சத்தியமா இந்த போஸ்ற்றுக்கு நல்ல மாதிரிக் கொமன்ற்ஸ் வராதுன்னு தெரியும்… ஃபீட்பாக் நேரடியாவோ மறைமுகமாவோ – மோஸ்லி மறைமுகமா வரலாம்… இது ஒரு வித்தியாசமான டாபிக். அச்சச்சோ இது வாரமலரின்ர நடுப்பக்கம் மாதிரிப் பச்சை பச்சையா இருக்குன்னு கண்ணை மூடிக்குறதுக்கோ நீலமான மேட்டர்னு ஒரு பொண்ணா இருந்துகிட்டு இதை எழுத எப்பிடி முடிஞ்சுது எண்டு நீங்க வாயைப் பொத்துறதுக்கோ இது ஒண்டும் மோசமான விசயம் கிடையாது….. சும்மா ஒரு தனிநபர் பிரச்சினை…… ஆனா ரொம்ப சீரியஸான பிரச்சினை. இன்றடெக்சன் எல்லாம் போதும்.. ஆரம்பி என்கிறீங்களா…? ஓகே….
இண்டைக்கு நாங்க வாழுற சூழல் ரொம்ப மோசம்… சின்னப்பிள்ளைங்க கூட டபிள்மீனிங்கில கதைச்சிட்டுத் திரியுற காலம் இது…. அதுக்குக் கனக்கக் காரணம்… முக்கியமா மீடியாக்கள்…. நான் இப்ப இருக்குற ஃபிளற்ஸிற்குப் பக்கத்துல ஒரு சின்னப் பொண்ணும் சின்னப் பையனும் சொல்லமுடியாத விதத்தில இருந்து கதைச்சிட்டிருப்பாங்க…. சனியும் ஞாயிறும் கிட்டத்தட்ட காலைல இருந்து பின்னேரம் வரைக்கும்…. (மற்ற நாளில அவங்களுக்கு ஸ்கூல் இருக்கும் போல…..)(ஓ… அவங்களைப் பாக்குறதுதான் உனக்கு வேலையா….அப்பிடின்னு கேட்கப்படாது…..) அதால எத்தனையோ பேர் போறாங்க வாறாங்க ஒருத்தர் கூடவா சொல்லப்படாது….? அவங்க பேரன்ற்ஸிற்கு சொல்லப்படாதா? அதை விடுங்கப்பா…
கேட்கிற விசயங்கள் – பாக்கிற விசயங்கள் இதெல்லாம் காம உணர்ச்சியைத் தூண்டுறது ஒரு வகை… சில வாசனைகளுக்கும் அந்த சக்தி இருக்கு.. பொதுவாகவே இரவில் அல்லது பின்னேரம் பூக்கும் பூக்கள் வெள்ளை நிறமாக இருக்கும்.. செமவாசம் வரும்.. இலுப்பைப்பூவை இதில மெயினா சொல்லுறாங்க... அவற்றிற்கெல்லாம் அந்தப் பவ்ர் இருக்கு.. அதோட சில உணவுப் பொருட்கள், மரக்கறி கூட மார்க்கமான எண்ணத்தைத் தோற்றுவிக்கக் கூடியவையா இருக்கு... முந்தானை முடிச்சு படத்தில முருக்கங்காய் பற்றி சொல்லியிருப்பாங்க.. வெங்காயமும் அதே கற்றகரி தான்.. அதுக்காக வெங்காயம் சாப்பிடாம அதுக்கு நான் சொன்ன இந்தக் காரணத்தை சொல்லப்படாது.... வெங்காயம் மருத்துவ குணம் நிறைஞ்சது.. சளிக்கு வெங்காயப் பாணி காய்ச்சிக் குடிக்க அப்பிடியே ஓடிப் போயிடும்...
இதை விட இயல்பாவே காம உணர்ச்சி அதிகமா இருக்குறதுன்னு கூட ஒருவகை இருக்கு….உளவியலைப் பொறுத்தவரைக்கும் பாம்பைத் தான் காமத்துக்கு அடையாளமா சொல்லுறாங்க... பாம்பு நடனத்தை நிறைவேறாத இச்சைக்கு அடையாளமா சொல்லியிருக்கு.. கிரகங்களில பாம்பு எண்டு மெயினா சொல்லுறது ராகுவைத்தான்.. கரும்பாம்பு எண்டுவாங்க.. கேது செம்பாம்பு.... திருமணப் பொருத்தத்தின் போது செவ்வாய் மற்றும் ராகு தோசங்கள் கருத்தில் கொள்ளுறதுக்கு இது தான் முக்கிய காரணம்...அவை இருக்குற இடத்தைப் பொறுத்து மாட்டரில அவங்களுக்கு இருக்கிற இன்ரெஸ்ற் வித்தியாசப்படும்... இன்ரெஸ்ற் குறைஞ்சவங்களையும் கூடினவங்களையும் சேர்க்குறது நல்லதில்லை...ஜாதகத்தில ராகு சுக்கிரன் செவ்வாய் சேர்ந்து இருந்தா அவங்களுக்கு இப்பிடியான பிரச்சினை இருக்கும் எண்டு சொல்றாங்க… அவங்க பாக்குற பார்வையே ஒரு மாதிரி றாங்கா இருக்குமாம்… பேசுற பேச்சில எப்ப பாரு அந்த சிந்தனை தெறிக்கும்…. நித்திரையில றாங்கா சவுண்டு விடுவாங்க….எப்ப பாரு அவங்களை சுத்தி காமாலோகமே இயங்குற மாதிரி இருக்குமாம்…(சத்தியமா எனக்குத் தெரியாது…. அப்பிடி இருக்கிறவங்க இருந்தா கடுப்பாகி என்னை ஆள்வைச்சு அடிச்சுடாதீங்க…. வீக் பாடி… தாங்காது…)
இதை விட இயல்பாவே காம உணர்ச்சி அதிகமா இருக்குறதுன்னு கூட ஒருவகை இருக்கு….உளவியலைப் பொறுத்தவரைக்கும் பாம்பைத் தான் காமத்துக்கு அடையாளமா சொல்லுறாங்க... பாம்பு நடனத்தை நிறைவேறாத இச்சைக்கு அடையாளமா சொல்லியிருக்கு.. கிரகங்களில பாம்பு எண்டு மெயினா சொல்லுறது ராகுவைத்தான்.. கரும்பாம்பு எண்டுவாங்க.. கேது செம்பாம்பு.... திருமணப் பொருத்தத்தின் போது செவ்வாய் மற்றும் ராகு தோசங்கள் கருத்தில் கொள்ளுறதுக்கு இது தான் முக்கிய காரணம்...அவை இருக்குற இடத்தைப் பொறுத்து மாட்டரில அவங்களுக்கு இருக்கிற இன்ரெஸ்ற் வித்தியாசப்படும்... இன்ரெஸ்ற் குறைஞ்சவங்களையும் கூடினவங்களையும் சேர்க்குறது நல்லதில்லை...ஜாதகத்தில ராகு சுக்கிரன் செவ்வாய் சேர்ந்து இருந்தா அவங்களுக்கு இப்பிடியான பிரச்சினை இருக்கும் எண்டு சொல்றாங்க… அவங்க பாக்குற பார்வையே ஒரு மாதிரி றாங்கா இருக்குமாம்… பேசுற பேச்சில எப்ப பாரு அந்த சிந்தனை தெறிக்கும்…. நித்திரையில றாங்கா சவுண்டு விடுவாங்க….எப்ப பாரு அவங்களை சுத்தி காமாலோகமே இயங்குற மாதிரி இருக்குமாம்…(சத்தியமா எனக்குத் தெரியாது…. அப்பிடி இருக்கிறவங்க இருந்தா கடுப்பாகி என்னை ஆள்வைச்சு அடிச்சுடாதீங்க…. வீக் பாடி… தாங்காது…)
பிரச்சினை முதல் வகையா இருந்தாலும் சரி ரெண்டாவது வகையா இருந்தாலும் சரி… ஒழுங்கா சொலூசன் எடுக்காட்டி இஃபெக்ட் ரொம்ப மோசமா இருக்கும்…
ஒண்டு அப்பிடித் தோணுறது தப்புன்னு தெரியும்… கட்டுப்படுத்த ட்றை பண்ணுறது… எண்ணங்களைக் கட்டுப்படுத்த முடியலைங்கிறது…. இந்த மாதிரி டைப் ஆக்களுக்கு எப்பவுமே ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கும்… தங்களைத் தாங்களே தப்பா நினைச்சுப்பாங்க… எங்க தப்பு பண்ணித் தொலைச்சிடுவமோ அப்பிடின்னு தினமும் பயந்து சாவாங்க…. சப்போஸ் தாங்க எதையாச்சும் நித்திரையில உளறினா தங்களைப் பற்றி மற்றவங்க என்ன நினைப்பாங்க எண்டு தூக்கமில்லாமத் தவிப்பாங்க….
ரெண்டாவது டைப் தப்புன்னு தெரியும்… கட்டுப்படுத்தாம அந்த எண்ணங்களை வளக்குறது… சும்மா நினைக்குறது தப்பா அப்பிடின்னு மனசுக்குள்ள ஒரு எண்ணம்… அதிலயும் ரெண்டு வகை… சான்ஸ் கிடைச்சா தப்பு பண்ணக்கூடியவங்க ஒரு வகை… சான்ஸ் கிடைச்சாலும் பயந்து தப்புப் பண்ணாதவங்க இன்னொரு வகை… இதில முதலாவது வகை பரவால்ல… ஆனாப் பாத்தீங்க எண்டா மனசில இப்பிடியான எண்ணங்கள் நெருப்பு மாதிரி எரியும் போது எந்த விசயத்திலயும் கான்சன்றேற் பண்ண முடியாது… அதோட அந்த விதமான எண்ணங்களை ஊக்குவிக்கும் போது அதுக்கு சப்போட் பண்ணும்படியான ஹோர்மோன்கள் சுரக்குது… பாடில சில உறுப்புக்கள் (உதாரணத்துக்கு பெண்ணோட கருப்பை) முழுமையா வளர்ச்சியடையுற கால கட்டம் இளமைப்பருவம்… இந்தப் பருவத்தில எண்ணங்கள் வேற இடத்தை ஒருக்களிக்கப் படுறதால அந்தப் பகுதிகள் முழுமையான போசணையைப் பெறமுடியாது போயிடுது… விளைவு நோயாளிக் குழந்தைகள்… இதுக்காக நோயாளிக் குழந்தைகளுக்குக் காரணம் இது மட்டுமல்ல… இதுவும் காரணம்…
அடுத்தது சான்ஸ் கிடைச்சா தப்பு பண்ணுறது… வெறி டேஞ்சரஸ் கேஸ்… ஐ.சீ.யூ பீப்பிள்… இவங்க எப்பிடியாச்சும் உடனடியா தங்களை மாத்திக்கணும்… இல்லைன்னா என்ன நடக்கும்னு தெரியும் தானே…? எங்கட கலாச்சாரம் தனிநபர் ஒழுக்கத்தை ரொம்ப மதிக்குது… கற்பு எண்டுறது பெண்ணுக்கு மட்டுமில்ல… ஆணுக்கும் தான்…
கற்பைப் பற்றிக் கதைக்கேக்கத் தான் பரசுராமரின்ர தாய் ரேணுகா தேவிட கதை ஞாபகம் வருது… கரையில் கிடந்த மணலை எடுத்து தண்ணீர் விட்டு பானையாக்கி அதுக்குள்ள தண்ணி மொண்டு சர்ப்பத்தைப் பிடிச்சுத் துணிமாதிரி சுத்தி பானையைத் தலையில வைக்குறதுக்கு சப்போட்டா அதை வைச்சு கொண்டு வருவாவாம்… அந்த மாதிரி உயர்வா இருக்கணும் எண்டு எதிர்பாக்கேலாது… இந்த உலகத்தில் எவருமே ராமரில்லை எண்டு ஒரு பாட்டு சொல்லுது… (தென் வட் எபவுட் சீத்தா? போய்யா இதுக்கு ஆன்ஸர் வெளிப்படை உண்மை… சொல்லி விளக்குமாத்துப் பூசை வாங்க நான் ரெடி இல்லை….) விசயம் இது தான்…. யாரையாச்சும் பாக்கும் போது ராங்கான எண்ணம் தோன்றுறது கூடத் தப்பில்லை…. (ஒருத்தரைப் பாக்கும் போதும் எனக்கு அப்பிடி இருக்கலைன்னா அவங்க பொய் சொல்றாங்க… அல்லது அவங்க சந்திச்ச ஆக்கள் சொற்பம்… அப்பிடின்னு அர்த்தம்…) அதுக்குப் பின்னாடி ஓடுறது தான் தப்பு….
தப்பான விசயம் எண்டு இது பூராக் கதைக்குறதால காமம் தப்பான விசயம் கிடையாது… எதுக்கு எங்க மதத்தில பிரமச்சரியம், கிருகப்பிரத்தம், வனப்பிரத்தம், சந்நியாசம் எண்டு வைச்சிருக்காங்க… எங்கட ஆக்களைப் பற்றித் தெரிஞ்சு தான்… காமம் ஆத்ம சக்தி… அதை அடக்க முடிஞ்சா கனக்க சாதிக்கலாம் எண்டு பெரியவங்க சொல்றாங்க… ஒரு எனர்ஜியை வேஸ்ற் பண்ணாட்டி அதை வேற ஒரு நல்ல விசயத்துக்குப் பாவிக்கலாம் தானே… அதே மாதிரித் தான்…
சோ இது எல்லை மீறாமத் தடுக்கணும்… என்ன பண்ணலாம்… மெடிரேட் பண்ணலாம்… நிறையப் பிரச்சினைக்குத் தீர்வு… ராமகிருஸ்ணர் சொல்லியிருக்கார்… அவரு கல்யாணம் பண்ணியும் பிரமச்சரியம் காத்தவர்… அவருக்கு ராத்திரித் திடீர்னு எண்ணம் வருமாம்… பக்கத்தில் தூங்கிட்டு இருக்குறது அவரின்ர மனைவி… கேட்டா மறுக்கவா போறா? அவர் தன் மார்பில காளி சூலத்தால குத்திட்டு நிற்குற மாதிரித் தியானிப்பாராம்… காமன் தோத்து ஓடிடுவானாம்…
காமனைத் தோற்கடிக்குறது லேசுப்பட்ட காரியமல்ல… விவேக சிந்தாமணில ஒரு பாட்டு இருக்கு… ஒரு கண்ணு பொட்டையாகி… (யோவ்… டோன்ற் மிஸ் அண்டஸ்ராண்ட்… இற் மீன்ஸ் பிளைண்டு) சொறி பிடிச்சு நாட்கணக்கா சரியான சாப்பாடு கூட இல்லாம வயிறு முதுகோட ஒட்டிப் போன ஒரு கடுவன் நாய் அவ்வளவு வேதனைக்குள்ளயும் ஓட முடியாம ஒரு கால் நொண்டிட்டு மற்றக்காலால கெந்திக் கெந்தி எங்கட ஊர்வழிய கெந்திக்கோடு விளையாடிற கணக்குக் கெந்திக்கிட்டு ஒரு பெட்டைநாய் பின்னாடி ஓடித் திரியும்னா இந்த உலகத்தில காமன் யாரை விட்டு வைப்பான்னு…. சிவபெருமானையே தவத்தில இருந்து எழுப்ப பஞ்சகணை தொடுத்தவன்…. மன்மதனைப் புகழுறது என்ர நோக்கமில்ல…. நான் சொல்ல வாறது இது தான்.. அப்பிடித் தோணுறது தப்புன்னு தெரியும்… கட்டுப்படுத்த ட்றை பண்ணுறது… எண்ணங்களைக் கட்டுப்படுத்த முடியலைங்கிறது…. இந்த மாதிரி ஆக்கள் உங்களை நீங்களே தரக்குறைவா எண்ணிக்காதீங்க..
விசுவாமித்திரரை மேனகை பின்னாடி போகவைச்ச பெரிய பொல்லாத ஒருத்தனோட தான் நீங்க போராடிட்டிருக்கீங்கன்னு நினைச்சுக்கோங்க… தப்புபண்ண சான்ஸ் கிடைச்சும் செய்யாதவங்க உண்மையிலயே சிறந்தவங்க… யாருமே 24 கரட் தங்கம் இல்லை… தப்பு பண்ணுறவனுக்கு சான்ஸ் கிடைச்சுது.. பண்ணாதவனுக்கு கிடைக்கலை… சான்ஸ் கிடைச்சுப் பண்ணாதவன் தான் நிஜக் கெட்டிக்காரன்…
விசுவாமித்திரரை மேனகை பின்னாடி போகவைச்ச பெரிய பொல்லாத ஒருத்தனோட தான் நீங்க போராடிட்டிருக்கீங்கன்னு நினைச்சுக்கோங்க… தப்புபண்ண சான்ஸ் கிடைச்சும் செய்யாதவங்க உண்மையிலயே சிறந்தவங்க… யாருமே 24 கரட் தங்கம் இல்லை… தப்பு பண்ணுறவனுக்கு சான்ஸ் கிடைச்சுது.. பண்ணாதவனுக்கு கிடைக்கலை… சான்ஸ் கிடைச்சுப் பண்ணாதவன் தான் நிஜக் கெட்டிக்காரன்…
என்னடா பொதுவாத் தொடங்கி ஆண்களை மட்டும் இழுக்குறன் எண்டுறீங்களா? பொதுவா ஆண்களுக்கு காமம் ஒரு சாபம் மாதிரி… கிரகம் கெட்டா கூடிடும்…. யாராவது மறுக்க முடியுமா?
காம உணர்ச்சியைக் கட்டாயம் அடக்கணும் எண்டு இல்லை… பொங்கி வாற காட்டாற்று வெள்ளத்தை அணைகட்டி பயன்படுத்துற மாதிரி கலை வரம்பு போட்டு நில்லாமப் பாயும் உணர்ச்சி வெள்ளத்தை நிப்பாட்டலாம்… யெஸ்… தற் இஸ் எ டைப் ஒஃப் கென்வேசன்…. எனர்ஜீ கென்வேசன்…. நான் ஆல்ரெடி சொன்ன மாதிரி காமம் ஆன்ம சக்தி… அடக்க முடியாத அளவு அது பொங்குதுன்னா உடன அதை கலைவடிவத்துக்கு கென்வேட் பண்ணினா பெரிய கலைஞன் ஆயிடலாம்… (இதனால தான் சினிமா ஆட்டிஸ்ற் அடிக்கடி மாட்டிக்கிறாங்களோ…. )… இதுக்காக கலைஞர்களை எல்லாம் ராங்காவே பாக்காதீங்கப்பா… ஐ திங்.. இட் இஸ் இனஃப்…. கே….. சீ யூ இன் எனத போஸ்ற்…. (இன்னும் ஒண்டா…. அடங்கொப்பா…………. ஜஸ்ற் ஜோக்கிங்யா… இனிமே இதைப் பத்திக் கதைக்கவே மாட்டன்……..)
No comments:
Post a Comment