எனது விளக்கம்
"ஆம்பிளை எண்டா எப்பிடியும் இருக்கலாம். என்னவும் செய்யலாம். அதுக்கு பொண்ணுங்க அடங்கி போகணும்" எண்டு ஒரு மூட நம்பிக்கை இருக்கு. மூட நம்பிக்கையோட இருக்கிறவன் ஒரு மரம் மாதிரி. அவனுக்கு சூடு சுரணை இராது. சொந்தமா யோசிக்க முடியாது. அதனால தான் மரம். அந்த நம்பிக்கை உள்ள எல்லா ஆண்களும் ஒரே குணத்தை தான் பிரதிபலிப்பாங்க. பெரும்பாலும் நிறைய பேர் அப்பிடி தான். அதால தான் அந்தம்மா புருஷனின் முகத்தை எல்லா ஆண்களிலும் வைச்சாங்க. கவனிக்கவும். நல்ல ஆண்களும் இருக்கலாம். ஆனா அந்தம்மா சந்திச்ச எல்லா ஆணும் மோசம். அந்த மூட நம்பிக்கை வேற வேற ஆக்களுக்கு இருக்கும் போது அவங்க தங்கட புத்தியை எப்பிடி காட்டுவாங்க எண்டது தான் வித்தியாசமான பாத்திரங்கள்.
முதல்ல அந்த மூட நம்பிக்கையை சமூகம் கொடுக்குது. அதன் விளைவா அந்த சின்ன பையன் பிறக்கிறான். பிறக்கிறான் எண்டு உருவாகிறான். அந்த பொண்ணை கடுமையா பேசுறான். அது தான் மோசமான நடவடிக்கையின் முதல் நிலை. அவனுக்கு சமூகத்தில மதிப்பு இல்ல. அவன் மோசமான நம்பிக்கை போட்ட மலம். அதான் பின்னால இருந்து வாரான். அவனால திட்ட மட்டும் தான் முடியும். அடுத்தது அவனுக்கு பாதிரியார் பிறக்கிறார். மற்றவனுக்கு அறிவுரை சொல்லுற நிலையில உள்ளவர். சமூகத்தில மரியாதை இருக்கு. மோசமா பேசுற ஒருவனிடம் இருந்து நன்மையை அனுபவிக்கனும் எண்டா அவனுக்கு ஜால்றா அடிச்சா தான் முடியும். அந்த மாதிரி ஜால்றா அடிச்சு இன்னொருவருக்கு அறிவுரை சொல்லுற நிலைக்கு வந்த ஒருத்தன் "ஆண்களுக்கு அடங்கி போ" எண்டு தான் இன்னோராளுக்கு அறிவுரை தான் சொல்லுவான். "எதிர்த்து நில்" எண்டு சொல்ல மாட்டான். தொப்புள் கொடி எண்டுறது அவனால இவன் இப்பிடியான நிலைக்கு வந்திருக்கிறான் எண்டதுக்கு. அது ரெண்டாவது மோசமான நிலை.
அப்பிடி போதனை செய்யுற ஆக்கள் தான் அந்த ஓனர் மாதிரி ஆட்களுக்கு முதுகெலும்பு. அவனுக்கு சொத்து இருக்கு. அதை வைச்சு அந்த பொண்ணை துரத்துறான். "அவனை மாதிரி மோசமான ஆண்கள் வாழுற உலகத்தில தனியா வாழ ஏலாது. அதனால கொடுமை படுத்துற புருஷன் இருந்தாலும் அட்ஜர்ஸ்ட் பண்ணி தான் ஆகணும்" எண்டு சொல்லுற தைரியத்தை ஒரு புருசனுக்கு கொடுக்குறது அந்த ஓணர் மாதிரி ஆக்கள் தான். அதனால தான் அவன்ர வாய் வழியா அந்தம்மாட புருஷன் வாறான். இதான் மோசமான ஆண்களின் கதை.
No comments:
Post a Comment