சூரியன்
சீலமாய் வாழ சீரருள்
புரியும்
ஞாலம் புகழும்
ஞாயிறே போற்றி
சூரியா போற்றி
சுந்தரா போற்றி
வீரியா போற்றி
வினைகள் களைவாய்
சந்திரன்
எங்கள் குறைகளெல்லாம்
தீர்க்கும்
திங்களே போற்றி
திருவருள் தருவாய்
சந்திரா போற்றி
சற்குரு போற்றி
சங்கடந் தீர்ப்பாய்
சதுராபோற்றி
செவ்வாய்
சிறப்புறு மணியே
செவ்வாய்த்தேவே
குறைவிலா தருள்வாய்
குணமுடன் வாழ
மங்கலச் செவ்வாய்
மலரடி போற்றி
அங்காரகனே அவதிகள்
நீக்கு
புதன்
இதமுற வாழ இன்னல்கள்
நீக்கு
புதபகவானே பொன்னடி
போற்றி
பதந்தந்தருள்வாய்
பண்ணொலியானே
உதவியே யருளும்
உத்தமா போற்றி
வியாழன்
குணமிகு வியாழக்
குருபகவானே
மனமுள வாழ்வு
மகிழ்வுடனருள்வாய்
ப்ரகஸ்பதி வியாழப்பா
குருநேசா
க்ரகதோசமின்றி
கடாக்சித்தருள்வாய்
சுக்கிரன்
சுக்கிரமூர்த்தி
சுபமிகயீவாய்
வக்ரமின்றி வரமிகத்
தருவாய்
வெள்ளி சுக்கிர
வித்தக வேந்தே
அள்ளிக் கொடுப்பாய்
அடியார்க்கருளே
சனி
சங்கடந்தீர்க்கும்
சனிபகவானே
மங்கலம் பொங்க
மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றி சாகாநெறியில்
இச்செகம் வாழ
இன்னருள் தாதா
ராகு
அரவெனும் ராகு
ஐயனே போற்றி
கரவாதருள்வாய்
கஸ்டங்கள் நீக்கி
ஆக அருள்புரி
அனைத்திலும் வெற்றி
ராகுக் கனியே
ரம்மியா போற்றி
கேது
கேதுத் தேவே கீர்த்தித்
திருவே
பாதம்போற்றி பாபம்
தீர்ப்பாய்
வாதம் வம்பு வழக்குகளின்றி
கேதுத் தேவே கேண்மையாய்
ரக்சி
No comments:
Post a Comment