ஏ/ல் எக்ஸாம் முடிஞ்ச பிறகு எங்கட பட்சுக்குத் தான் ஃபெஸ்ற்றா ட்ரெயினிங் எண்டு ஸ்ராட் பண்ணினவை... அதுக்கு ஒரு லெற்றர் வந்திச்சு.. வீட்ட சின்னத் தங்கச்சி கூடப் பொங்கத் தொடங்கிட்டுப் போவேணாம் எண்டு...
ட்ரெயினிங் இற்குக் குடுத்த காசுக்கு உண்மையிலயே வெளிநாட்டில இருந்து இதுக்கெண்டு ஆக்களைக் கூட்டிவந்து பழக்கணும்... இவயள் காசை அடிச்சுட்டு படையளைக் கொண்டு பழக்கினம் எண்டு கருத்து ஒண்டை ஆரோ அம்மாட காதில போட்டிட்டினம்... அவயள நம்பி என்னெண்டு உன்னை அனுப்புறது எண்டு குதிக்க ஆரம்பிச்சா...
“எல்லாரும் போகினம் தானே.. என்னை மட்டும் விழுங்கப் போறாங்களே?”
“எல்லாரும் கிணத்துக்க குதிக்கினம் எண்டுறதுக்காக நாங்களும் குதிக்கேலுமே..”
“ஐயோ அம்மா.. லூசு மாதிரிக் கதைக்காதையுங்கோ... ட்ரெயினிங் போகேல்லை எண்டா கம்பஸ் போக விடாயினமாம்...”
சும்மா ஒரு வெடியை எடுத்து பத்த வைச்சன்...
.................................
பெரிய ஆலோசனைக் கூட்டம்... என்னைத் தவிர எல்லாரும் சேர்ந்து ஆலோசிச்சு போனில் எல்லா சொந்தக்காரரிட்ட விசாரிச்சு என்னையும் என்ர பட்ச் காரரிட்ட விசாரிக்க சொல்லி ஒரு மாதிரி எனக்கான ட்ரெயினிங் போறதுக்கான ஆணை வந்தது... திங்கள் போகோணும்... ஒரு பெரிய்ய்ய்ய்ய லிஸ்ற்றே அனுப்பியிருக்காங்க.. அதில கிடந்த சில அயிட்டம்ஸ்(?) என்ன எண்டே எனக்குத் தெரியாது... சனிக்கிழமை மட்டும் ஒரு கறுமமும் வாங்கேல்லை... ஞாயிறு கடை திறப்பாங்களே?
ஒரு மாதிரி அம்மாவுக்கு வயின் குடுத்து எல்லாம் வாங்கியாச்சு...
அந்த லிஸ்ற்றில கோப்பை, கப், நைட்டுக்குப் போட்டுக்குறதுக்கான ட்ரெஸ் எல்லாம் போட்டு இல்லை... ஸோ நான் அது கொண்டு போகலை... (வட் எ கொமன் சென்ஸ்... நோ நோ நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது உங்கள் லப் ரொப்.. துப்புவதால் எனக்கொன்றும் நேராது என்று ஞாபகப் படுத்த விரும்புகிறேன்..)
பிறகென்ன? அதுவும் ஒரு கூத்துத் தான்... ரைம் வரட்டும் சொல்றன்...
ஒரு மாதிரி அம்மாவையும் இழுத்துக் கொண்டு கொழும்பு வந்தாச்சு... எங்களுக்கு களுத்துறை பொலிஸ் ஸ்கூலிலை தான் ட்ரெயினிங்... இடமும் தெரியாது.. என்னோட இன்னும் கொஞ்ச ஜீவனுகள் இந்த பேப்பஸிற்காக வந்திச்சினம்.. அவயளோட இழுபட்டுக் கொண்டு போயாச்சு... ஒரு மாதிரி டொக்குமென்ற்ஸ், லெற்றர் எல்லாம் குடுத்துட்டு எங்களுக்கு ஒரு மீற்றிங் மாதிரி வைச்சிச்சினம்... எங்கள என்ன மாதிரி வதைக்கப் (உஸ்....) ட்ரெயின் பண்ணப் போகினம் எண்ட மாட்டர் தான் அது.. அப்பத் தான் சொல்லினம்... உங்களுக்கு எண்டு கோப்பை, கப் கொண்டு வந்தீங்களா எண்டு..
’போங்கடா டேய்... இதெல்லாம் முதலே சொல்ல மாட்டிங்களா?’
எங்களை க்ரூப்பாப் பிரிப்பினம்... ஒவ்வொரு க்ரூப்பும் ஒவ்வொரு இடத்தில தங்கும்.. (பொலிஸ் ட்ரெயினிங் எடுக்குற ஆக்களை அப்பிடித்தான் ஒவ்வொரு குருப்பாத் தங்க வைப்பினம்...)
காலமை ஆறரைக்கு முன்னாடி பிளேன்ரீ..ஆறரையில இருந்து ஏழுமணிவரைக்கும் எக்ஸஸைஸ்.. ஏழுமணிக்கு சாப்பாடு.... மறுபடி எக்ஸஸைஸ்...அப்புறம் லெக்ஸஸ்...(டேய்... எப்பிடியும் ஒரு வருசத்துக்குப் பிறகு படிக்கப் போறம் கம்பஸ் போய்.. கதிரையில தொடர்ந்து உட்கார்ந்து மறந்து போயிருக்கும்... படிக்குறது எண்டா என்ன கொப்பி எண்டா என்ன எண்டு ஞாபகமே இல்லை எண்டு உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா? கம்பஸில் வதை படுவதற்கான ட்ரெயிலரா இது?) மதியம் சாப்பாடு வித் டெஸ்ஸேட்... (சத்தியமா...)...கொஞ்சம் லீவு.. மறுபடியும் பின்னேரம் விளையாட்டு.. பின்னேரம் ரீயும் சோட் ஈட்ஸும்.. நைட் அற்றெண்டன்ஸ் எடுப்பினம்... அப்புறம் தூங்கலாம்...
ஃபானும் இல்லை.. அவ்வளவு பேரையும் ஒரு றூமிற்க அடைச்சு வைச்சிட்டு அலம்பினம்...
எங்கட ஒவ்வொரு க்ரூப்பிற்கும் ஒவ்வொரு மாணவ தலைவர்கள்.. க்ரூப்பிற்கு எண்டு பொலிஸ் அக்காமார் ரெண்டு பேரும் ரெண்டு பொலிஸும் ஒரு தலையும் இருப்பார்... எங்கட க்ரூப்பின்ர பேர் சரியா ஞாபகம் இல்லை... எங்கட டொமட்றி... அதுட செல்லப் பேர் டோம்... (என்ன செய்யுறது நாம எல்லாம் இதுகளுக்குத் தான் செல்லப் பெயர் வைக்க முடியும்.. என்னோட ப்ரெண்டு ஒருத்தி சப்ஜெக்ற் எல்லாத்துக்கும் செல்லப் பேர் வைச்சிருக்கா.... வட் எ... றைற்று விடுங்க....).... எங்கட டோமில மொத்தம் இருபது பேர் வரும்...(மொத்தமா ஒரு பிள்ள தான்.. ஓஹோ ... மொக்கை ஜோக்.. ரேற்றிங்: அஞ்சுக்கு ஒன்று) அதுவும் சரியா ஞாபகம் இல்லை..
ஸ்பெஸல் என்னெண்டா களுத்துறை ட்ரெயினிங் இல எங்கட பட்சில ஒன்லி கேர்ல்ஸ் ஃபுறம் வடக்கு && கிழக்கு... (பேச்சுக்கு ஸ்பெஸல் எண்டு சொல்லலாம்.. சாவுக்கிராக்கி... மூண்டு கிழமை சைட் அடிக்காம என்னால எல்லாம் உயிர் வாழ முடியுமா? அதுக்கு நான் செத்துப் போயிடறேன்....... )
”கப் - சாப்பாட்டுக் கோப்பை கொண்டு வராதாக்கள் கை உயர்த்து... ”
பரிதாபமாக நானும் இன்னும் கொஞ்சமும் கை உயர்த்துறம்...
”உங்களுக்கான கப் தரப்படும்... போகும் போது தந்தா சரி...”
’சட்டித் தலையா... நாங்க ஏன் அதைக் கொண்டு போப் போறம்.. எந்த செம்மறி குடிச்ச எச்சில் கோப்பையோ? வீட்ட தங்கச்சி சாப்பிடுற கோப்பைக்குள்ளயே நான் சாப்பிட மாட்டனே... என்ன சோதனை இது... ’
“சாப்பாட்டுக் கோப்பை சாப்பிடுற இடத்தில இல்லாதாக்கள் எடுக்கலாம்...”
‘எந்த எருமை அதுக்குள்ள மாட்டிறைச்சி விழுங்கிச்சோ.. விரதத்துக்க சைவம் சாப்பிட்டாலும் அந்தக் கோப்பைக்க போட்டு.... ’ நினைக்கவே குமட்டத் தொடங்கிச்சு....
”ஏதாவது மோசமான வியாதி இருந்தா ட்ரெயினிங் தேவலை”
மயங்கி விழுந்தா என்ன? வீட்ட ஓடிடலாமே எண்டு உள்மனசு சொல்லுது.... இந்த நேரம் பாத்து மயக்கம் கூட வருதில்லை... ஒரு நாளும் என் நோவு அறியா இடும்பைக் கூர் என் உடம்பே.... (ஸாரி எமோசனில கொப்பியடிச்சிட்டன்..)..
ஒரு மாதிரி மீற்றிங் முடிஞ்சுது.. பிளேன்ரீ தந்தினம்.. ஒரு குட்டி ராங்கில கொண்டு வந்து... ரப்பைத் திறந்து கப்பில் நிரப்பிக் குடிக்கணும்..
கப் கொண்டு வந்த பிள்ளையள் எல்லாம் அடிச்சுப் பிடிச்சுக் குடிக்குதுகள்.... கோயில்ல கூட அடிபட்டு நான் பொங்கல் வாங்க மாட்டன்... அவ்வளவு வீக்கு.... இந்த லட்சணத்தில... விளங்கிடும்...
கிரிசாம்பாள் கணக்கா நான் பின்வாங்க யாரு பெத்த பிள்ளையோ என் கையிலயும் பிளேன்ரியோட ஒரு கப்பைத் தந்திச்சு... ஒரு பொலிஸ் அக்கா... நன்றியோட நிமிர்ந்து ஒரு புன்னகை பூக்க நிமிர அவா அதை ஏற்க நேரமில்லாம அங்கால போயிட்டா... சரி போனாப் போகுது.. பிளேன்ரீயைக் குடிப்பம் எண்டு வாயில வைச்சா அது ஆறிட்டுது... எண்டாலும் அந்த வெயிலுக்க... பட்டினி வயிறுக்கு அது அமிர்தம் தான்...
பிறகு க்ரூப் பிரிச்சிட்டுக் கொண்டு போய் விட்டினம்.. கொழும்பில என்னோட றூமில இருந்த பிள்ளையொண்டு என்னோட க்ரூப்.. அப்பாடா...
அதுக்குள்ள தலைமைத்துவத்துக்கும் சில ஜீவனுகள் அடிபடுது... ரணகளத்திலயும் அவைக்கு ஒரு கிளுகிளுப்பு கேட்குது...
இருட்டு... நீட்டுக்கு கட்டில்... ஆஸ்பத்திரி தோத்திடும்... காலமை குளிச்சதுக்கு தண்ணியே காட்டேல்ல மூஞ்சிக்கு... வோஸ்றூமிற்குப் போய் முகம் கழுவினன்.... அதுக்கே செத்திடலாம் எண்டு இருந்திச்சு... இதுக்க குளிச்சு..... வன் - ரூ - த்றீ ப்றப்ளம்ஸ் எல்லாம் முடிக்கணும்....
அந்த இடம் வேலைக்காகாது.. இடம் காணாது... இதே மாதிரி வேறயும் கொஞ்ச க்ருப்பிற்கும் இடம் காணாது... இன்னொரு டோம் ஒதுக்கப் போயினம்.. அதுக்கு ஆர் ஆர் போறீங்க... இதுவே இப்பிடி இருக்கே... அது எப்பிடி இருக்குமோ... பரவால்ல.. ஒரு மாதிரி ஒவ்வொரு டோம் இற்கும் போய் எங்களுக்குத் தெரிஞ்ச சில சனங்களை மோப்பம் பிடிச்சுக் கண்டுபிடிச்சு ஒண்டாக் கஸ்டப் படுவம் வாங்கோ எண்டு இழுத்திட்டு புது டோம் போயிட்டம்...
முதல் இருந்ததை விட இது பரவால்ல... என்ன கொஞ்சம் வெளிச்சம்... சுத்தி ஒரு பக்கம் பொலிஸ் ஸ்கூலுடன் ஜொயின்ற்... மற்றப் பக்கம் எல்லாம் அகழி..... (சேப்ரி ஃபெஸ்ட்)
இருபது பெட் வரும்... ரெண்டோ மூண்டுக்கு மேலயும் பெட் இருக்கு... என்ன மாதிரிக் கேஸுகள் அதில படுத்திட்டு கனவு கண்டிட்டு பிரண்டா.... (குப்புற விழுந்தா ட்ரெயினிங் பீரியட்டை விடக் கூடக் காலம் ஆஸ்பத்திரிலயும் முன்பக்கம் விழுந்தா இஸ்ட தெய்வத்தை நேரிலயும் பார்க்கலாம்... ஹீ ஹீ..)
பாத்றூம் எண்டு ஸ்பெஸலா இல்லை... ரெண்டு தொட்டி... கதைச்சுக் கதைச்சுக் (??? பொசிடிவ் திங்கிங் பாஸ்)குளிக்கலாம்...சரி.. பொண்ணுங்க தானே.... இதர செயற்பாடுகளுக்கு எட்டு இடம் இருக்கு... நொட் பாட் தற்மச்...
”நாளையில் இருந்து எல்லாம் ஸ்ராட் ஆகும்...”
‘ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது.......’ ஹீ.. ஹீ... ஆஆஆஆஆ...
No comments:
Post a Comment