Monday, February 20, 2017

காதலே_போ

பெருந்தன்மை காட்டி என்முன்
விஸ்வருபம் எடுத்து நின்றாய்
சிறுவனாய் நான்
வாய் பிளந்து போய்
என்னொளி குன்றி
ஸ்தம்பித்து நிற்க
கடலாய் மாறி என்னை நீ
உனக்குள் இழுக்க
அஸ்தமித்துப் போனேன் நான்
அலைகடலுக்குள் ஆதவனாய்
மீண்டும் எழுந்தேன்
அதிக பிரகாசத்துடன்
உனக்குள் நான்
மீண்டும் மீண்டும் தொலைவதும்
மீண்டு பின்பு எழுவதும்
தொடர்ந்து நடப்பது தான்
காலத்தின் நியதியும்
என் காதலின் தேவையும்