Saturday, May 27, 2017

குழந்தைப் பிள்ளைகளுக்கு வைக்கும் பொட்டு செய்யும் முறை

அரிசிக்குறுணியை வறுத்து கறுத்து வர அதற்குள் நீர் ஊற்றி சிரட்டைக்குள் ஊற்றிக் காய விடல்

குழந்தைப் பிள்ளைகளுக்குத் தலை பிடித்தல்

குழந்தைப் பிள்ளைகளுக்குப் பின் தலை பிடித்து விட வேண்டும்.. இல்லையென்றால் அது நேராக இராது.. தவளத் தொடங்கும் போது பின் தலை நீளத் தொடங்கும்..

1. ஏணைக்குள் படுக்க வைக்க வேண்டும்
2. தட்டையான கோப்பையின் மேல் மெல்லிய தலையணை இட்டு அதன் மேல் பிள்ளையைப் படுக்க வைக்க வேண்டும்

வயிற்றுப் புண்

1.        வாழைக் குருத்து அரைத்த விழுது 2 தேக்கரண்டி, மோர் 200மிலீ, 2 தேக்கரண்டி தேசிப்புளி கலந்து குடிக்கவும்
2.        மணத்தக்காளிக் கீரை சாப்பிடவும்
3.        கீழ்க்காய்நெல்லி, குப்பைமேனி, ½ தேக்கரண்டி கஸ்தூரிமஞ்சள் அரைத்துப் பாலோட குடித்தல்.. காலையில் சாப்பிட முன் எனில் இரவு சாப்பிட்ட பின் குடிக்கவும்

4.        தினமும் இரவு வெந்தயம் ஊறப் போட்டு காலையில் வெறுவயிற்றில் விழுங்கவும்

மாதவிடாய் பிரச்சினைகள்

1. வயிற்று வலி

வேப்பங்குருத்து 5, இஞ்சி, 1 உள்ளிப் பல்லு, ½ தேக்கரண்டி மஞ்சள், 9 மிளகு சேர்த்து அரைத்து உருண்டைகளாக்கி விழுங்கவும் 

2. வெள்ளை படுதல்


1.   விடத்தல் இலை, அரிசிமாவில் களி சாப்பிடவும்
2.   வேர்க்கொம்புத் தூள் தினமும் காலையில் சாப்பிடத் தீரும்
3.   உள்ளி வறுத்து சாப்பிடத் தீரும்
4.   வேப்பங்குருத்து, மஞ்சள் அரைத்து விழுங்கவும்


 3.    அதிக உதிரப் போக்கு


 a)        பொருத்துமான் இலை பிட்டு
b)       பழுத்த பூவரசம் இலை பிட்டு
இலையை இடித்து இலை நரம்புகளை நீக்கி சுத்தம் செய்து மாவோடு கலந்து பிட்டு அவிக்க வேண்டும்.. நல்லெண்ணெய் விட்டு சாப்பிட வேண்டும்

Monday, February 20, 2017

காதலே_போ

பெருந்தன்மை காட்டி என்முன்
விஸ்வருபம் எடுத்து நின்றாய்
சிறுவனாய் நான்
வாய் பிளந்து போய்
என்னொளி குன்றி
ஸ்தம்பித்து நிற்க
கடலாய் மாறி என்னை நீ
உனக்குள் இழுக்க
அஸ்தமித்துப் போனேன் நான்
அலைகடலுக்குள் ஆதவனாய்
மீண்டும் எழுந்தேன்
அதிக பிரகாசத்துடன்
உனக்குள் நான்
மீண்டும் மீண்டும் தொலைவதும்
மீண்டு பின்பு எழுவதும்
தொடர்ந்து நடப்பது தான்
காலத்தின் நியதியும்
என் காதலின் தேவையும்