கடவுளை நேசிக்கிறதுக்கு ஒரு அளவிடையா எண்டு கேட்பீங்க...
சரியை கடவுளை ஆண்டானாகவும் தன்னை அடிமையாகவும் பாவிக்கிறது... என் கடன் பணி செய்து கிடப்பதே! எண்ட மாதிரி! உரிமை குறைந்த உறவு..
கிரியை
எண்டுறது கடவுளை தந்தையாகவும் தன்னை மகனாகவும் பாவிக்கிறது.... உரிமை
அதிகம் மகனுக்கு... ஆனா அப்பா சைட்டால கண்டிப்பும் கிடைக்கும்....
யோகம்
தோழமை உறவு... என் ஃபிரண்டைப் போல யாரு மச்சான்... உரிமை ரொம்ப அதிகம்..
கண்டிப்பு இல்லை... ஃபிரண்டின்ர பிளேட்டில இருக்குற சாப்பாட்டை ஆட்டயப்
போடலாம்.... ஆனாலும் ரெண்டு பேரும் வேற வேற தான்...
ஞானம்
இறைவனைத் தலைவனாகவும் தன்னை தலைவியாகவும் நினைப்பது... வேறாயினும் வேறு
இல்லை.... உலகத்திலயே உயர்ந்த அன்பாகக் கருதப்படுவது அதைத் தான்... ஒரு
பெண் தன் தலைவனுக்காக பலவற்றைத் தியாகம் செய்கிறாள்... காரணம் ஒன்று தான்..
அவன் மீதுகொண்ட அன்பு... அவ்வளவு சிறந்ததா கடவுளை நேசிக்கணும்....
Thursday, June 30, 2016
கடவுளை எவ்வளவு நேசிக்கணும்?
தியானம் வரலையா? - மக்கட்சேவை செய்
ஒருத்தர் விவேகானந்தரிட்ட சொல்லுறார்...
“கதவை மூடிட்டு கண்ணை மூடிட்டிருந்தன்... என் மனம் அலைபாயுது... ஒருமுகப் படுத்த முடியலை ” எண்டு...
“மனம் தெளிவு இல்லைன்னா எப்பிடி கொன்சன்றேசன் வரும்... கதவைத் திறந்து வெளிய வா... மக்கட்சேவை செய்... மன அடக்கம் தன்பாட்டில வரும் எண்டுட்டார் விவேகானந்தர்..

இந்தமுறை தப்பலாம்- அடுத்த முறை என்ன செய்வன்?
ஒரு பண்டிதருக்கு வாதம் செய்ய வேண்டி வருது... அவருக்கு பயங்கர வயித்து
வலி... போகலைன்னா தோல்வியை ஒத்துக்கோ எண்டுட்டாங்க... பண்டிதர் போறார்
வயித்தப் பிடிச்சுட்டு....
ஒரு துரும்பைக் கிள்ளிப் பக்கத்தில போட்டுட்டு வாதம் செய்ய உட்காருறார்.... துரும்பு துடிக்குது... பண்டிதருக்கு வலி இல்லை... வாதம் முடிய துரும்பிட்ட இருந்து வலியைத் தான் வாங்கிட்டு வயித்தப் பிடிச்சுட்டுப் போறார் பண்டிதர்....
”எதுக்கு மறுபடி வயித்தப் பிடிச்சுட்டு வறீங்க? அந்தத் துரும்பிட்டையே அதை விட்டுட்டு வந்திருக்கலாமே” எண்டு கேட்கிறாங்க...
அதுக்கு அவர் ”இந்தப் பிறப்பில நான் இதை செய்யலாம்... ஆனா அந்தப் பாவத்தை அனுபவிக்கலைன்னா அதை அனுபவிக்க மறுபடி பிறக்கணுமே.... அதுக்கு இதே பரவால்ல...” எண்டுறார்...

உன்னைத் தெய்வமெனக் கொள்
உன்னை இறைவன் எனக் கொள் என்பது நிறைய இடத்தில் குறிப்பிடப்படும்
விடயம்.. எனக்கு சந்தேகம் எழுந்தது... நான் தெய்வம் ஆயின் நான் செய்வது
அனைத்தும் சரியா? அப்பிடியாயின் மற்றவர்கள் செய்வது தவறா?
உண்மை அது அல்லவே... தெய்வ சன்னிதியில் தெய்வத்தினை திட்டுகிறார்கள்.. போற்றுகிறார்கள்... பிஸினஸ் டீல் பேசிக் கொள்கிறார்கள்.. கேள்வி கேட்கிறார்கள்... தெய்வம் தண்டிக்கும் என்று வேறு சொல்கிறார்கள்... தெய்வம் எதையும் கண்டு கொள்வதில்லை.. ஜாலியாக இருக்கிறது.. பால் ஊத்துறவன், அர்ச்சனை ரிக்கற் வாங்கினவன், பிக்பாக்கட் அடிக்குறவன், நகை திருடிகள் எல்லாரும் வாறாங்க போறாங்க.. தெய்வம் அவர்களைப் பாத்து தனக்குள் சிரித்துக் கொள்கிறது.. எல்லாருக்கும் வேற வேற இடத்தில விதிக்கணக்கு இருக்கு... கொம்பிளெக்ஸ் கணக்கு.. அதையெல்லாம் விட்டிட்டு இங்க வந்து அலம்புறாங்க எண்டு நினைக்குறது...
கதைக்க விருப்பம் இல்லாத கொன்ராக்ற் ஐ ப்ளாக் பண்ணிட்டு உல்லாசமா இருப்பவர்கள் இருக்குறார்கள்.. கேட்டும் கேளாத மாதிரி கண்டுக்காம சிலர் இருக்கிறார்கள்... இரண்டாவது சரியான கஸ்டம்... மிக உயர்ந்த ஞானம் தேவை.. எல்லா இடத்தையும் அப்பிடி இருக்க ஏலாது... தெய்வம் எல்லாத்தையும் கேட்டுக் கொண்டும் எல்லாவற்றிற்கும் பதில் தெரிந்தும் பேசாமல் இருக்குறது..
மனிதன் சொல்வதை இன்னொரு மனிதன் ஏற்றுக் கொள்வதில்லை.. மேலதிக விளக்கங்கள்... கேள்விகள்... சில இடங்களில் பதில் பேசாமல் இருப்பது புத்திசாலித்தனம்.. கடவுள் மட்டும் பேசினால் விட்டு வைப்பார்களா? மாட்டார்கள்... எத்தனை கோடி கேள்விகள் வரும்? காலில் முள் தைத்ததற்கும் காரணம் கேட்பார்கள்? அது இருநூறு வருசப் பழைய கணக்காக இருக்கும்... அதற்கு விளக்கம் சொன்னால் அதற்கு மேலும் கேட்பார்கள்... தெய்வம் பேசாமல் இருக்கிறது..
நான் காலமல்ல... ஆனால் நான் தான் காலத்தை சுழற்றுகிறேன்.. ஆனால் என் இஸ்டப்படி நான் காலத்தை சுற்றவில்லை... அவ்வாறு செய்ய நான் மனிதன் அல்ல.. நான் விருப்பு-வெறுப்பு இன்ப-துன்பம் இம்மை-மறுமை புகழ்ச்சி-தூற்றல் அனைத்துக்கும் அப்பாற்பட்டவன்... என்னைப் போல் நீயும் இரு.. என்று சொல்லிச் சிரிக்கிறது..
இப்ப சொல்லுங்க... கஸ்டம் தானே...?

கடவுளை எப்ப காணலாம்?
ஒரு சீடனுக்கு சந்தேகம் வந்திச்சு... கடவுளை எப்ப காணலாம் அப்பிடின்னு..
ஆத்துக்க நிண்டு சூரிய நமஸ்காரம் செய்ஞ்சுட்டிருந்த குருவிட்டப் போய்க்
கேட்குறாரு... உடனே அவர் சீடனின்ர தலையை தண்ணிக்க போட்டு அமத்துறார்...
மூச்சுத் திணறுறான் சீடன்....
கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் விட்டுறார்... கேட்கிறார்...
”நான் தண்ணிக்க உன்னை அமத்தி வைச்சிட்டிருந்தப்போ நீ என்ன நினைச்சாய்” எண்டு...
”எப்ப என்னை வெளிய விடுவீங்க எண்டு நினைச்சன்” எண்டு...
”எவ்வளவு துடிப்போட முனைப்பா எப்ப விடுவேன்னு ஊன்றி நினைச்சியோ அதேயளவு கடவுளைக் காணணும் எண்டு எப்ப நினைக்குறியோ அப்ப கடவுளைக் காண்பாய்” என்று புன்முறுவல் பூக்கிறார் குரு...

சிறந்த அறிவாளிகள் ஏன் ஞானியாகிறார்கள்?
எந்த
விசயமெண்டாலும் அதின்ர உச்சத்தை அடைந்து அதில் திருப்தி கொண்டவன் அதை
விட்டுட்டுப் போயிடுவான்... எவரெஸ்ற் உச்சியைத் தொட்டு அதில் திருப்தி
கொண்டவன் திரும்பத் திரும்ப ஏறுவானா? அதனால தான் எல்லாருக்கும் உச்சம்
கிடைப்பதில்லை... உச்சம் கிடைக்கவில்லை என்று திருப்தி இன்றி அதைத்
தேடுவதிலேயே வாழ்க்கையின் ருசி இருக்கிறது... அதைப் பெற்றவன் வாழ்க்கையின்
மீதுள்ள பற்றை இழந்து பற்றற்ற நிலையை அடைகிறான்... வெற்றியால்
ஏற்படும் விரக்தியே பற்றற்ற நிலை தரவல்லது... தோல்விகளால் ஏற்படும்
விரக்தியால் அது முடியாது... அவ்வாறு தோன்றினால் கூட பொறுத்திருந்தாலோ
போராடினாலோ வெல்வோமோ என்ற எண்ணத்தை இடையில் அது தோற்றுவிக்கும்.... பெறும்
சிறுவெற்றி பற்றினைத் தோற்றுவித்துவிடும்.... அது ஞானம் அல்ல...
தோல்விகளின் விரக்தி ஒருவனை அன்பு அதிகம் உள்ளவனாக்கலாம்.... அன்பு என்பது
தியாகமும் நம்பிக்கையுமே.... வேறெதுவும் அல்ல....
கடலை அவிப்பது எப்படி?
- காலையில் அவிப்பதற்கு கடலையை முதல்நாள் பின்னேரமே ஊற வைக்கணும்.
- கடலையை ஒரு பாத்திரத்தில் இட்டு கடலை மட்டத்துக்கு தண்ணீர் ஊற்றி மூடி அவிக்க வேண்டும்.
- 15 நிமிடத்தில் இறக்கலாம்.
Subscribe to:
Posts (Atom)