Tuesday, August 5, 2014
பதிவுகளுக்கான பதிவு
ஒரு பதிவின் வெற்றி அதை வாசிப்பவர்களிலேயே தங்கியிருக்கும்... ப்ளாக் எழுதுவதால் நான் புத்தகத்திற்கு ஆக்கம் கொடுக்க முடியும் என்றில்லை... காரணம்.. ப்ளாக் வாசிப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட டொமெயினில் இருப்பவர்கள்... புத்தகம் வாசிப்பவர்கள் பலதரப்பட்டவர்கள்...எல்லாருக்கும் எல்லாம் புரியாது.. வாசிப்பவனுக்கு பிடித்திருந்தால் தான் பதிவு வெற்றி பெறும்... இல்லையென்றால் அது தரமானதானால் கூட பயனற்றது... அதற்காக வாசகர் மையப் படுத்தி எழுத முடியாது...Jeyakumaran அண்ணா சொன்னது போல ஒரு விசயத்தின் கருவானது முதலில் மனதை அரிக்க வேண்டும்.. அது கிழமைக்கணக்கா மனதில் கிடந்து முழு உருவம் பெற்று பிரசவிக்கப்பட வேண்டும்.... அது தான் உயிர் உள்ள பதிவு... ஏனையவை சதைப் பிண்டங்களாகும்... எழுதுவது வாசகர்களுக்காகத்தானே? எழுதுவது உயிர் உள்ளதாக எழுதணும்... பிரசுரிக்கும் இடத்தை அதற்கு ஏற்றாற் போல் தெரிவு செய்யணும்... இல்லையென்றால் உயிரோடு பிறந்தாலும் யாருக்கும் பயனற்ற வாழ்க்கை போல அது வீணாகி விடும்....
Subscribe to:
Posts (Atom)