Monday, August 24, 2020

சுட்டது

 பண்பின் நாகரீகத்தை

நேர்மையின் பெருமையை
பக்குவத்தின் புரிதலை
என்னுள் வெறுக்கச் செய்கிறது
உன் மீதான காதல்…

விலகும் தூரத்தில்
உன்னை நிறுத்தி,
காதலின் கசிவில்
ஒழுகும் காமத்தைத் துரத்தி,
கடந்துபோகும் காலம் வரை
வாழ்வது என்ன வாழ்வு?

நான் நானாகவும்
நான் நானல்லாமலும்..
இருப்பின் இருத்தலாகவும்
மாறுதலின் இருத்தலாகவும்…
இயங்கிக் கொண்டிருக்கும்
இதய துடிப்பின்
கொடுமை ஒரு பொழுதும்
உனக்குத் தெரியாது..

அக்கினிக் குஞ்சுகளால் கூட
அணையாமல் அழமுடியுமா?
உன்பார்வை
சொல்லித் தந்த பாடமது..
அணையாமல்
அழுது விட்டுப் போகிறேன்…

-சுட்டது

பச்சைத் தமிழனாக இருந்தால் பார்த்தவுடன் பகிரவும்..

 நான் தான் சார் முகேஸ்..


கான்சர் விழிப்புணர்வு விளம்பரத்தில, ’நான் சிகரெட் பிடிச்சு கான்சர் வந்திச்சு’ எண்டு முக்கின குரலில கதைப்பானே அந்த முகேஸ் இல்லை சார்.. அவன் முட்டாள் பய.. நான் ரொம்ப ஸ்மாட் ஆன பையன்…

எப்பிடி எண்டு கேக்குறீங்களா?

லவ் பண்ணுறன் சார்… யாரை எண்டு கேக்காதீங்க.. எத்தனையாவது எண்டு கேளுங்க…. அடக் கோவிச்சுக்க மாட்டன் கேளுங்க சார்.. முந்நூற்றிருபத்து நாலாவது லவ் சார் இது… ’என்னடா இதுக்குப் பேர் லவ்வா’ எண்டு கேக்குறவங்களைப் பாத்து நான் ஒண்டு கேக்குறன்… லவ் எண்டா என்ன சார்?

அவனவன் ஒவ்வொண்டு சொல்லுறான்.. எனக்குத் தெரிஞ்சு, நாம லவ் பண்ணுறவங்க நிம்மதியா சந்தோசமா வாழணும் எண்டு நினைக்குறது தான் சார் லவ்.. அது யாரோட இருந்தா சந்தோசமா இருக்குமோ அவங்க கூட இருக்கட்டும் எண்டு விடுறது தான் சார் லவ்.. ட்ரூ லவ்.. நம்மளை அவங்க லவ் பண்ணணும் எண்டு எக்பெக்ட் பண்ணாது சார்… அவங்களைக் கட்டிட்டோ கட்டாமலோ அவங்களோட படுக்கணும் எண்டுறது அதுட நோக்கம் இல்லை சார்… இப்ப சொல்லுங்க சார் இந்த லவ்வில எதுக்கு சார் எத்தனையாவது எண்ட கணக்கெல்லாம்…

சரி…. ஒருத்தி போயிட்டா.. என்ன செய்ய சொல்லுற சார்… அவளை என்னால நிம்மதியா சந்தோசமா வைச்சிருக்க முடியலை.. அவளுக்கு பிடிச்ச ஒருத்தன் கிடைச்சான்… போயிட்டா.. அவங்க அவங்க லைஃபை தீர்மானிக்க அவங்க அவங்களுக்கு உரிமை இருக்கு தானே சார்.. நாம அதுக்கு ஏன் சார் வருத்தப் படணும்.. நாம லவ் பண்ணின பொண்ணு யாரோட இருந்தாலும் சந்தோசமா இருந்தா சரி தானே சார்?

அதை விட்டுட்டு மூஞ்சியில அசிட் ஊத்துறது.. அவளைத் திட்டி நாலு போஸ்ற் போட்டு பாக்குறவங்களை ரத்தமெடுக்குறது… பொண்ணுங்களை திட்டுற பாட்டுக்கள் போடுறது.. அந்தப் பொண்ணைப் பத்தி தப்புத் தப்பா பரப்பி விடுறது இதெல்லாம் என்ன சார் நியாயம்… இதெல்லாம் பண்ணக் கூடிய ஒருத்தன் என்ர லவ்வை லவ் இல்லை எண்டு சொல்ல என்ன உரிமை சார் இருக்கு… லவ் எண்ட பேரில என்ன எண்டே தெரியாத ஒண்டை அவங்க தான் சார் பண்ணிட்டிருக்காங்க… ஒரு பக்கம் மற்றவனுக்கு ஆப்பு வைக்குறவன் இருக்க மற்றப் பக்கம் தன்னைத் தானே அழிச்சுக்குறவன்… குடிக்குறது.. தற்கொலை பண்ணிக்குறது… ஏன் சார் பண்ணணும் இதெல்லாம்… அவள் தான் வாழ்க்கையா? வாழுறதுக்குத் தானே சார் காதல்…? காதலுக்காகவா வாழ்க்கை? உடம்பு அம்மா குடுத்தது.. உயிர் அப்பா குடுத்தது… இடையில எவளுக்காகவோ ஏன் சார் நான் என்னை அழிச்சுக்கணும்?

இவங்களாச்சும் பரவால்ல… சில சனம் கல்யாணம் பண்ணிக்க மாட்டன் எண்டு கொஞ்சக்காலம் இருக்கும்.. எவ்வளவு காலத்துக்கு சார் அதெல்லாம்..? ஒரு வயசுக்கு மேல சபலம் தட்டும்… அது தப்பு எண்டு கூட சொல்ல ஏலா சார்… இயற்கை சார் அது. அப்ப யாரும் பொண்ணு குடுக்க மாட்டாங்க சார்… வாழ்க்கையை வீணாக்கிட்டமே எண்டு அப்ப கவலை வரும்.. செக்ஸுக்காக எண்டு இல்லாட்டிக்கும் ஒரு துணைக்காக எண்டாச்சும் கல்யாணம் பண்ணியிருக்கலாமே எண்டு தோணும்..

ஒருத்தி குட்பாய் சொல்லிட்டுப் போறப்போ, “போடி… உனக்கு லக் இல்லை… நான் எண்டா நல்லா வாழ வைப்பன்” எண்டு கூட எனக்கு நினைக்கத் தோணலை சார்.. உலகத்தில நான் மட்டும் தான் என்ர பொண்டாட்டியை நல்லா வாழ வைக்கணும் எண்டு நினைப்பனா? ஆம்பிளை எண்டு பேருக்கு மட்டும் பிறந்த ஒரு சில ஜென்மங்களைத் தவிர எல்லாருமே தன்ரை பொண்டாட்டியை நல்லாத் தான் சார் வைச்சுப்பாங்க.. நான் என்னை ஓவர் பில்ட் அப் குடுத்து நினைக்கக் கூட இல்லை சார்..

லவ் எண்டது ஃபீல் தானே சார்.. லைஃப் இல்லையே… முழுநேரமும் ஃபிகரையே நினைக்க ஏலுமா? அப்பப்பத் தானே சார் ஃபீல் ஆகுது.. லவ் புனிதம் எண்டுட்டு தன்னையும் கஸ்டப்படுத்தி மற்றவங்களையும் கஸ்டப்படுத்துற ஆண்கள் கொஞ்சம் யோசிக்கணும் சார்… கூரை மேல சோறு போட்டா ஆயிரம் காக்கா.. திரிசா இல்லைன்னா நயந்தாரா.. நமக்கு உலகத்தில பொண்ணா இல்லை அப்பிடின்னு…

அதுக்காக பண்ணுற லவ்வில நான் விசுவாசம் இல்லை எண்டு நினைக்காதீங்க சார்.. நான் பண்ணுற லவ்வில விசுவாசமாத் தான் இருக்கன்.. நானா யாரையும் கழட்டிக் கூட விட்டதில்லை… நம்மளால நிம்மதியா ஃபீல் பண்ணக் கூடிய நாம சந்தோசமா வைச்சிருக்கக் கூடிய பொண்ணு நம்மளை விட்டுப் போகாது சார்… அது தான் எனக்கெண்டு பிறந்தது.. என்ன சார் நான் சொல்லுறது?

ஆண்கள் உடல் உள சமூக வள அமைப்பு வழங்கும் செய்தி..