கடவுளைப் பார்க்கணும் என்று ஒரு பண்டிதர் முயற்சி செய்திட்டிருக்கார்.. கடுமையான விரதங்கள் இருக்கிறார்.. புலாலை விடுறார்.. காமத்தைக் கூட்டும் உணவுகளை விடுறார்.. கோயிலையே சுத்தி சுத்தி வாறார்.. புண்ணிய நதிகளில் நீராடுறார்.. புறத்தூய்மை பேணுறார்.. யாத்திரை போறார்.. எதுவுமே பலன் தரலை.. அவர்ட கனவில் கடவுள் வந்து சொல்லுறார்.. 'கோயில் பின் வீதியில நான் நிற்கிறன் வந்து பார்' எண்டு.. பண்டிதர் ஓடி வாறார்.. பின்வீதியில கசாப்புக் கடைக்காரன் இறைச்சியை வெட்டிட்டிருக்கான்.. அருவருப்பா உணருறார்.. 'இறைச்சி.. அதுவும் கோயிலுக்கு பின்னால வெட்டுறான்.. இவன் விற்குறதால தான் சனம் வாங்கி சாப்பிட்டுக் கெட்டுப் போகுதுகள்.. பாவி.. மற்றவங்களையும் பாவம் செய்யத் தூண்டுறான்' எண்டு முகம் சுளிக்கிறார்.. பண்டிதருக்கு வேற யாரையும் தெரியலை.. நான் ஒரே கடவுள் பற்றி நினைச்சிட்டிருக்கன்.. அதால தான் அப்பிடி கனவு வருது எண்டு திரும்பி போயிடுறார்.. மறுபடியும் போய் படுக்கிறார்.. கனவில கடவுள் வந்து 'என்னடா... என்னைப் பாத்து முகம் சுளிச்சிட்டுப் போறாய்.. ' எண்டுறார்.. பண்டிதருக்கு மண்டை விறைச்சிடுது..
அடுத்தநாள் யாரெண்டே தெரியாத ஒரு ஞானி வாறார் இவரைத் தேடி.. என்னப்பா.. கடவுளைக் கண்டாயாம் எண்டு.. இவர் நடந்ததை சொல்லுறார்.. ஞானி சிரிக்கிறார்.. 'கடவுளை எல்லா இடமும் காணலாம்.. உன்ரை பார்வையை மாத்து' எண்டுறார். கிடைக்காத இடங்களில் அன்பைத் தேடி சலிப்படைந்த ஒருத்தன் எதிர்பாராத ஒருவர் காரணமில்லாம வெள்ளமாக அன்பு செலுத்தும் போது கண்ணீர் சிந்தி பேச்சற்றுப் போறமாதிரி கடவுளை காண எங்கெங்கோ திரிந்து என்னென்னவோ செய்தவர் விக்கிச்சு நிற்குறார்.. 'அப்பிடியே பார்.. கடவுள் உன்ரை ரொட்டியைத் தூக்கிட்டு ஓடுறார்..' எண்டுறார் ஞானி.. திரும்பிப் பார்த்தார் பண்டிதர்.. நாய் ஒண்டு ரொட்டியைக் கவ்விட்டு ஓடுது.. இவர் நெய்யைத் தூக்கிட்டே பின்னாலயே ஓடுறார் 'இரு பரம்பொருளே.. வெறும் ரொட்டி திண்டா விக்கும்.. ' எண்டு கத்திக் கொண்டு.. முறுவலித்துக் கொண்டே காற்றில் கரைந்து போறார் ஞானி..
மூலக்கதை ஆறேழு வயசில வாசிச்சது.. திடீரெண்டு ஞாபகம் வரேக்க நமட்டு சிரிப்பு வந்தது.. நாம சரியான வழியில் போறதா நினைச்சிட்டு மற்றவங்களைத் திருத்த முன்னாடி நம்ம சரியா எண்டு உறுதிப்படுத்தணும்.. மூலக்கதையை நான் மனனம் பண்ணலை.. அதுட கருத்து மட்டும்தான் மனசில இருந்திச்சு.. அதனால எக்ஸ்ரா வார்த்தைகளுக்கு மன்னிக்க வேண்டுகிறேன்..