ஒரு தலைக் காதல் பற்றி ஒரு நண்பர் சொன்னது இது. அந்நண்பரின் அனுமதியுடன் இதனை உங்களுக்குக் கூறுகிறேன்.Bracket கருத்துக்கள் என்னுடையவை. ஸோ ”நான் சொன்னதா சொல்லிக் கொண்டு நீ ஏதோ உளறி இருக்கியே”ன்னு கோவிக்க வேண்டாம்னு அந்த நண்பரைக் கேட்டுக் கொள்கிறேன்.”நிலவை வானத்தில் பார்க்கிறோம். அவ்வாறு பார்த்துக் கொண்டே நாம் நடந்து சென்றால் நிலா நம் கூடவே நடந்து வாற மாதிரி ஒரு தோற்றப்பாடு ஏற்படும். ஆனா அப்பிடித் தான் மற்றவங்க கூடவும் நிலா போய்க்கொண்டிருக்கு என்று ஒரு குழந்தைக்குத் தெரியாது. அது மாதிரித் தான் ஒருதலைக் காதலும்.......நாம அவங்களைப் பார்த்துக் கொண்டேயிருப்பம். அவங்க தற்செயலாத் திரும்பும்போது நம்மைப் பார்க்க நேரிட்டாலும் என்னவோ நம்மைப் பார்க்கத் திரும்பியது போல் தான் இருக்கும். அவங்க சிரிக்கும்போது என்னவோ நம்மைப் பார்த்து சிரிப்பது போல்தான் இருக்கும்.(காவலனில் வடிவேலுக்கு அப்பால் இருந்த பெண்ணைப் பார்த்து சிரிக்க வடிவேலுக்குத் தன்னைப் பார்த்து சிரித்தது போல் தோன்றுமே.....கிட்டத்தட்ட அப்பிடித்தான். ). காதல் வந்தால் ஒரு சில பாடல்களைக் கேட்கும் போது ஏற்படும் கிறக்கம் சொல்லில் அடங்காது. அது ஒரு வகை போதை....தனி சுகம்.....சிறகு கட்டிப் பறப்பது போன்ற உணர்வு......மனதுக்குள் மழை கொட்டுவது போல் இருக்கும். காதல் வந்தால் எந்த மடையனுக்கும் கூட கவிதை வரும்......(பேப்பரும் பேனாவும் வச்சுக்கொண்டு கவிதைக்கு எதுகை மோனை தேடி முழி பிதுங்குபவர்கள் கவனத்திற்கு....). (காதலிப்பவன் எழுதும் கவிதைக்கும் காதலிக்காதவன் எழுதும் கவிதைக்கும் ஒரு வித்தியாசம் தான்.....கவிதையில் உயிரோட்டம் இருக்கும் என்றால் அது முதலாம் வகை தான்...அல்லாமல் வெறும் அலங்கார வார்த்தைகளுடன், நல்லா இருக்கு....ஆனா ஏதோ ஒண்டு குறையுதே.....என்பது போல் இருந்தால்(ஃபோ(ர்) எக்ஸாம்பிள் கவிதை என்ற பெயரில் நான் எழுதுவது) அது இரண்டாவது ரகம்தான்....ஸோ ஒருவரின் கவிதையே காட்டிக் கொடுத்திடும் அவங்க காதலிக்கிறாங்களா இல்லையான்னு...எவருமே காதலித்துக் கொண்டு நான் யாரையும் காதலிக்கலை....அப்பிடின்னு காதில (B)பொக்கே எல்லாம் வைக்க முடியாது. ஏன்னா காதில வச்சா (B)பொக்கே விழுந்திடும்.....உன் மொக்கை போதும்...மேட்டருக்கு வா என்கிறீர்களா? ஓக்கே...தங்கள் சித்தம் என் பாக்கியம்). வாழ்க்கையில் திடீர்னு ரொம்ப சந்தோசமாக இருக்கணும்னு தோன்றினா காதலியுங்க...காதல் கை நழுவினா கிடைத்த சந்தோசத்திலும் அதிக கவலை ஏற்படும்.(காதல் போதை மருந்தாக்கும். அது தானே திடீர் உற்சாகம் தரும். பிறகு ஆப்பு வைக்கும்......) ஆனா....காதலிக்கிறவங்க ரொம்ப சந்தோசமா இருப்பாங்க. (ஹப்பி வேஸஸ் ஒருவரின் லைஃப் டேய்ஸ் கிராஃப் கீறினா அதில் திடீர் அதிகரிப்பு ஒண்டு இருந்தா அது லவ்வால வந்தது ஆக இருக்கும்.....அடடா....கோபப்பட்டாலும் நீங்க அழகு தான்.....கூல்)....”.......இவ்வளவு இருக்கா லவ்வில? எனக்குத் தெரியாதுங்கோ....உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க.....பி.கு:தயவு செய்து என்னோட மொக்கைக்காக இல்லாட்டிக்கும் நண்பரோட கருத்துக்காகவாவது இதை லைக் பண்ணிக் கொமன்ற் பண்ணுங்க...ப்ளீஸ்....இதுக்கு நீங்க கொடுக்கிற ஆதரவில் இருந்து தான் இந்த ரொபிக்கில் எழுதுவதை தொடர்வதா இல்லையான்னு நான் தீர்மானிக்கலாம்...எங்கிட்டை இன்னும் வேற நண்பர்கள் சொன்னதும் இருக்கு.....ஆதரவு கொடுப்பீங்க தானே! ஏன்னா லவ் என்பது நடைமுறைக்கு எப்படியோ எனக்குத் தெரியாது...கதைக்குறதுக்கும் எழுதுவதற்கும் இன்றெஸ்ரிங் சப்ஜெக்ட்டாமே! உண்மையா?
No comments:
Post a Comment