நான் தான் உடுப்ப விட்டுட்டு வந்துட்டனே... எங்களைப் பாக்க வாறதுக்கு பேரன்ஸுக்கோ றிலேசன்ஸுக்கோ சண்டே மட்டும் தான் அனுமதி இருக்கு... நான் அம்மாட்ட புலம்பின புலம்பில வியாழக் கிழமையே மறுபடியும் அம்மா கொழும்பு வந்துட்டா.... விடமாட்டாங்க எண்டு தெரியும்... அதால கொழும்பில இருக்குற ஒரு மாமாவைக் கூட்டிட்டு வந்தா.. அவருக்கு சிங்களம் தெரியும்... கார் வைச்சிருக்கார்.... பெரிய பிஸ்னஸ் மான்... அவர் வந்து கதைச்சதும் என்னைப் பாக்க விட்டுட்டாங்க... எனக்கு ட்ரெஸ் வந்திடிச்சு... அதுக்கு அப்புறம் என்னைப் பாக்குற பார்வையிலயே ஒரு மரியாதை விளங்கிச்சு... அது... அந்தப் பயம் இருக்கணும்... (மியாவ்...)...
ஞாயிறு எண்டா எல்லாரின்ர பேரன்ஸும் வருவாங்க... பிள்ளையள் இங்க சாப்பாட்டுக்கு கஸ்டப்படுதுன்னு தப்பா நினைச்சுட்டு அவங்க வெறாயட்டி வெறாயட்டியா சாப்பிடுற அயிட்டம்ஸ் எல்லாம் கொண்டருவாங்க.. எல்லாத்தையும் எல்லாரும் பங்கு போட்டுக்குவம்...
***********************************************************************************
காலுக்குள் பிடித்தால்...
சும்மா இருந்த கால் துள்ளத் தொடங்கியதும் காலுக்க பிடிச்சிட்டுது... இருக்க முடியாது..(புரியணும்...) நடக்க முடியாது... ரெண்டு நாள் நோ எக்ஸ்ஸைஸ்... அம்மா எண்ணெய் அனுப்பினா... வலி ஓடிப் போச்சு..
No comments:
Post a Comment