கடவுளை நேசிக்கிறதுக்கு ஒரு அளவிடையா எண்டு கேட்பீங்க...
சரியை கடவுளை ஆண்டானாகவும் தன்னை அடிமையாகவும் பாவிக்கிறது... என் கடன் பணி செய்து கிடப்பதே! எண்ட மாதிரி! உரிமை குறைந்த உறவு..
கிரியை
எண்டுறது கடவுளை தந்தையாகவும் தன்னை மகனாகவும் பாவிக்கிறது.... உரிமை
அதிகம் மகனுக்கு... ஆனா அப்பா சைட்டால கண்டிப்பும் கிடைக்கும்....
யோகம்
தோழமை உறவு... என் ஃபிரண்டைப் போல யாரு மச்சான்... உரிமை ரொம்ப அதிகம்..
கண்டிப்பு இல்லை... ஃபிரண்டின்ர பிளேட்டில இருக்குற சாப்பாட்டை ஆட்டயப்
போடலாம்.... ஆனாலும் ரெண்டு பேரும் வேற வேற தான்...
ஞானம்
இறைவனைத் தலைவனாகவும் தன்னை தலைவியாகவும் நினைப்பது... வேறாயினும் வேறு
இல்லை.... உலகத்திலயே உயர்ந்த அன்பாகக் கருதப்படுவது அதைத் தான்... ஒரு
பெண் தன் தலைவனுக்காக பலவற்றைத் தியாகம் செய்கிறாள்... காரணம் ஒன்று தான்..
அவன் மீதுகொண்ட அன்பு... அவ்வளவு சிறந்ததா கடவுளை நேசிக்கணும்....
No comments:
Post a Comment