என் வாழ்க்கைப் பாடங்கள் 1
இருக்கிறதே போதும். உன்கிட்ட என்ன இருக்கோ அது தான் உனக்கு சூட்டபிள்.
தோற்றத்தில் நான் சிறியவள். என் வயதுள்ள பிள்ளைகளுடன் ஒப்பிடுகையில் நான் குட்டையாகவும் மெல்லியதாகவும் பார்வைக்கு சின்னப் பிள்ளை போலவும் காட்சியளிப்பேன். அவ்வளவு அழகும் இல்லை. பகிடிவதையின் போது புலமைப் பரிசில் வகுப்பிற்கு செல்லவில்லையா என்றும் பல்கலைக்கழகத்தில் நடந்து செல்லும்போது தரம் 5 பிள்ளைகள் கூட கம்பஸ் வருகுது என்றும் பலவிதமாக கிண்டல் செய்வார்கள். இதற்கு நான் வருத்தப் பட்டதுண்டு. ஆனால், பின்னர் சிறிதாக இருப்பதன் நன்மைகளைத் தெரிந்து கொண்டேன். அதன் பின்னர், அதற்காக வருத்தப்படுவதில்லை.
· ஆண்களின் தொல்லை இராது. எல்லாருடனும் சகஜமாகப் பழகலாம்.
· யாரும் லவ் ரோச்சர் பண்ண மாட்டார்கள். நிறையப் பிரச்சினை வராது.
· நிறைய நண்பர்கள் இருப்பார்கள். குட்டிக் குட்டி ஃபிரண்ஸ் ஐ சொன்னன் பாருங்கோ.
· உடுப்பு எடுக்க அலையவே தேவையில்லை. சில்ட்றன் செக்சனே போதும்.
· பிரியப்பட்டா தம்பி தங்கைக்கு எடுக்கிற உடுப்பைக் கூட ஆட்டயப் போடலாம்.
இப்பிடி எக்கச்சக்கமா இருக்குப்பா…..ஸோ டோன்ற் வொறி இஃப் யு ஆர் ஸோட் அண்ட் அக்லி. முடிஞ்சா இந்த பட்டியலை நீட்டுங்க.
பிற்குறிப்பு: இதனை வாசித்த பின்பும் லைக் பண்ணாமல் போகும் நபர்களைப் பட்டியலிட்டு உலக அழக, அழகிகளாக தம்மை எண்ணுவோர் பட்டியலில் அடுத்த போஸ்ரில் சேர்த்து விடுவேன். ஜாக்கிரதை!
No comments:
Post a Comment