Monday, July 18, 2016

உண்மையென்றுணர்ந்த நெஞ்சில் ஓடிவந்து நிற்பவள்

உண்மையென்றுணர்ந்த நெஞ்சில் ஓடிவந்து நிற்பவள்
நன்மை செய்பவர்களுக்கு ஞானதீபம் ஆனவள்
மென்மையான பண்பினோடு மேவும் அன்புக் காவியம்
பன்மை ஒன்றும் பாங்கில் வந்த பாரின் அன்னை வாழ்கவே

சொல்லடங்கி நின்ற போதில் தூய்மைத் தோற்றம் கொண்டவள்
பல்லுயிர்க்குள் ஊறி நிற்கும் பாசமென்னும் தேசவள்
அல்லலுற்று அழைப்பவர்க்கே ஐயம் நீக்குகின்றவள்
வல்லமைக்கோர் எல்லை என்னும் மாண்பின் அன்னை வாழ்கவே

சோதனைகள் நூறுகோடி சூழவந்தபோதிலும்
நீதி உண்மை தன்னில் ஒன்றி நின்றிருக்கும் திண்மையில்
ஜோதியாகத் தோற்றங் கொண்டு தோள்வலிக்குள் வாழ்பவள்
காதணிந்த சக்கரத்தின் கற்பின் அன்னை வாழ்கவே

அரகரோகரா தாயே அரகரோகரா
அரகரோகரா தாயே அரகரோகரா
அன்னைதுர்க்கை அம்பிகையே அரகரோகரா
எம்மையாளும் ஈஸ்வரியே அரகரோகரா
என்றும் இன்பமானவளே அரகரோகரா
அன்பர்களின் இரட்சகியே அரகரோகரா
அவலவினை தீர்ப்பவளே அரகரோகரா
தெல்லிநகர்ச் செல்வதியே அரகரோகரா
தீனர்களின் தயாபரியே அரகரோகரா
சங்கு சங்கர நாயகியே அரகரோகரா
எங்கள் அன்னபூரணியே அரகரோகரா
அரகரோகரா தாயே அரகரோகரா

அரகரோகரா தாயே அரகரோகரா

No comments:

Post a Comment