ஓம் சிறீ ஜெயஜெயஜெய
சக்தி
ஓம் சிறீ ஜெயஜெயஜெய
சக்தி
ஜெய ஜெய அனுதினம்
பாடிப் பணிந்தோம்
ஜெகமெங்கும் அமைதியைத்
தா.. (ஓம்..)
திருப்தியும்
இன்பமும் வாழ்வில் துலங்க
தேவையெல்லாம்
அடைய அம்மம்மா
தேவையெல்லாம்
அடைய
பக்தி பெருகிட
பாடி உருகிட
பணிப்பாய் அன்பிலெம்மை..
(ஓம்..)
இரண்டுகள் போக
மூன்றுகள் அகல
ஈஸ்வரி வரமருள்வாய்
அம்மம்மா
ஈஸ்வரி வரமருள்வாய்
கரங்குவித்தோம்
இனிக் காலைவிடோமடி
கருணையுடன் அணைப்பாய்..
(ஓம்..)
காசினியெங்கும்
வேற்றுமை போக
கருத்தினில் அன்பருள்வாய்
அம்மம்மா
கருத்தினில் அன்பருள்வாய்
தேசுடன் வாழ வழிகாட்டிடுவாய்
ரக்சி தேவியுன்
அடைக்கலமே.. (ஓம்..)
நமஸ்காரம் கூறிக்
கருத்தினில் ஞான
நல்லொளி தீபம்
வைத்து ஞான
நல்லொளி தீபம்
வைத்து
நமஸ்காரம் செய்து
ஹாரத்தி செய்தோம்
ஞாலத்திற்கமைதியைத்
தா.. (ஓம்..)
No comments:
Post a Comment