுநாள் கழிச்சுக் கேட்டா எனக்கே மறந்திடும்.... இதுக்காக பொலிஸ் நாயெல்லாம் வைச்சு மோப்பம் பிடிச்சா பாக்கப் போறீங்க....’
இதெல்லாம் வெளிய சொல்லாட்டிக்கும் உள்ளுக்க நான் நினைச்சுக் கொண்டன்...


அவ வர லேற் ஆகுது எண்டு மிஸஸ் வியகொட எனக்கு கடையில சாப்பாடு வாங்கித் தாறன் எண்டு கடைக்குப் போயிட்டா.. என்னை ஒரு பேசன்ற் மாதிரி ஒரு பெட்டில விட்டுட்டாங்க...


முன்னால எமேஜன்சி கேஸ் எண்ட றூம்.. எச்சில் இறங்க மாட்டேங்குது... டெங்குன்னுட்டாங்க எண்டா... இனி மேல் அம்மா சொன்னமாதிரி நுளம்பு வலை இல்லாமப் படுக்க மாட்டேன்... கடவுளே எனக்கு டெங்கா இருக்கக் கூடா.... நான் இண்டைக்கே டோம் போயிடணும்....  இந்த என்வெயாரென்மென்டைப் பாத்தே எனக்கு இல்லாத வருத்தம் வந்துடும்...


சுத்தி இருந்த வருத்தக்காரரைப் பாக்க வந்த அவங்கட சொந்தக்காரர் நல்லாத்தானே இருக்கு இந்தப் பொண்ணு.... இதுக்கு எதுக்கு இவ்வளவு பில்ட் அப் எண்டு பாக்குறாங்க...  நிர்வாண உலகத்தில உடுப்புப் போட்டிருக்குறவன் மாதிரி பேசன்ற் மத்தியில சும்மா கிடந்த நான் வெக்கப் பட வேண்டியதாயிடிச்சு....


அதில ஒரு சிங்கள அம்மா எனக்குப் பக்கத்தில வந்து நீங்கள் என்ன இடம் எண்டா...  அவ யாழ்ப்பாணத்தில இருந்தவவாம்.... அவக்கும் தமிழ் தெரியுமாம்.... அப்பிடின்னா எனக்கும் சிங்களம் தெரியுமே! ஒயாகே நம மொகக்த, வெலாவ கீயத எண்டு எங்களுக்கும் தெரியுமில்ல...


வீட்டில எப்ப பாரு தமிழ் பேசுறாங்க... அதெல்லாம் சந்தோசம் கிடையாது...ஆனாப் பாருங்க.. தெரியாத ஊரில முகம் தெரியாத மனிசங்களுக்கு முன்னாடி முழிக்கும் போது ஒரு ஆள் தமிழில பேசினா எப்பிடி இருக்கும்...  செம பீலிங்...


அப்புறம் நானும் கொஞ்சம் தெத்தித் தெத்திக் கதைச்சன்... நான் சிங்களம் பேசுறது சின்னப் பிள்ளை பேசுறமாதிரி இருக்காம்... நீங்க மட்டும் என்னவாம்...
அப்புறம் பாத்தா ஒரு சூசைட் அட்டெம்ற் கேஸ் வருது... அந்தப் பொண்ணுக்கு செம கிழி விழுது...


மிஸஸ் வியகொட சாப்பாடு வாங்கப் போன இருபது நிமிசத்தில அந்த வாட் இல பாதிப் பேர் எனக்கு ஃபிரண்ட்ஸ் ஆயிட்டாங்க...


அதுக்குள்ள நேர்ஸ் வந்து கையில குத்தி குளுக்கோஸ் ஏத்திட்டுப் போயிட்டா... குளுக்கோஸ் காணாமத் தான் நான் மயங்கி விழுந்தனா எண்டு செக் பண்ண முன்னாடியே எனக்கு குளுக்கோஸ் ஏத்திட்டாங்க... அதை சொல்லி என்னை வீட்டுக்கு அனுப்ப பெரிய டாக்டர் வரணுமாம்... ஸபா... அவர் இண்டைக்கு வரலைன்னா நான் நாளைக்குத் தான் வீட்டுக்கு - நோ..ஓஓ -- டோமிற்குப் போகலாம்.... அப்புறமா நான் பெரிய டாக்டர் சீக்கிரம் வரணும் எண்டு வேற பிரார்த்திக்க ஆரம்பிச்சன்...


குளுக்கோஸ் ஏத்தினாக் குண்டா வந்திருவாங்களாமே.. என்னோட பள்ளித்தோழி ஒருமுறை சொன்ன ஞாபகம்.. ஐ அப்ப நான் குண்டாகிடுவனா? ஐய் ஜாலி... ஒல்லிக்குச்சி ஒல்லிக்குச்சி எண்டு என்ர தம்பி வயசுப் பெடியள் கூட நக்கலடிக்குதுகள்.. கேவலமா இருக்கு... ஹும்... பாரேன்... நான் குண்டாகுறன்...


ஆனா என்ன? குளுக்கோஸ் ஏத்தி என்ன பயன்? என் எண்ணம் மட்டும் ஈடேறவேயில்லை.... போங்கடா நீங்க ஏத்தினது குளுக்கோசே இல்லை... ஐ ஹேற் யூ..............


அப்புறம் மிஸஸ் வியகொட வந்தா... கையில சாப்பாட்டுப் பார்சல்... சொக்கலேற் கிறீம் கிறக்கர் பிஸ்கற்... ப்றஸ்.... பேஸ்ற்... சோடா எண்டு...

”சாப்பிடுங்க”

மிஸஸ் வியகொட இற்கு தமிழ் ஓரளவு தெரியும்....

“இல்ல... எனக்குப் பசிக்கல... என்னை எப்ப விடுவினம்?”

“பெரிய டொக்டர் வரணும்...”

”................”

துஸாரி அக்கா ஒரு மாதிரி என்ர அலுமாரிக்க இருந்த சூற்கேஸுக்க கொஞ்ச உடுப்பை டோம் பிள்ளையளிட்டக் கேட்டுப் பாத்து அவயள் தங்கட இல்லை எண்டதை அள்ளி வந்திருக்கா... அதுக்கு அவவைப் பாராட்டியே ஆகணும்... ஆனா அதுக்குள்ள ஒரு நாளுக்குப் போடுற ட்ரெஸ்ஸஸின்ர காமினேசன் பிழை... அவவை ஏசவும் முடியாது... குறைப்பட்டுக்கவும் முடியாது...  தேவலை எண்டு கலகலப்பு மசாலாக்கஃபே இல தூக்கிப் போட்ட பேஸை எடுத்துக் கொண்டந்து குடுத்துட்டு தான் முதலாளியை மாட்டி விட்டுட்டனே எண்ட மாட்டர் கூட தெரியாம வாலை ஆட்டுற அந்த கூகிள் நாய்க்குட்டி மாதிரி அவ என்னைப் பரிதாபமாப் பாக்குறா... முகத்தில முத்துமுத்தா வேர்வைத்துளிகள்.... பாவம்... அவக்கு என்ன தலையெழுத்தா? என்ர உடுப்பைத் தேடி எடுத்து வரணும்னு... நான் கேளாமலே எனக்குத் தேவை எண்டு இதை செய்திருக்கா... நான் புன்னகைச்சுக் கொண்டே தாங்ஸ் சொன்னன்... அவட முகத்தில திருப்தி... இது போதும் எனக்கு இது போதுமே.. வேறென்ன வேண்டும்.... (டோன்ற் மிஸ் அண்டஸ்ராண்ட்... றைற்...)

அவவும் சாப்பாடு கொண்டந்திருக்கா..

ரெண்டு பார்சலும் தொடுபடாமல் கிடக்கு.. ரெண்டில எதைத் தொட்டாலும் மற்றப் பாசலைக் கொண்டு வந்தவங்க மனம் ஒரு மாதிரி ஆயிடுமே...

துஸாரி அக்கா போயிட்டா... மிஸஸ் வியகொட இருக்குறா... நான் அவட பாசலை எடுத்து சாப்பிட்டன்...

அவக்கும் திருப்தி... விளையாட்டுக்குக் கூட ஏன் தெரியாமக் கூட நான் யாரையும் காயப்படுத்தக் கூடாது.... இவர்கள் யார்? இவர்களுக்கும் எனக்கும் என்ன உறவு? நோய் ஒண்டுமே இல்லாத எனக்காக ஏன் இப்படித் துடிக்கிறார்கள்?

எனக்கு ஏதாச்சும் ஒண்டு எண்டா மேலிடத்தில் ஏசுவார்கள் என்று என் புத்தி சொன்னது.... இல்லை என்று என் மனம் சொன்னது... என் துவேசம் பெரும்பாலும் கரைந்து போனாலும் ஒரு மூலையில் கொஞ்சம் எஞ்சிக் கொண்டு நான் பிடித்த முயலுக்கு மூன்றுகால் என்று முரண்டுபிடிக்கத்தான் செய்தது....

நாலு மணி இருக்கும்.. என் பிரார்த்தனை வீண்போகவில்லை... பெரிய டொக்டர் வந்தார்...

அவர் ஒரு தமிழன்... ஒரு சிங்கள ஏரியாவில ஒரு தமிழ் ஆள் பெரிய டொக்டர்... நினைக்கவே பெருமையா இருந்திச்சு... அதுவும் தான் தென்மராட்சி எண்டார் பாருங்க... அட.. அட.. அட... அவரை நினைக்கும் போது எனக்கே பெருமையா இருக்கே அவரின்ர அம்மாக்கு எவ்வளவு பெருமையா இருக்கும்....  நாம எல்லாம் என்ன ஆணி புடுங்கினாலும் அப்பிடி ஒரு பெருமை வருமா என்ன?

குளுக்கோஸ் பர்சன்டேஜ் சடினாக் குறைஞ்சிட்டாம்.. அவ்வளவு தான் எண்டு இங்கிலீஸில நேர்ஸிற்கு சொல்லிட்டு என்னைப் பயமுறுத்துறாராம்...

”நீர் இண்டைக்கு வீட்ட போகேலாது... வீட்ட போகணும் எண்டா எனக்கு என்ன ஆனாலும் நான் தான் பொறுப்பு எண்டு எழுதி சைன் வைச்சுத் தாரும்....”

”ஓம்” எண்டு சொல்லிட்டு நான் சிரிச்சிட்டு சொன்னன்...

“எனக்கும் இங்கிலீஸ் விளங்கும் சேர்... குளுக்கோஸ் லெவல் எண்பது ஆயிருக்கு... அதான் மயங்கி விழுந்திருக்கன்... இப்ப குளுக்கோஸ் ஏத்தியாச்சுத் தானே... நேர்ஸ் செக் பண்ணினவா... அதப் பாத்திட்டு என்னைப் போகவிடுங்கோ” எண்டு டொக்டருக்கே நான் பாடம் எடுக்கத் தொடங்கினன்...
அவர் அப்பிடியே சாக் ஆயிட்டார்....

“தென்மராட்சிப் பிள்ளையளுக்கு இப்பிடி எல்லாம் கதைக்கத் தெரியுமா?”
எண்டு கேட்கிறார்...

பிறகு என்னைப் போகலாம் எண்டு சொன்னதும் மிஸஸ் வியகொட போன் பண்ணி வரச்சொல்லி ட்ரக் வந்திச்சு... வெற்றிப் புன்னகையோட பொலிஸ் ட்ரக்கில ஏறி அஞ்சு அரை மணிக்குப் போய் பொலிஸ் ஸ்கூலில எங்கட டோமில இறங்கினன்...

ஃபிரண்ட்ஸ் எல்லாரும் ஈவினிங் கேமில இருந்தினம்... அவயளும் ஓடி வந்து என்ன எண்டு கேட்க  ”ஒண்டுமில்லை... குளுக்கோஸ் ஏத்தினாங்க” எண்டு முடிச்சன்...

எல்லாரும் என்னை ஏதோ மரணவாசல் மட்டும் போய் தப்பி வந்தமாதிரியே பாக்கினம்....

ஆறரை மணி அப்பிடி எல்லாரும் ஏதோ லெக்ஸர்ஸ் போயிட்டாங்க.... நான் போகலை... அண்டைக்கு என்னை டிஸ்ரப் பண்ண மாட்டினமாம்.... (அதுக்குப் பிறகும் எனக்குக் கொஞ்சமாக் கால் வலிச்சாலே இருக்க சொல்லிடுவினம்... அது வேறகதை....)

மிஸஸ் வியகொட வாங்கின எல்லா சாமானும் (சாப்பாட்டுப் பாசல் தவிர) அப்பிடியே இருந்திச்சு... அவட்டக் கொண்டு போய்க் கொடுத்தன்... 

“இந்தாங்க மிஸ் தாங்ஸ்...”

“உனக்குத் தான்...”

”இல்லை.. நான் தான் வந்துட்டனே.... இதை நீங்க சாப்பிடுங்க... ”

“ஏன் நீ சாப்பிட இல்லை?”

“இது உங்கட காசு மிஸ்... அடுத்தவங்க காசில சாப்பிட்டா பாவம் எண்டு எங்க அம்மா சொல்லுவா...”

”என்ர பிள்ளை ஹொஸ்பிட்டல் எண்டா நான் வாங்குவன்... நீ எண்டா நான் வாங்குவன்... ஏன் நீ வித்தியாசம் செய்யுறாய்? நான் சிங்களம்.. நீ தமிழ் எண்டா... தமிழ் சிங்களம் வேற வேற இல்லை.. எல்லாம் ஒரு ரத்தம்...”
எனக்கு சுள்ளெண்டது... மிஞ்சிக் கிடந்த இனத்துவேசமும் அழிஞ்சு போச்சு.. இப்பவும் அவங்க அப்பிடி செய்தாங்க எண்டு சொல்லுவன்.. அது உண்மை.. ஆனா ஒரு தனி மனிதனை அவன் சிங்களவன் எண்டு அவன் எனக்கு எதுவும் செய்யாமலே வெறுப்பதில்லை....

இன்னமும் மிஸஸ் வியகொட இன்ர உருவம் எனக்கு ஞாபகம் இருக்கு... அவக்கு அப்ப நாற்பத்தைந்து வயசாம்... பாத்தா அப்பிடி மதிக்க ஏலாது.... ரீசேட்டும் பொற்றமும் அடிச்சிட்டுத் துள்ளிட்டுத் திரிவா...  ஒல்லியான தேகம்... நிறம் குறைவு... கட்டை... தலை பின்னி மடித்துக் கட்டி கிளிப் அடிச்சிருப்பா... எப்பவும் வெத்தில போட்ட வாய்... கண்களில் ஏதோ ஒரு சோகம்... எனக்கு சிங்கள இனத்தில ஒரு அம்மா இருந்து அவ எதையோ தொலைத்து விட்டது போல் இருந்தால் எப்படி இருக்குமோ அப்பிடி ஒரு தோற்றம்....!

மறக்கமுடியாத நாள் அது! அன்றைய நாளுக்கான என்னோட ஹீரோயின் அவ தான்... மிஸ் யூ மிஸ்!

களுத்துறைக் கலாட்டாக்கள் - 6

நான் தான் உடுப்ப விட்டுட்டு வந்துட்டனே... எங்களைப் பாக்க வாறதுக்கு பேரன்ஸுக்கோ றிலேசன்ஸுக்கோ சண்டே மட்டும் தான் அனுமதி இருக்கு... நான் அம்மாட்ட புலம்பின புலம்பில வியாழக் கிழமையே மறுபடியும் அம்மா கொழும்பு வந்துட்டா.... விடமாட்டாங்க எண்டு தெரியும்... அதால கொழும்பில இருக்குற ஒரு மாமாவைக் கூட்டிட்டு வந்தா.. அவருக்கு சிங்களம் தெரியும்...  கார் வைச்சிருக்கார்.... பெரிய பிஸ்னஸ் மான்... அவர் வந்து கதைச்சதும் என்னைப் பாக்க விட்டுட்டாங்க... எனக்கு ட்ரெஸ் வந்திடிச்சு...  அதுக்கு அப்புறம் என்னைப் பாக்குற பார்வையிலயே ஒரு மரியாதை விளங்கிச்சு... அது... அந்தப் பயம் இருக்கணும்... (மியாவ்...)...

ஞாயிறு எண்டா எல்லாரின்ர பேரன்ஸும் வருவாங்க... பிள்ளையள் இங்க சாப்பாட்டுக்கு கஸ்டப்படுதுன்னு தப்பா நினைச்சுட்டு அவங்க வெறாயட்டி வெறாயட்டியா சாப்பிடுற அயிட்டம்ஸ் எல்லாம் கொண்டருவாங்க.. எல்லாத்தையும் எல்லாரும் பங்கு போட்டுக்குவம்...


***********************************************************************************


காலுக்குள் பிடித்தால்...

சும்மா இருந்த கால் துள்ளத் தொடங்கியதும் காலுக்க பிடிச்சிட்டுது... இருக்க முடியாது..(புரியணும்...) நடக்க முடியாது... ரெண்டு நாள் நோ எக்ஸ்ஸைஸ்... அம்மா எண்ணெய் அனுப்பினா... வலி ஓடிப் போச்சு..

களுத்துறைக் கலாட்டாக்கள் - 5 - களுத்துறையில மலை

ஒரு நாள் எங்கள மலை ஏறக் கூட்டிப் போற எண்டாங்க... நாங்களும் அதை நம்பி வெளிக்கிட்டம்... பனடோல், தண்ணி போத்தல், பாண்டேஜ், பிக்கா, சொக்கா எல்லாம் எடுத்துக்கிட்டுப் போனம்...  அப்பவும் சந்தேகம்.. களுத்துறைல எங்கடா மலை இருக்குன்னு...

அப்புறம் பாத்தா எல்லாரையும் அந்தப் பெரிய பொலிஸ் ஸ்கூலை சுத்தி நடத்திக் கூட்டிப் போயிட்டாங்க... அதுவும் நல்ல பாதை இருக்கும் போது புல்லுக்கால... பட்... ஃப்ரண்ட்ஸோட போறதுன்னா நரகத்துக்குக் கூட போக நான் ரெடி.. ஏன்னா அதுவும் என்ஜோய் தான்....

போகப் போக இருந்த அன்னாசிக்காடுகளை ஸ்கான் பண்ணி அன்னாசிப் பழங்களையும் பலாப் பழங்களையும் பப்பாசிப் பழங்களையும் வேட்டையாடினம்... (???)


துப்புத் துலக்குற மாதிரி போட்டி எல்லாம் வைச்சாங்க... அதை விட எங்களுக்கு எந்தப் பழம் எந்த மரத்துல இருக்கு எண்டுறதுலயே நினைப்பு இருந்திச்சு...

களுத்துறை கலாட்டா - 4 - நான் என்ன சொல்லிவிட்டேன்... நீ ஏன் குழறுகிறாய்?

ஒரு முறை எங்கட டோமிற்குப் பொறுப்பா இருந்த அக்கா எங்களோட ஈவினிங் கேம்ஸில ஜொய்ன் பண்ணாம யாரோடயோ போன் பேசிட்டிருந்தா... முடிய வந்து அவவைக் கலாய்ச்சம்... அவ சிம்பிளா என் போய் ஃபிரண்டோட கதைச்சன் எண்டுட்டா... எங்கட டோமில ஒரு பொண்ணு எப்ப பாரு அவங்க அம்மாகூட போன் பேசும்...  அதை நாங்களும் கவனிச்சிருக்கம்... அவவும் கவனிச்சிருக்கா... அவ எங்கிட்ட போய் ஃபிரண்ட் இற்கு என்ன தமிழ் எண்டு கேட்டா.... எனக்கே அது சரியாத் தெரியாது...

அப்ப போய் ஃபிரண்ட் எண்டா ஒரு பொண்ணு ஃபிரண்டா இருந்தா கேர்ல் ஃபிரண்ட் எண்டும் ஒரு பையன் ஃபிரண்டா இருந்தா போய் ஃபிரண்ட் எண்டும் தான் நான் நினைச்சுட்டிருந்தன்...  சிலநேரம் “எனக்கு நிறையப் பசங்க ஃபிரண்ட்ஸா இருக்காங்க” எண்டுறதை சொல்லுறதா நினைச்சுக் கொண்டு “எனக்கு நிறைய போய் ஃபிரண்ட்ஸ் இருக்காங்க” எண்டு கூடச் சொல்லியிருக்கன்...

அப்புறம் என்னோட ஒரு ஃபிரண்ட் டிக்ஸனரி ரெபறென்ஸ் சொல்லித் தான் நான் நினைச்சது தப்புன்னு தெரிஞ்சுகொண்டன்.... ஏன்னா எதையும் ஆதாரம் இல்லாம நம்ப மாட்டம்... நாங்கெல்லாம் ரொம்ப உசார் பாட்டிகளாக்கும்... இப்ப நினைச்சா கிண் எண்டுது...

என்னோட இருந்த இன்னொரு பொண்ணு அதுக்கு காதலன் எண்டு ட்ரான்ஸ்லேற் பண்ண இல்லடி எண்டு வேற அடிச்சுக்கிட்டம்..  அந்த அக்காக்கு காதலன் எண்ட வேட் விளங்கலை....

அதனால என்னட்ட இருந்த பேனையை எடுத்து ஊரில படிச்ச சிங்கள எழுத்துக்களைக் காட்டி சீன் போடணும் எண்டு கையில சிங்கள எழுத்துக்களால காதலன் எண்டு எழுதிக் காட்டினன்...  அவ வாசிச்சிட்டு அந்தப் பொண்ணைப் பாத்து “காதலன் இருக்கா” எண்டாவே பார்க்கலாம் அந்தப் பொண்ணு என்னவோ தன்ர கற்புப் பறிபோனமாதிரி குழற ஆரம்பிச்சிடிச்சு... அதுக்கு நான் தான் காரணமாயிட்டன்... ஒரு மாதிரி சமாளிச்சிட்டு அதுக்கு அப்புறம் அந்தப் புள்ளயோட வாயே துறக்குறதில்ல நான்...

களுத்துறை ட்ரெயினிங் கலாட்டாக்கள் - 3- இது தமிழ்ப் பொண்ணுங்களுக்காகவும் தமிழ்ப் பசங்களுக்காகவும்

இது தமிழ்ப் பொண்ணுங்களுக்கு...

எங்கட டோம் இன்ர மாணவத் தலைவிக்கு தமிழ்-சிங்களம் ரெண்டும் தெரியும். அதோட அவள் கொஞ்சம் ஃபொவட் ரைப்... அதால தான் அவளை லீடராக்கினாங்க... அவவோட எங்களுக்கு கஜாலாகிடிச்சு... பிகோஸ் நாங்க லேற்றாப் போற மாட்டரை அவள் போட்டுக் குடுத்து ஏச்சு வாங்க வைச்சுட்டாள்...

அவ்வளவு ரணகளத்துக்கயும் க்ரீம் பூசி பவுடர் பூசித் தான் வருவாள்... அவளோட லிப்ஸ் கொஞ்சம் இயற்கைக்கு அதிகமா சிவப்பா இருக்கும்.. அது லிப்ஸ்ரிக்கா எண்டுறது என்ர நீண்ட நாள் சந்தேகம்.. பட் சொல்ல முடியல...

ஒரு முறை அவசர அவசரமா நாங்க பரட் கிறவுண்ட்ஸிற்குப் பாயும் போது அவயளின்ர ஏரியாப் பக்கம் நோட்டம் விட்டம்... ஒரேயொரு கண்ணாடி தான்.. அதில அவள் லிப்ஸ்ரிக்கைப் பூசிட்டு அதை துவாயால துடைச்சிட்டிருந்தாள்... பூசின மாதிரித் தெரியக் கூடாது... ஆனா பூசணும்னா இதாங்க வழி... பூசிட்டுத் துடைக்கணும்...

வெயிலில போய்க் காயுறதுக்கு எதுக்குடி லிப்ஸ்ரிக்... ? பாக்குறதுக்கு என்ன பசங்களா இருக்காங்க.... (பெண்களே... நோ வன்முறை... சும்மா கலாய்ச்சன்... ஓகே)
**********************************************************************************
இது தமிழ்ப் பசங்களுக்கு....

நைற் அற்றெண்டன்ஸ் எடுக்கப் போகும் போது அங்க ட்ரெயினிங் இல இருக்குற பொலிஸ் அக்காமார் வருவினம்... அவயளிட்ட சும்மா பேச்சுக் குடுத்தம்.. ஒரு அக்கா சொல்லுறா... சிங்களப் பசங்களை நம்பமுடியாதாம்... தமிழ்ப்பசங்களைத் தான் லவ் விசயத்தில நம்பலாமாம்.... கேளுங்கடா... இன்னமும் உலகம் உங்களை நம்பிட்டிருக்கு... அதுக்காக எண்டாலும் அதைக் காப்பாத்தப் பாருங்க....

களுத்துறை கலாட்டாக்கள் - 2

”ஙொய்....”

நுளம்பா நுளம்பு....

சொறிஞ்சு சொறிஞ்சே ரத்தம் வந்திடும் போல இருக்கு..  பெட்டுக்கு மேல நுளம்பு நெற் இருக்கு... அது எத்தனை வருசத்தானோ...

ஒரு மாதிரி பகல் அலைச்சல்... விடியப்பறம் அப்பிடியே தூங்கிப் போக....

“எழும்புடி... ”

கனவில கேட்குது..

”ம்ம்..”

மறுபடியும்..

”எழும்புடி...”

வீட்டயா இருந்தா கதை வேற...

”நான் எங்க இருக்கன்... இங்க எப்பிடி வந்தன்...” ரேஞ்சில முழிக்க அக்சன் குடுக்க ரைம் குடுக்காம ரியாக்சனும் குடுக்காம அவ்வளவு வெள்ளெண குளிச்சிட்டு வர சொல்லிட்டாங்கய்யா.... சொல்லிட்டாங்க...

நாங்க வந்த நேரத்துக்கு பிளேன்ரி முடிஞ்சுது... ரெண்டு ரீசேட் தந்தாங்க.. வெள்ளையில ரெட்டால ஃபியூச்சர் லீடர்ஸ் எண்டு அடிச்சது... அதை தான் ட்ரெயினிங் ரைம் போடணுமாம்.. வெள்ளைக் கலர்...  அந்த தூசுக்கு புசுக்குன்னு ஊத்தையாயிடும்... ஐயையோ அப்பத் தோய்க்கணுமா... சீ...  நாங்கெல்லாம் உந்த அளப்பரைக்காகவே எப்படா பள்ளிக்கூடம் படிச்சு முடிப்பம் எண்டு யோசிச்ச கும்பல்... இதுக்குள்ள....

எக்ஸஸைற்கு லைன் பண்ணி மாச்சிங் போற மாதிரி விட்டுட்டாங்க...

ஸ்கூல் படிக்குறப்போ கூட நான் அதுக்கெல்லாம் போனதே கிடையாது... அதுக்கெண்டு உயரமா ஸ்மாட்டான ஆக்கள் எங்கட ஹவுஸில இருப்பினம்...  ப்ரக்டீஸ் டைமில வலை போட்டுத் தேடுவினம்... நான் என்ன செய்வன்..  என்னைய மாதிரியே மெய்வல்லுனர் விளையாட்டில இன்ரெஸ்ட் இல்லாத பட் என்னைய விட வயசு குறைஞ்ச சின்னப் பிள்ளையளையும் கூட்டு சேத்துக்கிட்டு வேற ஒரு ஹவுஸிற்க போய் உட்கார்ந்திடுவன்... அந்தக் குட்டிப் பிள்ளயளோட சேர்ந்து அலம்புவனா... அலம்புவன்... பக்கத்தில இருக்குறவன் காதில ரத்தம் வந்திடும்.. அந்த ஹவுஸில தேடுதல் வேட்டை நடக்கும் போது நாங்க அந்த இடத்தில இருந்து “டொயிங்” என்று மாயமாக மறைந்திருப்போம்...  நான் என்ன செய்யட்டும்... விளையாடிக் கை காலை முறிச்சிட்டாலும் எண்டு என்னை அந்த வயசில இருந்தே மண்ணுக்கு கூட இறங்க விடுறதில்லை... விளையாட்டில இன்ரெஸ்ற் வாறதுக்கு குறைந்தபட்சம் நான் நேசரி கூடப் போனது கிடையாது...

அதுவும் லெப்ற் றைற் எல்லாம் இல்லை... வம் தக் தான்.....

எவ்வளவு லேற்றாப் போனாலும் என்னையப் பிடிச்சு முன்னுக்கு விட்டுறாங்களே... சே...  லைஃப் இலயே ஃபெஸ்ற் ரைம் நான் உயரமா இல்லைன்னு வருத்தப் பட வேண்டியதாயிடிச்சு... பிறகு பிறகு அவங்க கண்டுக்கலைன்னு கடைசிக்கு முதல் லைனில என் ஃப்ரெண்ட்ஸோடயே அலம்பிக்கிட்டே மாச்சிங் செய்ய ஆரம்பிச்சிட்டன்...  விலாவாரியான அலம்பல் இல்லை.. அவயிட கருத்துக்கும் அக்சன்ஸிற்கும் நாங்க கருத்து வெளியிடுவம்.. தற்ஸ் ஓல்...

மாச்சிங் முடிய க்ரவுண்ட்ஸிற்க போய் எக்சசைஸ் செய்யணும்...

“வண் ரூ த்றீ ஃபோ..........”

மூசுது...

படிக்கும் போதாச்சும் சைக்கிள் ஓடுறது எண்டு பழக்கம் இருக்கு... எக்ஸாம் முடிஞ்ச பிறகு அதுவும் இல்லை... திங்குறது தூங்குறது தங்குறது... ஃபேஸ்புக் பாக்குறது எண்டு என் லைஃப் போயிட்டிருந்திச்சு...  இப்ப வந்து துள்ள சொன்னா முடியுமா?

ஒரு மாட்டர் சொல்லணும்... களுத்துறை பட்ச் மட்டும்தான் அதுவும் எங்கட ட்ரெயினிங் பட்ச் தான் லேசா இருந்தது.... மற்றவங்களையெல்லாம் பிழிஞ்சு எடுத்திட்டாங்க.... அதுக்கே என்னால முடியலை....

குடல் வெளிய வராத குறை... அந்த நேரத்தில்தான் அந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது... நான் செய்த பாவம் எங்கயோ மரத்தில இருந்து முசுறு வடிவத்தில எனக்கு மேல வந்து இறங்கி ரணகளமாகி பொலிஸ் அக்காமார் என்னைக் கூட்டிப் போச்சினம்... பா... எனிவே ஒரு நாள் எக்சசைஸில இருந்து தப்பிட்டன்.... தாங்ஸ் முசுறு... என்னால .... இல்லை இல்லை... எனக்காக நீ சூசைட் பண்ணிக்கிட்டியே...  ரெஸ்ற் இன் பீஸ்.... டொயிங்...
நான் டோம் இற்குப் போயிட்டன்.. எழுமணி அப்பிடி எல்லாரும் ஓடி வரினம்... ஏதாவது பிரச்சினையா எண்டு பாத்தா க்ரவுண்ட்ஸில இருந்து ஓடித் தான் வரணுமாம்...

காலமை சாப்பிடக்கூட்டிப் போனாங்க... எங்களுக்கெல்லாம் விடியக்காலமை ஆறு மணி வாற மாட்டர் மறந்து போனதை ஞாபகப் படுத்தினவங்க இவங்க தான்... ஜென்மத்துக்கும் ஏழுமணிக்கெல்லாம் காலமைச்சாப்பாடு சாப்பிட்டது கிடையாது.. ஒரேயொரு வாட்டி அதுவும் ஸ்கொலசிப் எக்ஸாமிற்கு நாங்க இருந்த இடத்தில இருந்து திரு-இதயக் கல்லூரி காண பஸ்ஸில போகணும் எண்டு வேளைக்கு இடியப்பமும் சம்பலும் அடிச்சுட்டுப் போய் போகப் போக சத்தியெடுத்தது எனக்கு ஞாபகம் இருக்கு... அப்பிடி இருக்க... டெயிலி வாமிற்றா.... மம்மீ..

நல்ல வேளை பிளேற்றில லஞ்சீற் விரிச்சுத்தான் சாப்பாடு... பெரிய்ய்ய கன்ரீன்... நீண்ட அகன்ற மேசைகள்... கிட்டத்தட்ட ஐம்பது பேர் எண்டாலும் ஒரேயடியா சாப்பிடலாம்...  பாணும் பருப்பும், பயற்றம் துவையல் வித் சீனி அண்ட் தேங்காய்ப்பூ ஓ(ர்) கட்ட சம்பல், அவிச்ச கடலை இப்பிடியான சாப்பாடு தான் காலமை.... நியூட்ரிசனாமா....

மறுபடியும் பொலிஸ் ஸ்கூலை சுத்தி ஓட விட்டுட்டாங்க...  சனியன் பிடிச்ச ஸூ லேஸ் அவிழுது... அதுக்கு வேற ஒரு பொலிஸ் விளக்கம் சொல்றார்... சூலேஸ் கட்டுறது எப்பிடின்னு...

எங்க அம்மா சாறிட பாவாடை கட்டுறது எப்பிடி எண்டு சொன்ன ரெக்னிக் அது... அவருக்கு ”அட்வைஸ் அருணாசலம்” என்ற அர்த்தத்தில ”ஏஏ” எண்டு பேர் வைச்சாச்சு... எங்களுக்கு எங்கட க்ரூப் ஹெட் அட்வைஸ் பண்ணும் போது இன்னொருத்தர் பக்கத்தில இருந்து எப்ப பாரு கருத்து வெளியிடுவார்.. அவருக்கு ”கருத்துக் கந்தசாமி” அதாவது “கேகே” எண்டு பேர்... (பாவம்... மூண்டு கிழமை சைட் அடிக்காம இருக்குதுகளே... காய்ஞ்சு போயிடுங்களே... எண்டு எங்கட க்ரூப்பிற்கு தேறக்கூடிய ஆக்களைப் பொறுப்பானவங்களா அனுப்பி வைக்குறதில்லையா? என்ன பொறுப்பில்லாத மனுசங்கய்யா நீங்க... நீங்க எல்லாம் பெரிய மனுசரா? பட் இற்ஸ் ஓகே... பிகோஸ் எங்கட டோமிற்கு பொறுப்பா இருந்த அக்கா (துஸாரி அக்கே) நல்ல வடிவு... ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சக்கரை எண்ட மாதிரி அவவையாச்சும் சைட் அடித்து எங்க மனதை ஆத்திக்குவம்....)

திண்ட உடனே ஓட விட்டா திண்டதெல்லாம் வெளிய வராதா? ஏண்டா ஏன்?
அதுக்குள்ள சில ஏரியாக்கள் உயரமா இருக்கும்... சிலது பள்ளமாப் போகும்... என்னமோ எங்களுக்கு ட்ரெயின்ங் குடுக்குறதுக்காகவே அப்பிடிக் கட்டின மாதிரி எங்கட “கேகே” கருத்து சொல்றார்.... இப்பிடி ஓடுறதும் ஒரு பயிற்சியாம்....

அந்த அளப்பரை முடிய லெக்ஸர்ஸ் எண்டு சொல்லி லைன் பண்ணி அனுப்பி வைச்சாங்க.. ஒரு ஹோலுக்கு.... எல்லா டோம் இல இருந்த பிள்ளையளும் ஒண்டா சேர்ந்து அலம்பத் தொடங்க வந்து வதைக்க ஆரம்பிச்சாங்க... என்னவோ ஐஸ்கிரீம் ஐக் காணாத பிள்ளை வைச்சு வைச்சு சூப்புற மாதிரி மைக் கிடைச்சதும் சூப்புறான் சூப்புறான்.... டேய் நீ உண்மையை சொல்லு.... நீ இப்பதானே ஃபெஸ்ற் ரைம் மைக்கைக் கண்ணால காணுறாய்.... அதுக்காக இப்பிடியா?

சட்டம், யாப்பு, வீதி ஒழுங்குகள், முதலுதவி, சாறி கட்டுறது, மேக் அப், ரேபிள் டைனிங் மனர்ஸ் எண்டு நிறைய.... ஒவ்வொரு நாளும் ஒவ்வொண்டு...  இதுக்க சிலருக்கு இங்கிலீஸ் தெரியாது... அதுக்காக அவை சொல்லுறது- அதுக்கு ட்ரான்ஸ்லேசன் வேற... நாங்க ரெண்டையுமே கேட்கலை... போங்க சேர்... போய் புள்ளகுட்டியைப் படிக்க வைங்க...

லெக்சர்ஸ்ஸிற்காக நாங்க கப் உம் பிளேற்றும் கொண்டு போவம்.. பிறகு அப்பிடியே சாப்பிட்டு வரலாம் எண்டு.... பிறகு லெக்ஸர்ஸ் அளப்பரையைத் தாங்கமுடியாத நிலை வரும் போது- எங்கள் பொறுமை எல்லை மீறும் போது அவற்றைக் கீழே போட்டு சத்தம் எழுப்பி நாங்க தூங்கீட்டம்...தொல்லையை நிறுத்துமாறு சிக்னல் குடுப்பதுண்டு....

மத்தியான சாப்பாடு பற்றி சொல்லியே ஆகணும்.... எனக்கு மரக்கறி பற்றித் தான் தெரியும்... அசைவமும் சுவை குறைந்ததல்ல என்று என் நண்பி சொன்னாள்... செம வெட்டு... அதுவும் டெசேட் வேற... அன்னாசிப் பழம், பப்பாசிப்பழம், ஐஸ்பழம் என்று குறையேயில்லை...  பொலிஸ் ஸ்கூல் ஒரு பெரிய ஏரியா... பெரதேனியாக் கம்பஸ் மாதிரி...  அங்கயே ஒரு பக்கம் அன்னாசிக் காடு இருக்கு.... இன்னொருபக்கம் பப்பாசிக் காடு...பிலாப் பழம் கூட இருக்கு... என்ன இனிப்புக் கொஞ்சம் காணாது.... ஸோ என்ன குறை எங்களுக்கு... தாராளமா டெசேட் வரும்....

முடிய லெக்ஸஸ் எகெயின்... அதுலயும் தூங்கிட்டு பிறகு ஒரு பிரேக் விடுவாங்க... அதுக்கும் தூங்கிட்டு பின்னேரம் விளையாடப் போயிடணும்.... சும்மா சின்ன சின்ன விளையாட்டுக்கள் தான்...

களுத்துறைல எப்ப மழை பெய்யும் எண்டே தெரியாது... புசு புசு எண்டு எங்க இருந்தோ வாற மேகங்கள் மழை பெஞ்சிடும்....  ஓடி வாற காத்து அதைத் தள்ளிட்டுப் போயிடும்.... அந்த கப்பில வெளிய காயப் போட்ட எங்கட உடுப்பெல்லாம் பரிதாபமாக் கண்ணீர் சிந்தும்...   வெளிய நிண்டுட்டு பிரேக் நேரம் மழை முடிய வந்து உடுப்பைப் பாக்குற எங்களைப் பாத்து சூரியன் கண்ணடிச்சு பல்லிளிக்கும்..... கிறுக்கு பயபுள்ள...

பாத்துப் பாத்து உந்த வெயிலை நம்பேலா எண்டு டோம் இற்குள்ளயே கட்டில் கம்பில நாங்க உடுப்பு போட வெளிக்கிட்டம்... வெள்ள உடுப்பு.... கறள் பிரள வெளிக்கிட்டுது...  எம் முயற்சியில் இருந்து சற்றும் தளராமல் ஒரு கொடி கட்டி அதிலயே உடுப்பப் போட வெளிக்கிட்டம்.... என்ன... வெயிலுக்க கிடந்து காய ஒரு நாள் எடுக்கும் எண்டா உள்ளுக்க காத்தில காய ரெண்டுநாள் எடுக்கும்...  பரவால்ல... நாலு தரம் தோய்க்குறதுக்கு இதுவே தேவலாம்....

எங்கட க்ரூப்பிற்கான ஈவினிங் கேம்ஸ் க்ரவுண்ட்ஸ் சரியான பள்ளத்துக்கான் இருக்கு... மழை பெய்ஞ்சா அது குளம் ஆகி ரீ நிறத்தில தண்ணி நிற்கும்... எங்களுக்கு றெஸ்ற்... அதனால பின்னேரம் மழை பெய்யணும் எண்டு கூட நான் வேண்டியிருக்கன்....  கொஞ்ச நாள் பாத்திட்டு இது சரிவராதுன்னு எங்களுக்கான க்ரவுண்ட்ஸை மாத்திட்டாங்க மழை நேரத்தில மட்டும்...

ஈவினிங் கேமிற்கு முன்னாடி பிளேன்ரீ கல்பணிஸோட அல்லது பணிஸோட வரும்...

நைட் ஏழுமணிக்கு டின்னர்... அது முடிய ப்ரேக்... அப்புறம் டோம் இல இருக்குற சின்ன க்ளாஸ்றூமில அற்றெண்டன்ஸ் எடுப்பாங்க... அப்புறம் அனுப்பிடுவாங்க...

ஒரே ஒருநாள்தான் மோனிங் குளிச்சிருப்பம்... தெரிஞ்சு போச்சு இது வேலைக்காகாதுன்னு...  விடியத் தூங்குற சந்தோசத்தை இழக்கவும் கூடாது... குளிக்கவும் வேணும்..  ஸோ நைட் தூங்க முன்னாடி குளிச்சிட்டு உடுப்புத் தோய்ச்சிட்டுப் படுப்பதாக எங்கள் சங்கம் தீர்மானித்து அதை நடைமுறைக்குக் கொண்டு வந்தது... எல்லாரும் விடிய எழும்பிக் குளிக்கக் க்யூவில் நிற்கும் போது நாங்க மட்டும் ஏதோ வெட்டிக்கிளித்து விட்டது போல லேற்றா எழும்பி முகம் மட்டும் கழுவிவிட்டு தயாராகிவிடுவோம்....

இரவு மக்சிமம் போனில் அம்மாவுடன் அன்றைய அளப்பரைகளை சொல்லி ஃப்ரெண்ட்ஸுடன் அலம்பி விட்டு நுளம்பின் தாலாட்டுடனே தூங்கி விடுவோம்...  எங்கட பெட்டுக்கு மேல கட்டியிருந்த நுளம்பு நெற் பாதுகாப்பானது என்று சொல்லி விட்டு நுளம்பு நெற்றை எப்பிடி விடியற்காலையில் சுத்திக் கட்டி அதை பெட்டில் டிஸ்ரப் இல்லாமல் வைத்திருப்பது என்று கூட சொல்லித் தந்தார்கள்...  விடியற்காலையில் அதைக் கட்ட வேண்டும் என்ற ஒரேயொரு காரணத்துக்காகவே அதை இரவில் போடாமல் பெட்சீற்றுக்குள் முடங்கி விடும் எங்கள் சங்கம்.... போகப் போக நைட் நெற்றைப் போட்டு விட்டு அவங்க கண்டுக்கலை எண்டு குத்துமதிப்பா சுத்திக் கட்டி விடுவோம்...

எங்கள் விடியற்காலை துஸாரி அக்கேயின் “தங்கச்சி... இக்மனட்ட யன்ன” உடன் விடியும்....  முழிச்சுப் பாத்தால் நித்திரைத் திரையூடாக என் நண்பி ஸூ உடன் நடனமாடிக் கொண்டிருப்பாள்... பிறகென்ன நானும் அவள் நாட்டியத்தில் இணைந்து கொள்வேன்... அறைக்குள்ளே செருப்பு போட்டு பழகினது என்றால் அங்கு தான்...  ம்ம்...

இன்னும் என்ன எல்லாம் இருக்கு தெரியுமா? சும்மா சொன்னதுக்கு அழுத பொண்ணு, லிப்ஸ்ரிக் அடிப்பது அடிச்ச மாதிரித் தெரியாம இருக்க என்ன செய்யணும், மயங்கி விழுந்தா எப்பிடி இருக்கும், மலை ஏறினம், இவங்க இன்ஞினியரிங்கா இப்பிடி நிறைய மாட்டர்ஸ் இருக்கு... ஸோ தொடர்ந்தும் அலம்புவன்... கேட்க வந்துடுங்க....

களுத்துறை ட்ரெயினிங் கலாட்டாக்கள் - 1

ஏ/ல் எக்ஸாம் முடிஞ்ச பிறகு எங்கட பட்சுக்குத் தான் ஃபெஸ்ற்றா ட்ரெயினிங் எண்டு ஸ்ராட் பண்ணினவை... அதுக்கு ஒரு லெற்றர் வந்திச்சு.. வீட்ட சின்னத் தங்கச்சி கூடப் பொங்கத் தொடங்கிட்டுப் போவேணாம் எண்டு...
ட்ரெயினிங் இற்குக் குடுத்த காசுக்கு உண்மையிலயே வெளிநாட்டில இருந்து இதுக்கெண்டு ஆக்களைக் கூட்டிவந்து பழக்கணும்... இவயள் காசை அடிச்சுட்டு படையளைக் கொண்டு பழக்கினம் எண்டு கருத்து ஒண்டை ஆரோ அம்மாட காதில போட்டிட்டினம்... அவயள நம்பி என்னெண்டு உன்னை அனுப்புறது எண்டு குதிக்க ஆரம்பிச்சா...

“எல்லாரும் போகினம் தானே.. என்னை மட்டும் விழுங்கப் போறாங்களே?”

“எல்லாரும் கிணத்துக்க குதிக்கினம் எண்டுறதுக்காக நாங்களும் குதிக்கேலுமே..”

“ஐயோ அம்மா.. லூசு மாதிரிக் கதைக்காதையுங்கோ... ட்ரெயினிங் போகேல்லை எண்டா கம்பஸ் போக விடாயினமாம்...”
சும்மா ஒரு வெடியை எடுத்து பத்த வைச்சன்...
.................................
பெரிய ஆலோசனைக் கூட்டம்... என்னைத் தவிர எல்லாரும் சேர்ந்து ஆலோசிச்சு போனில் எல்லா சொந்தக்காரரிட்ட விசாரிச்சு என்னையும் என்ர பட்ச் காரரிட்ட விசாரிக்க சொல்லி ஒரு மாதிரி எனக்கான ட்ரெயினிங் போறதுக்கான ஆணை வந்தது... திங்கள் போகோணும்...  ஒரு பெரிய்ய்ய்ய்ய லிஸ்ற்றே அனுப்பியிருக்காங்க.. அதில கிடந்த சில அயிட்டம்ஸ்(?) என்ன எண்டே எனக்குத் தெரியாது...  சனிக்கிழமை மட்டும் ஒரு கறுமமும் வாங்கேல்லை... ஞாயிறு கடை திறப்பாங்களே?

ஒரு மாதிரி அம்மாவுக்கு வயின் குடுத்து எல்லாம் வாங்கியாச்சு...

அந்த லிஸ்ற்றில கோப்பை, கப், நைட்டுக்குப் போட்டுக்குறதுக்கான ட்ரெஸ் எல்லாம் போட்டு இல்லை...  ஸோ நான் அது கொண்டு போகலை... (வட் எ கொமன் சென்ஸ்... நோ நோ நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது உங்கள் லப் ரொப்.. துப்புவதால் எனக்கொன்றும் நேராது என்று ஞாபகப் படுத்த விரும்புகிறேன்..)

பிறகென்ன? அதுவும் ஒரு கூத்துத் தான்... ரைம் வரட்டும் சொல்றன்...
ஒரு மாதிரி அம்மாவையும் இழுத்துக் கொண்டு கொழும்பு வந்தாச்சு... எங்களுக்கு களுத்துறை பொலிஸ் ஸ்கூலிலை தான் ட்ரெயினிங்... இடமும் தெரியாது.. என்னோட இன்னும் கொஞ்ச ஜீவனுகள் இந்த பேப்பஸிற்காக வந்திச்சினம்.. அவயளோட இழுபட்டுக் கொண்டு போயாச்சு... ஒரு மாதிரி டொக்குமென்ற்ஸ், லெற்றர் எல்லாம் குடுத்துட்டு எங்களுக்கு ஒரு மீற்றிங் மாதிரி வைச்சிச்சினம்... எங்கள என்ன மாதிரி வதைக்கப் (உஸ்....) ட்ரெயின் பண்ணப் போகினம் எண்ட மாட்டர் தான் அது.. அப்பத் தான் சொல்லினம்... உங்களுக்கு எண்டு கோப்பை, கப் கொண்டு வந்தீங்களா எண்டு..

’போங்கடா டேய்... இதெல்லாம் முதலே சொல்ல மாட்டிங்களா?’
எங்களை க்ரூப்பாப் பிரிப்பினம்... ஒவ்வொரு க்ரூப்பும் ஒவ்வொரு இடத்தில தங்கும்..  (பொலிஸ் ட்ரெயினிங் எடுக்குற ஆக்களை அப்பிடித்தான் ஒவ்வொரு குருப்பாத் தங்க வைப்பினம்...)

காலமை ஆறரைக்கு முன்னாடி பிளேன்ரீ..ஆறரையில இருந்து ஏழுமணிவரைக்கும் எக்ஸஸைஸ்.. ஏழுமணிக்கு சாப்பாடு.... மறுபடி எக்ஸஸைஸ்...அப்புறம் லெக்ஸஸ்...(டேய்... எப்பிடியும் ஒரு வருசத்துக்குப் பிறகு படிக்கப் போறம் கம்பஸ் போய்.. கதிரையில தொடர்ந்து உட்கார்ந்து மறந்து போயிருக்கும்... படிக்குறது எண்டா என்ன கொப்பி எண்டா என்ன எண்டு ஞாபகமே இல்லை எண்டு உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா? கம்பஸில் வதை படுவதற்கான ட்ரெயிலரா இது?) மதியம் சாப்பாடு வித் டெஸ்ஸேட்... (சத்தியமா...)...கொஞ்சம் லீவு.. மறுபடியும் பின்னேரம் விளையாட்டு.. பின்னேரம் ரீயும் சோட் ஈட்ஸும்.. நைட் அற்றெண்டன்ஸ் எடுப்பினம்... அப்புறம் தூங்கலாம்...

ஃபானும் இல்லை.. அவ்வளவு பேரையும் ஒரு றூமிற்க அடைச்சு வைச்சிட்டு அலம்பினம்...

எங்கட ஒவ்வொரு க்ரூப்பிற்கும் ஒவ்வொரு மாணவ தலைவர்கள்.. க்ரூப்பிற்கு எண்டு பொலிஸ் அக்காமார் ரெண்டு பேரும் ரெண்டு பொலிஸும் ஒரு தலையும் இருப்பார்...  எங்கட க்ரூப்பின்ர பேர் சரியா ஞாபகம் இல்லை...  எங்கட டொமட்றி... அதுட செல்லப் பேர் டோம்... (என்ன செய்யுறது நாம எல்லாம் இதுகளுக்குத் தான் செல்லப் பெயர் வைக்க முடியும்.. என்னோட ப்ரெண்டு ஒருத்தி சப்ஜெக்ற் எல்லாத்துக்கும் செல்லப் பேர் வைச்சிருக்கா.... வட் எ... றைற்று விடுங்க....).... எங்கட டோமில மொத்தம் இருபது பேர் வரும்...(மொத்தமா ஒரு பிள்ள தான்.. ஓஹோ ... மொக்கை ஜோக்.. ரேற்றிங்: அஞ்சுக்கு ஒன்று) அதுவும் சரியா ஞாபகம் இல்லை..

ஸ்பெஸல் என்னெண்டா களுத்துறை ட்ரெயினிங் இல எங்கட பட்சில ஒன்லி கேர்ல்ஸ் ஃபுறம் வடக்கு && கிழக்கு...  (பேச்சுக்கு ஸ்பெஸல் எண்டு சொல்லலாம்.. சாவுக்கிராக்கி... மூண்டு கிழமை சைட் அடிக்காம என்னால எல்லாம் உயிர் வாழ முடியுமா? அதுக்கு நான் செத்துப் போயிடறேன்....... )

”கப் - சாப்பாட்டுக் கோப்பை கொண்டு வராதாக்கள் கை உயர்த்து... ”
பரிதாபமாக நானும் இன்னும் கொஞ்சமும் கை உயர்த்துறம்...

”உங்களுக்கான கப் தரப்படும்... போகும் போது தந்தா சரி...”

’சட்டித் தலையா... நாங்க ஏன் அதைக் கொண்டு போப் போறம்.. எந்த செம்மறி குடிச்ச எச்சில் கோப்பையோ? வீட்ட தங்கச்சி சாப்பிடுற கோப்பைக்குள்ளயே நான் சாப்பிட மாட்டனே... என்ன சோதனை இது... ’

“சாப்பாட்டுக் கோப்பை சாப்பிடுற இடத்தில இல்லாதாக்கள் எடுக்கலாம்...”

‘எந்த எருமை அதுக்குள்ள மாட்டிறைச்சி விழுங்கிச்சோ.. விரதத்துக்க சைவம் சாப்பிட்டாலும் அந்தக் கோப்பைக்க போட்டு.... ’ நினைக்கவே குமட்டத் தொடங்கிச்சு....

”ஏதாவது மோசமான வியாதி இருந்தா ட்ரெயினிங் தேவலை”
மயங்கி விழுந்தா என்ன? வீட்ட ஓடிடலாமே எண்டு உள்மனசு சொல்லுது.... இந்த நேரம் பாத்து மயக்கம் கூட வருதில்லை... ஒரு நாளும் என் நோவு அறியா இடும்பைக் கூர் என் உடம்பே.... (ஸாரி எமோசனில கொப்பியடிச்சிட்டன்..)..

ஒரு மாதிரி மீற்றிங் முடிஞ்சுது.. பிளேன்ரீ தந்தினம்.. ஒரு குட்டி ராங்கில கொண்டு வந்து... ரப்பைத் திறந்து கப்பில் நிரப்பிக் குடிக்கணும்..
கப் கொண்டு வந்த பிள்ளையள் எல்லாம் அடிச்சுப் பிடிச்சுக் குடிக்குதுகள்.... கோயில்ல கூட அடிபட்டு நான் பொங்கல் வாங்க மாட்டன்... அவ்வளவு வீக்கு.... இந்த லட்சணத்தில... விளங்கிடும்...

கிரிசாம்பாள் கணக்கா நான் பின்வாங்க யாரு பெத்த பிள்ளையோ என் கையிலயும் பிளேன்ரியோட ஒரு கப்பைத் தந்திச்சு...  ஒரு பொலிஸ் அக்கா...  நன்றியோட நிமிர்ந்து ஒரு புன்னகை பூக்க நிமிர அவா அதை ஏற்க நேரமில்லாம அங்கால போயிட்டா... சரி போனாப் போகுது.. பிளேன்ரீயைக் குடிப்பம் எண்டு வாயில வைச்சா அது ஆறிட்டுது... எண்டாலும் அந்த வெயிலுக்க... பட்டினி வயிறுக்கு அது அமிர்தம் தான்...

பிறகு க்ரூப் பிரிச்சிட்டுக் கொண்டு போய் விட்டினம்..  கொழும்பில என்னோட றூமில இருந்த பிள்ளையொண்டு என்னோட க்ரூப்.. அப்பாடா...
அதுக்குள்ள தலைமைத்துவத்துக்கும் சில ஜீவனுகள் அடிபடுது... ரணகளத்திலயும் அவைக்கு ஒரு கிளுகிளுப்பு கேட்குது...

இருட்டு... நீட்டுக்கு கட்டில்... ஆஸ்பத்திரி தோத்திடும்... காலமை குளிச்சதுக்கு தண்ணியே காட்டேல்ல மூஞ்சிக்கு... வோஸ்றூமிற்குப் போய் முகம் கழுவினன்....  அதுக்கே செத்திடலாம் எண்டு இருந்திச்சு... இதுக்க குளிச்சு..... வன் - ரூ - த்றீ ப்றப்ளம்ஸ் எல்லாம் முடிக்கணும்....

அந்த இடம் வேலைக்காகாது.. இடம் காணாது... இதே மாதிரி வேறயும் கொஞ்ச க்ருப்பிற்கும் இடம் காணாது... இன்னொரு டோம் ஒதுக்கப் போயினம்.. அதுக்கு ஆர் ஆர் போறீங்க... இதுவே இப்பிடி இருக்கே... அது எப்பிடி இருக்குமோ... பரவால்ல.. ஒரு மாதிரி ஒவ்வொரு டோம் இற்கும் போய் எங்களுக்குத் தெரிஞ்ச சில சனங்களை மோப்பம் பிடிச்சுக் கண்டுபிடிச்சு ஒண்டாக் கஸ்டப் படுவம் வாங்கோ எண்டு இழுத்திட்டு புது டோம் போயிட்டம்...

முதல் இருந்ததை விட இது பரவால்ல...  என்ன கொஞ்சம் வெளிச்சம்...  சுத்தி ஒரு பக்கம் பொலிஸ் ஸ்கூலுடன் ஜொயின்ற்... மற்றப் பக்கம் எல்லாம் அகழி..... (சேப்ரி ஃபெஸ்ட்)

 இருபது பெட் வரும்...  ரெண்டோ மூண்டுக்கு மேலயும் பெட் இருக்கு... என்ன மாதிரிக் கேஸுகள் அதில படுத்திட்டு கனவு கண்டிட்டு பிரண்டா.... (குப்புற விழுந்தா ட்ரெயினிங் பீரியட்டை விடக் கூடக் காலம் ஆஸ்பத்திரிலயும் முன்பக்கம் விழுந்தா இஸ்ட தெய்வத்தை நேரிலயும் பார்க்கலாம்... ஹீ ஹீ..)

பாத்றூம் எண்டு ஸ்பெஸலா இல்லை...  ரெண்டு தொட்டி...  கதைச்சுக் கதைச்சுக் (??? பொசிடிவ் திங்கிங் பாஸ்)குளிக்கலாம்...சரி.. பொண்ணுங்க தானே.... இதர செயற்பாடுகளுக்கு எட்டு இடம் இருக்கு... நொட் பாட் தற்மச்... 

”நாளையில் இருந்து எல்லாம் ஸ்ராட் ஆகும்...”

‘ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது.......’ ஹீ.. ஹீ... ஆஆஆஆஆ...

ஏன் தோல்விகள்?

காரணம் முயற்சி இல்லை என்று மூக்கில் குத்த நான் வெற்றி பெற்றவள் இல்லை... அதிஸ்டம் இல்லை என்று மனதை நோகடிக்க நான் அதிஸ்டசாலியும் இல்லை....

காலம் கூடாது என்னும் போது என்னதான் நடக்கிறது என்று ஆராய்ந்தால் தோல்விக்கான காரணங்கள் புலனாகும்... அதில கொஞ்சம் உங்களுக்காக...

1. தாமதமாக ஆரம்பித்தல்...

ஒரு வேலை முடிக்கணும்னா வேளைக்கே ஸ்ராட் பண்ணிடணும்...  கடைசி மட்டும் பாத்துக் கொண்டிருக்கக் கூடாது...

2. திட்டமிடல் இன்மை.. அல்லது குறைவு...

ஒழுங்காத் திட்டமிட்டு ஒரு காரியம் செய்யணும்... நேரம், மனிதர்கள், சூழல், விளைவு, ஸ்டெப்ஸ் அதுக்கு மேல எங்கட கப்பாசிட்டி எல்லாம் யோசிச்சுப் பண்ணணும்... சப்போஸ் வேலை ஊத்திக்கிச்சின்னா அதுக்கான மாத்து வழி அற்லீஸ்ற் அதை தாங்கக் கூடிய மனப்பான்மையையும் வளத்துக்கணும்..

3. வளங்களின் பாவனை குறைவு..

என்ன என்ன எல்லாம் நம்மட காரியம் ஆகத் தேவையோ எது எது எல்லாம் நம்மகிட்ட இருக்கோ அதை எல்லாம் மக்சிமம் யூஸ் பண்ணணும்...

வளங்கள் என்னும் போது மனிதர் கூட வளம் தான்...

4. தொடங்க முதல் ஆலோசனை பெறாமை..

ஒரு காரியம் தொடங்க முதல் அது பற்றி நாலு பேரிட்ட விசாரிக்கணும்..  அப்புறம் இறங்கணும்.... இல்லைன்னா வேலைக்காகுறது கஸ்டம்க...

5. செய்யுற வேலையை நேசிக்காமை..

செய்யுற வேலையை நேசிக்காம - விரும்பாம என்ன செய்தாலும் உருப்படுறது கஸ்டம்..

6. உடம்பையும் மனசையும் பற்றிக் கவலை இன்மை..

இது உங்க வாழ்க்கை... யாருக்காகவும் எதுக்காகவும் சாப்பிடாமக் கிடந்து சாகணும் எண்டு நினைச்சோ அல்லது கோபம் காட்டியோ உடம்பைக் கெடுத்துக்காதீங்க.... அழுது புலம்பி நிம்மதியையும் மனசையும் கெடுத்துக்காதீங்க.. உங்க உடல் ஆரோக்கியத்திலயும் நோய் எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் அக்கறை காட்டுங்க...

7. மற்றவங்க சொல்லுறத வைச்சு தாழ்வு மனப்பான்மையும் தன்னம்பிக்கை இன்மையும்...

எவன் என்ன சொன்னா என்ன? உங்களை நம்புங்க..  ஒரு எல்லைக்குள்ள உங்களால ஏலும் எண்டு நீங்க நம்புறதுக்காகப் போராடுங்க.. நிறம், அழகு இது மட்டும் பெர்சனாலிட்டி கிடையாது.. புன்னகையால வெல்லுங்க..

8. டென்ஸன்...

எல்லாமே ஒழுங்கா செய்தா எதுக்கு டென்ஸன்... பயம் வேணாம்... எது நடந்தாலும் குடி முழுகிடாதுன்னு நினைங்க..

இது எல்லாம் தொட்டதெல்லாம் துலங்குற அதிஸ்டசாலிகளுக்காக இல்லை..   தோல்வி தோல்வி எண்டு புலம்பிட்டுத் திரியுறவங்களுக்காக...  எப்பிடி வெற்றி பெறணும் எண்டுறது எனக்குத் தெரியாது...  அதனால நான் அதை சொல்லலை... எப்பிடி எல்லாம் தோல்வி வரும் எண்டு தெரியும்...  அதனால தான் இது.....

Tuesday, May 6, 2014

நல்லது செய்யப் போய்.........

ஒரு குருவி கருடன் மீது கொண்ட அன்பினால் கருடனைக் காண வைகுந்தம் வந்திருந்தது.. குருவியும் கருடனும் உரையாடிக் கொண்டிருந்த சமயம் அங்கு வந்த எமதர்மராஜன் குருவியை உற்றுப் பார்த்து விட்டு சென்றார்... அதனால் கலக்கமடைந்த கருடன் உன்னை அவர் கொல்லப் போகிறார் போலும் என்று கூறி நான் உன்னைக் காப்பாற்றுகிறேன் என்று ஏழுமலை, ஏழுகடல் தாண்டிப் பறந்து குருவியை ஒரு மரப் பொந்தில் வைத்து விட்டு வந்தது...

பரந்தாமனைச் சந்தித்துவிட்டு வந்த எமதர்மர் கருடனைப் பார்த்து குருவி எங்கேயென்று கேட்க கருடன் தான் அதைக் காப்பாற்றிவிட்டதாகப் பீற்றிக் கொண்டது... அதற்கு சிரித்த எமதர்மராஜன், குருவியின் விதிப்படி ஏழுமலை, ஏழுகடல் தாண்டிய அந்த மரப் பொந்தில் அது இப்போது இறக்க வேண்டும்... அது இங்குள்ளதால் எப்படி இறக்கும் என்று யோசித்தேன்... வாசுதேவன் வலம் வரும் நீயே அதை செய்து விட்டாய் என்றார்.. அவர் சொல்லவும் பொந்தில் இருந்து வெளிப்பட்ட பாம்பு குருவியை விழுங்கவும் சரியாக இருந்தது....

இப்ப சொல்லுங்க....
எது பாவப் பட்ட ஜீவன்?
எது கஸ்டப் படப் போகுது?
எதுக்கு காலம் சரியில்லை?

சாகப் போறது தெரியாமலே செத்துப் போன குருவியா?
இல்லையெண்டா ஒரு குருவியின் சாவுக்குக் காரணமாயிட்டமே எண்டு நெடுக வருத்தப் படப்போற கருடனா?

குருவி சாகும் கணத்தில கருடனைத் திட்டிக் கொண்டே செத்திருக்கும்... பாவம் அதுக்கு தெரியாது.. கருடனுக்கு தெரியாது குருவிக்காக தான் செய்யப் போற வேலை குருவிக்கு ஆப்பாகும் எண்டு... அதை ஒரு கட்டத்தில குருவியே தப்பா நினைக்கும் எண்டு....