உன்னை இறைவன் எனக் கொள் என்பது நிறைய இடத்தில் குறிப்பிடப்படும்
விடயம்.. எனக்கு சந்தேகம் எழுந்தது... நான் தெய்வம் ஆயின் நான் செய்வது
அனைத்தும் சரியா? அப்பிடியாயின் மற்றவர்கள் செய்வது தவறா?
உண்மை
அது அல்லவே... தெய்வ சன்னிதியில் தெய்வத்தினை திட்டுகிறார்கள்..
போற்றுகிறார்கள்... பிஸினஸ் டீல் பேசிக் கொள்கிறார்கள்.. கேள்வி
கேட்கிறார்கள்... தெய்வம் தண்டிக்கும் என்று வேறு சொல்கிறார்கள்... தெய்வம்
எதையும் கண்டு கொள்வதில்லை.. ஜாலியாக இருக்கிறது.. பால் ஊத்துறவன்,
அர்ச்சனை ரிக்கற் வாங்கினவன், பிக்பாக்கட் அடிக்குறவன், நகை திருடிகள்
எல்லாரும் வாறாங்க போறாங்க.. தெய்வம் அவர்களைப் பாத்து தனக்குள் சிரித்துக்
கொள்கிறது.. எல்லாருக்கும் வேற வேற இடத்தில விதிக்கணக்கு இருக்கு...
கொம்பிளெக்ஸ் கணக்கு.. அதையெல்லாம் விட்டிட்டு இங்க வந்து அலம்புறாங்க
எண்டு நினைக்குறது...
கதைக்க விருப்பம் இல்லாத கொன்ராக்ற்
ஐ ப்ளாக் பண்ணிட்டு உல்லாசமா இருப்பவர்கள் இருக்குறார்கள்.. கேட்டும்
கேளாத மாதிரி கண்டுக்காம சிலர் இருக்கிறார்கள்... இரண்டாவது சரியான
கஸ்டம்... மிக உயர்ந்த ஞானம் தேவை.. எல்லா இடத்தையும் அப்பிடி இருக்க
ஏலாது... தெய்வம் எல்லாத்தையும் கேட்டுக் கொண்டும் எல்லாவற்றிற்கும் பதில்
தெரிந்தும் பேசாமல் இருக்குறது..
மனிதன் சொல்வதை இன்னொரு
மனிதன் ஏற்றுக் கொள்வதில்லை.. மேலதிக விளக்கங்கள்... கேள்விகள்... சில
இடங்களில் பதில் பேசாமல் இருப்பது புத்திசாலித்தனம்.. கடவுள் மட்டும்
பேசினால் விட்டு வைப்பார்களா? மாட்டார்கள்... எத்தனை கோடி கேள்விகள்
வரும்? காலில் முள் தைத்ததற்கும் காரணம் கேட்பார்கள்? அது இருநூறு வருசப்
பழைய கணக்காக இருக்கும்... அதற்கு விளக்கம் சொன்னால் அதற்கு மேலும்
கேட்பார்கள்... தெய்வம் பேசாமல் இருக்கிறது..
நான்
காலமல்ல... ஆனால் நான் தான் காலத்தை சுழற்றுகிறேன்.. ஆனால் என் இஸ்டப்படி
நான் காலத்தை சுற்றவில்லை... அவ்வாறு செய்ய நான் மனிதன் அல்ல.. நான்
விருப்பு-வெறுப்பு இன்ப-துன்பம் இம்மை-மறுமை புகழ்ச்சி-தூற்றல்
அனைத்துக்கும் அப்பாற்பட்டவன்... என்னைப் போல் நீயும் இரு.. என்று சொல்லிச்
சிரிக்கிறது..
இப்ப சொல்லுங்க... கஸ்டம் தானே...?
No comments:
Post a Comment