Showing posts with label பக்திப் பாடல்கள். Show all posts
Showing posts with label பக்திப் பாடல்கள். Show all posts

Friday, July 29, 2016

மங்களம்

அன்னை அன்னை அன்னை அன்னை
அம்பிகைக்கு மங்களம்
ஆதிசக்தி அம்பிகைக்கு அனந்தகோடி மங்களம்
என்னுளே விளங்கும் ஈஸ்வரிக்கு மங்களம்
இச்சையாவும் முற்றுவிக்கும் கிற்திவைக்கு மங்களம்

தாழ்விலாத தன்மையும் தளர்ச்சியற்ற வன்மையும்
வாழ்வினால் பயன்களும் என் வாக்கிலே வரங்களும்
பக்தியிற் கசிந்தமைந்து பாடுகின்ற பான்மையும்
பாடுவோர்க் கனேத போக பாக்கியங்கள் மேன்மையும்
என்றும் ஓங்க என் கரத்தியற்கையான சித்தியைத்
தந்து ஞான மூர்த்தியாய் தனித்து வைத்த சக்தியாம்
நாமகீர்த்தனம் பரந்து நாடெல்லாம் செழிக்கவும்
வேறிடாத இன்பம் பொங்கி வீடெல்லாம் விளங்கவும்
ஞானதீபமேற்றி யென்றும் நாமகீதம் பாடுவோம்
தர்ம சக்தி வாழ்கவென்று சந்நதம் கொண்டாடுவோம்

ஓம் திரயம்பகம் யஜாமஹே
சுகந்திம் புஸ்டி வர்தனம்
உர்வாருக மிவபந்தனாத்
ம்ருத்யோர் முக்சீய மாம்ருதாத்


ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!

நவக்கிரகம்

சூரியன்
சீலமாய் வாழ சீரருள் புரியும்
ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி
சூரியா போற்றி சுந்தரா போற்றி
வீரியா போற்றி வினைகள் களைவாய்

சந்திரன்
எங்கள் குறைகளெல்லாம் தீர்க்கும்
திங்களே போற்றி திருவருள் தருவாய்
சந்திரா போற்றி சற்குரு போற்றி
சங்கடந் தீர்ப்பாய் சதுராபோற்றி

செவ்வாய்
சிறப்புறு மணியே செவ்வாய்த்தேவே
குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ
மங்கலச் செவ்வாய் மலரடி போற்றி
அங்காரகனே அவதிகள் நீக்கு

புதன்
இதமுற வாழ இன்னல்கள் நீக்கு
புதபகவானே பொன்னடி போற்றி
பதந்தந்தருள்வாய் பண்ணொலியானே
உதவியே யருளும் உத்தமா போற்றி

வியாழன்
குணமிகு வியாழக் குருபகவானே
மனமுள வாழ்வு மகிழ்வுடனருள்வாய்
ப்ரகஸ்பதி வியாழப்பா குருநேசா
க்ரகதோசமின்றி கடாக்சித்தருள்வாய்

சுக்கிரன்
சுக்கிரமூர்த்தி சுபமிகயீவாய்
வக்ரமின்றி வரமிகத் தருவாய்
வெள்ளி சுக்கிர வித்தக வேந்தே
அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே

சனி
சங்கடந்தீர்க்கும் சனிபகவானே
மங்கலம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றி சாகாநெறியில்
இச்செகம் வாழ இன்னருள் தாதா

ராகு
அரவெனும் ராகு ஐயனே போற்றி
கரவாதருள்வாய் கஸ்டங்கள் நீக்கி
ஆக அருள்புரி அனைத்திலும் வெற்றி
ராகுக் கனியே ரம்மியா போற்றி

கேது
கேதுத் தேவே கீர்த்தித் திருவே
பாதம்போற்றி பாபம் தீர்ப்பாய்
வாதம் வம்பு வழக்குகளின்றி

கேதுத் தேவே கேண்மையாய் ரக்சி

Monday, July 18, 2016

லலிதா நவரத்தினமாலை

ஆக்கும் தொழில் ஐந்தரனாற்ற நலம்
பூக்கும் நகையாள் புவனேச்வரி போல்
சேர்க்கும் நவரத்தினமாலையினைக்
காக்கும் கணநாயக வாரணமே

வைரம்
கற்றும் தெளியார் காடே கதியாய்
கண்மூடி நெடுங்கனவானதவம்
பெற்றும் தெரியார் நினையென்னில் அவம்
பெருகும் பிழையேன் பேசத் தகுமோ
பற்றும் வயிரப் படைவாள் வயிரப்
பகைவர்க்கெமனாக எடுத்தவளே
வற்றாத அருட்சுனையே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

நீலம்
மூலக்கனலே சரணம் சரணம்
முடியாமுதலே சரணம் சரணம்
கோலக்கிளியே சரணம் சரணம்
குன்றாத ஒளிக்குவையே சரணம்
நீலத் திருமேனியிலே நினைவாய்
நினைவற்றெளியேன் நின்றேன் அருள்வாய்
வாலைக்குமரி வருவாய் வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

முத்து
முத்தே வரும் முத்தொழிலாற்றிடவே
முன்னின்றருளும் முதல்வீ சரணம்
வித்தே விளைவே சரணம் சரணம்
வேதாந்த நிவாசினியே சரணம் சரணம்
தத்தேறிய நான் தனயன் தாய்நீ
சாகாதவரம் தரவே வருவாய்
மத்தேறுததிக் கிணை வாழ்வடையேன்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

பவளம்
அந்தி மயங்கிய வானவிதானம்
அன்னைநடம்செய்யும் ஆனந்த மேடை
சிந்தை நிறம் பவளம் பொழிபாரோ
தேம்பொழிலாமிது செய்தவளாரோ
எந்தையிடத்தும் மனத்தும் இருப்பாள்
எண்ணுபவர்க்கருள் எண்ணமிகுத்தாள்
மந்திர வேத மயப் பொருளானாள்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

மாணிக்கம்
காணக்கிடையாக் கதியானவளே
கருதக் கிடையாக் கலையானவளே
பூணக்கிடையாப் பொலிவானவளே
புனையக் கிடையாப் புதுமைத்தவளே
நாணித் திருநாமமும் நின் துதியும்
நவிலாதவளை நாடாதவளே
மாணிக்க ஒளிக் கதிரே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

மரகதம்
மரகத வடிவே சரணம் சரணம்
மதுரித பதமே சரணம் சரணம்
சுரபதி பணியத் திகழ்வாய் சரணம்
ஸ்ருதி ஜதிலயமே இசையே சரணம்
அரஹர சிவ என்றடியவர் குழும
அவரருள் பெற அருளமுதே சரணம்
வரநவநிதியே சரணம் சரணம்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

கோமேதகம்
பூமேவியநான் புரியும் செயல்கள்
பொன்றாது பயன் குன்றா வரமும்
தீமேல் இடினும் ஜெயசக்தி எனத்
திடமாய் அடியேன் மொழியும் திறமும்
கோமேதகமே குளிர்வான் நிலவே
குழல்வாய்மொழியே தருவாய் தருவாய்
மாமே குவிலே வளர்கோகிலமே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

பதுமராகம்
ரஞ்சனி நந்தினி அங்கணி பதும
ராக விலாஸ வியாபினி அம்மா
சஞ்சல ரோக நிவாரணி வாணி
சாம்பவீ சந்த்ரக லாதரி ராணி
அஞ்சன மேனி அலங்க்ருத பூரணி
அம்ருதஸ் வரூபிணி நித்திய கல்யாணி
மஞ்சள மேரு சிருங்க நிவாஸினி
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

வைடூரியம்
வலையொத்தவினை கலையொத்தமனம்
மருளப் பறையா றொலியாந்தவதாய்
நிலையற்றெளியேன் முடியத் தகுமோ
நிகளம் துகளாக வரந்தருவாய்
அலைவற்றசைவற் றநுபூதி பெறும்
அடியார் முடிவாள் வைடூரியமே
மலையத் துவசன் மகளே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
எவர் எத்தினமும் இசைவாய் லலிதா
நவரத்தினமாலை நவின்றிடுவார்
அவர் அற்புத சக்தி எல்லாம் அடைவார்
சிவரத்தினமாய் திகழ்வாரவரே

ஜெய சிவரமணீ குருகுவர ஜனனீ – ஜெய மனவன ஹரிணீ
ஜெய ஓம் சிறீ மாதா- மாதா – ஜெய ஜெய ஜெகன் மாதா

மாதா ஜெய ஓம் சிறீ மாதா – மாதா – ஜெய ஜெய- ஜெகன் மாதா

ஓம் சிறீ ஜெயஜெயஜெய சக்தி

ஓம் சிறீ ஜெயஜெயஜெய சக்தி
ஓம் சிறீ ஜெயஜெயஜெய சக்தி
ஜெய ஜெய அனுதினம் பாடிப் பணிந்தோம்
ஜெகமெங்கும் அமைதியைத் தா..  (ஓம்..)

திருப்தியும் இன்பமும் வாழ்வில் துலங்க
தேவையெல்லாம் அடைய அம்மம்மா
தேவையெல்லாம் அடைய
பக்தி பெருகிட பாடி உருகிட
பணிப்பாய் அன்பிலெம்மை.. (ஓம்..)

இரண்டுகள் போக மூன்றுகள் அகல
ஈஸ்வரி வரமருள்வாய் அம்மம்மா
ஈஸ்வரி வரமருள்வாய்
கரங்குவித்தோம் இனிக் காலைவிடோமடி
கருணையுடன் அணைப்பாய்.. (ஓம்..)

காசினியெங்கும் வேற்றுமை போக
கருத்தினில் அன்பருள்வாய் அம்மம்மா
கருத்தினில் அன்பருள்வாய்
தேசுடன் வாழ வழிகாட்டிடுவாய்
ரக்சி தேவியுன் அடைக்கலமே.. (ஓம்..)

நமஸ்காரம் கூறிக் கருத்தினில் ஞான
நல்லொளி தீபம் வைத்து ஞான
நல்லொளி தீபம் வைத்து
நமஸ்காரம் செய்து ஹாரத்தி செய்தோம்

ஞாலத்திற்கமைதியைத் தா.. (ஓம்..)

உண்மையென்றுணர்ந்த நெஞ்சில் ஓடிவந்து நிற்பவள்

உண்மையென்றுணர்ந்த நெஞ்சில் ஓடிவந்து நிற்பவள்
நன்மை செய்பவர்களுக்கு ஞானதீபம் ஆனவள்
மென்மையான பண்பினோடு மேவும் அன்புக் காவியம்
பன்மை ஒன்றும் பாங்கில் வந்த பாரின் அன்னை வாழ்கவே

சொல்லடங்கி நின்ற போதில் தூய்மைத் தோற்றம் கொண்டவள்
பல்லுயிர்க்குள் ஊறி நிற்கும் பாசமென்னும் தேசவள்
அல்லலுற்று அழைப்பவர்க்கே ஐயம் நீக்குகின்றவள்
வல்லமைக்கோர் எல்லை என்னும் மாண்பின் அன்னை வாழ்கவே

சோதனைகள் நூறுகோடி சூழவந்தபோதிலும்
நீதி உண்மை தன்னில் ஒன்றி நின்றிருக்கும் திண்மையில்
ஜோதியாகத் தோற்றங் கொண்டு தோள்வலிக்குள் வாழ்பவள்
காதணிந்த சக்கரத்தின் கற்பின் அன்னை வாழ்கவே

அரகரோகரா தாயே அரகரோகரா
அரகரோகரா தாயே அரகரோகரா
அன்னைதுர்க்கை அம்பிகையே அரகரோகரா
எம்மையாளும் ஈஸ்வரியே அரகரோகரா
என்றும் இன்பமானவளே அரகரோகரா
அன்பர்களின் இரட்சகியே அரகரோகரா
அவலவினை தீர்ப்பவளே அரகரோகரா
தெல்லிநகர்ச் செல்வதியே அரகரோகரா
தீனர்களின் தயாபரியே அரகரோகரா
சங்கு சங்கர நாயகியே அரகரோகரா
எங்கள் அன்னபூரணியே அரகரோகரா
அரகரோகரா தாயே அரகரோகரா

அரகரோகரா தாயே அரகரோகரா

புவனமுழுதாளுகின்ற புவனேஸ்வரி

புவனமுழுதாளுகின்ற புவனேஸ்வரி
புரமெரித்தோன் புறமிருக்கும் பரமேஸ்வரி
கண்ணிரண்டும் உன்னுருவே காண வேண்டும்
காலிரண்டும் உன்னடியே நாடவேண்டும்
நவநவமாய் வடிவெடுக்கும் மகேஸ்வரி
நம்பினவர் கைவிளக்கே சர்வேஸ்வரி
பண்ணமைக்கும் நாவுனையே பாடவேண்டும்
எண்ணமெல்லாம் உன்னினைவே ஆகவேண்டும்

கவலைகளைத் தீர்த்துவிடும் காமேஸ்வரி
காரிருளில் தீச்சுடரே ஜோதீஸ்வரி
நெற்றியினுள் குங்குமமே நிறைய வேண்டும்
நெஞ்சினில் திருநாமம் வழிய வேண்டும்
துன்பமெல்லாம் போக்கிடும் துர்க்கேஸ்வரி
தொழுதகைக்கு வளமளிக்கும் ஞானேஸ்வரி
கற்றதெல்லாம் மென்மேலும் பெருகவேண்டும்
கவிதையிலே உன்நாமம் வழிய வேண்டும்

பார்வையிலே பரிமளிக்கும் பரமேஸ்வரி
பக்தர்களின் துதி சுமக்கும் கமலேஸ்வரி
சுற்றமெல்லாம் நீடூழி வாழவேண்டும்
தொல்லை இந்த வாழ்வை விட்டு ஓடவேண்டும்
இன்பமான அமைதி எங்குமோங்க வேண்டும்
இதயமெல்லாம் ஈசன் கோயிலாக வேண்டும்
மண்வளமும் மனவளமும் பெருக வேண்டும்

மாநிலத்தில் உன் கருணை வழிய வேண்டும்

உன்னுடைய பார்வையொன்றே உறுதுணையாய் வருகுதம்மா

உன்னுடைய பார்வையொன்றே உறுதுணையாய் வருகுதம்மா
கும்மிருட்டுப் பாதையிலும் பேரொளியாய்த் தெரியுதம்மா
என்னுடைய ஆட்டமெல்லாம் நீயமைத்த மேடையிலே
இசைவதும் அசைவதும் நின் கடைக்கண் ஜாடையிலே

சிற்றிடையில் சிவந்தபட்டு திருக்கரத்தில் திரிசூலம்
நெற்றியினில் செந்தூரம் நீள்விழியில் கருணைமழை
தெல்லிநகர்த்துர்க்கை அம்மா உன்னழகைப் பார்ப்பதற்கு
என் முகத்தில் அமைந்திருக்கும் இருவிழியால் இயன்றிடுமோ

சிங்கத்திலே நீவந்து சிறியேமைக் காத்திடுவாய்
எங்கள்பல குறையனைத்தும் ஈன்றவளே நீயறிவாய்
சிறியேங்கள் அழைத்தகுரல் திருச்செவியில் ஏற்றருள்வாய்
அறிவேதும் இல்லாதேம் அன்பு மொழி கேளுமம்மா

அம்பிகையே உலகீன்ற ஆரணியே காரணியே
செம்பவளமேனியளே சிவக்கொழுந்தே வந்தருள்வாய்
அணுவாகி உயிராகி ஐம்பூதப் பொருளாகி
துணையாகி எமைக் காக்கும் துர்க்கை அம்மா வந்தருள்வாய்

சுற்றி நிற்கும் உலகமெல்லாம் துர்க்கை என்று சொல்லுதம்மா
சூழ்ந்திருக்கும் உலகமெல்லாம் துதிக்குதம்மா உன்புகழை
வாழ்ந்திருக்கும் காலமெல்லாம் வணங்கிடுவேன் உன்னடியை
வர இருக்கும் பிறவியிலும் வாழ்த்திடுவேன் உன்னருளை

கேட்டவரந்தந்தருள்வாய் கேதார நாயகியே
சூட்டுமலர்த்தாள் சரணம் சுந்தரியே சரணமம்மா
சர்க்கரையாய் முக்கனியாய் தமியேங்கள் மனத்தினிக்கும்

துர்க்கா மகேஸ்வரியே சரணமலர் சரணமம்மா!

கந்தவீரமாகாளி கமல மங்கலை

கந்தவீரமாகாளி கமல மங்கலை
கருணையான வடிவழகி கனிந்து நின்றனை
விந்தையாகி விளக்குமாகி விளங்கி வந்தனை
விண்ணுமாகி மண்ணுமாகி வெற்றிகண்டனை
மந்தமான புத்தியோட்டி மனமும் தந்தனை
மலரின் வேதன் உன்னைப் பாட மயக்கம் தீர்த்தனை
சொந்தமான துர்க்கை அம்மா இந்த நாள்முதல்
எந்தனோடு வாழ்வளிக்க என்றும் தங்குவாய்

நந்தவீர மாகாளி நயனமாலினி
நம்பிவந்த எம்மிடையே நலனும் காட்டுவாய்
இந்தவாழ்வில் உன்னையன்றி இங்கு யாருளார்
இன்று நல்லகாலைவந்து இனிமை காட்டுவாய்
மந்தையாடு போலவாழ்வில் மயங்கி நில்லாமல்
முத்தியோடு செல்வபோகம் முழுதும் நாட்டுவாய்
சொந்தமான துர்க்கை அம்மா இந்த நாள்முதல்
எந்தனோடு வாழ்வளிக்க என்றும் தங்குவாய்

பொங்குவீரமாகாளி பொய்மை தீர்மணி
பொறுமையோடு பெருமையாகிப் பொருளும் கூட்டினாய்
எந்தையான சிவனைத் தூது எடுத்து அனுப்பினாய்
எழிலியாகி வண்ணமாகி என்னுள் ஆடினாய்
பந்தணைந்த விரலி நீயும் பகைமை என்றதும்
பரந்துவந்து படைகளோட்டிப் பசுமை காட்டினாய்
சொந்தமான துர்க்கை அம்மா இந்த நாள்முதல்
எந்தனோடு வாழ்வளிக்க என்றும் தங்குவாய்

விந்தைவீரமாகாளி விரைந்துவந்திடின்
சொந்தநோயும் வந்தநோயும் தொலைவில் ஓடிடும்
எந்தமாயம் எம்மைத்தேடி வந்த போதிலும்
என்னையீன்ற தாய் நினைப்பில் எரிந்து போய்விடும்
சிந்தைவாழும் உந்தன் மஞ்சள் சிறிது பூசிடின்
கந்தனோடு கரிய நீலகண்டன் காணலாம்
சொந்தமான துர்க்கை அம்மா இந்த நாள்முதல்
எந்தனோடு வாழ்வளிக்க என்றும் தங்குவாய்

ஆதிசக்தி சோதிசக்தி ஆளவந்த சக்தியே
ஆகமங்கள் ஆனசக்தி ஆத்மசோதி சக்தியே
நீதிசக்தி நித்தியசக்தி நீறுபூசும் சக்தியே
நீலிசக்தி நிருத்தசக்தி நீலமேனி சக்தியே
காதிசக்தி கானசக்தி காணுமின்ப சக்தியே
காளிசக்தி காயசக்தி காட்சிதந்த சக்தியே
வீரசக்தி தீரசக்தி வீடுகாக்கும் சக்தியே
சூரசக்தி சூலசக்தி சூழும் சக்தி சக்தியே

துர்க்கா சரணம் சரணம் தாயே
துர்க்கா சரணம் சரணம்
தேவி சரணம் சரணம் தாயே
தேவி சரணம் சரணம்
அம்மா சரணம் சரணம் தாயே
அம்மா சரணம் சரணம்
ஆத்தாள் சரணம் சரணம் தாயே
ஆத்தாள் சரணம் சரணம்

Saturday, July 9, 2016

அரகர சங்கரி

அரகர சங்கரி நாரி மனோகரி
ஆதி புராந்தக அம்பிகையே
முரகரி மாதவ சோதரி மாதவி
மோகவிலாசினி முக்கனியே
மரகத ரூபிணி மாதுமனோன்மணி
மகபதி பாணிப வாணியளே!
ஜெய ஜெய பங்கய குங்கும மஞ்சள்
இலங்கு சுமங்கலி காமாட்சி!

திருவருள் எங்கணும் தேக்கிட மங்கலச்
சீரறம் செய்யன்ன பூரணியே!
உருவருள் கொண்டுலகுய்ந்திட மாதவம்
ஓம்பிடும் காஞ்சியுமையவளே!
குருவருள் பொங்கிடக் குஞ்சித பாதமென்
கூப்பிய நெஞ்சினில் கோலிடுவாய்
ஜெய ஜெய பங்கய குங்கும மஞ்சள்
இலங்கு சுமங்கலி காமாட்சி!

அருளுரு நெஞ்சினில் அம்புயக் கண்களில்
ஆட்சி புரிந்திடும் அன்னையளே!
பொருளுறு புன்னகை பொங்கிட வந்தருள்
பூங்கணை ஏந்திய பொன்மகளே!
மருவறு சேவடி வாழ்த்தி வணங்கிட
வல்லமை தந்தருள் வைணவியே!
ஜெய ஜெய பங்கய குங்கும மஞ்சள்
இலங்கு சுமங்கலி காமாட்சி!

தனதன தந்தன தானன தந்தன
தாந்திடு தோமெனத் தாண்டவமே!
கனதனம் பம்பிடக் காற்சிலம்போங்கிடக்
காந்த கனன்றிடும் காளியளே!
மனதெனும் மன்றிலமர்ந்தனள் ஊக்கிடும்
மந்திர தந்திர மாமணியே!
ஜெய ஜெய பங்கய குங்கும மஞ்சள்
இலங்கு சுமங்கலி காமாட்சி!

செகமதில் காணுமெச் சன்னிதியாயினும்
தேவியுன் ரூபமென் சிந்தனையே!
முகமதில் சந்திர பிம்பமெனும்படி
மோகனப் புன்னகை பூப்பவளே!
இகமதில் சாந்தியும் இல்லற மேன்மையும்
ஈந்திட வந்தருள் ஈகையளே!
ஜெய ஜெய பங்கய குங்கும மஞ்சள்
இலங்கு சுமங்கலி காமாட்சி!


கலைநிறை கணபதி சரணம் சரணம்

கலைநிறை கணபதி சரணம் சரணம்
கஜமுக குணபதி சரணம் சரணம்
தலைவநின் இணையடி சரணம் சரணம்
சரவணபவகுக சரணம் சரணம்
சிலைமலை உடையவ சரணம் சரணம்
சிவசிவ சிவசிவ சரணம் சரணம்
உலைவருமொருபரை சரணம் சரணம்
உமைசிவை அம்பிகை சரணம் சரணம்
முடியாமுதலே சரணம் சரணம்
முருகா குமரா சரணம் சரணம்
வடிவேல் அரசே சரணம் சரணம்
மயிலூர்மணியே சரணம் சரணம்
அடியார்க்கெளியாய் சரணம் சரணம்
அரியாய் பெரியாய் சரணம் சரணம்
கடியாக் கதியே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்

Thursday, June 30, 2016

கலைவாணி நின்கருணை தேன்மழையே!

கலைவாணி நின் கருணை தேன் மழையே
விளையாடும் என் நாவில் செந்தமிழே

(கலைவாணி)அலங்கார தேவதையே வனிதாமணி
இசைக்கலையாவும் தந்தருள்வாய் கலைமாமணி

(கலைவாணி) மரகத வளைக்கரங்கள் மாணிக்க வீணை தாங்கும்
அருள் ஞானகரம் ஒன்றில் ஜெபமாலை விளங்கும்
ஸ்ருதியோடு லய பாவ ஸ்வரராக ஞானம்
சரஸ்வதி மாதா உன் வீணையில் எழும் நாதம்

(கலைவாணி) வீணையில் எழும் நாதம் தேவி உன் சுப்ரபாதம்
வேணுவில் வரும் கானம் வாணி உன் சக்ரபாதம்
வானகம் வையகம் உன் புகழ் பாடும்
வேண்டினேன் உன்னைப் பாட தருவாய் சங்கீதம்

(கலைவாணி)


நலம் தருவாய் என் தாயே மீனாட்சி

நலம் தருவாய் என் தாயே மீனாட்சி
நலம் தருவாய் என் தாயே மீனாட்சி
வாழ்வில் உன்னை பாடும் வரம் தருவாய் அம்மா
நலம் தருவாய் என் தாயே மீனாட்சி
வாழ்வில் உன்னை பாடும் வரம் தருவாய் அம்மா
நலம் தருவாய் என் தாயே மீனாட்சி

சங்கீத சாகித்ய ஸ்வரலய ஞானம்
சங்கீத சாகித்ய ஸ்வரலய ஞானம்
சாரீரம் வளம் பெறும் இம்மையில் சேரும்
சாரீரம் வளம் பெறும் இம்மையில் சேரும்
நலம் தருவாய் என் தாயே மீனாட்சி
வாழ்வில் உன்னை பாடும் வரம் தருவாய் அம்மா
நலம் தருவாய் என் தாயே மீனாட்சி

மதுரை அரசி மீனாட்சி தேவி
மதுரை அரசி மீனாட்சி தேவி
மணிக்கரம் தெரியும் இசைப்பாடும்
மதுரை அரசி மீனாட்சி தேவி
மணிக்கரம் தெரியும் இசைப்பாடும்

கன்னித்தமிழ் தேனே கருணை புரிவாய்
கன்னித்தமிழ் தேனே கருணை புரிவாய்
கரம் குவித்தேன் என்னை கடைக்கண் பாரம்மா
கரம் குவித்தேன் என்னை கடைக்கண் பாரம்மா
நலம் தருவாய் என் தாயே மீனாட்சி
வாழ்வில் உன்னை பாடும் வரம் தருவாய் அம்மா

நலம் தருவாய் என் தாயே மீனாட்சி

உடலில் உறுதி இசைக்கு வேண்டும்
உடலில் உறுதி இசைக்கு வேண்டும்
ஒழுக்கமும் நேர்மையும் தரவேண்டும்
உடலில் உறுதி இசைக்கு வேண்டும்
ஒழுக்கமும் நேர்மையும் தரவேண்டும்

மாளவன் சோதரி உமா மகேஸ்வரி
மாளவன் சோதரி உமா மகேஸ்வரி
மங்கலம் தூங்கும் ஸ்ரீபுவனேஸ்வரி
மங்கலம் தூங்கும் ஸ்ரீபுவனேஸ்வரி

நலம் தருவாய் என் தாயே மீனாட்சி
வாழ்வில் உன்னை பாடும் வரம் தருவாய் அம்மா
நலம் தருவாய் என் தாயே மீனாட்சி